கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் அதிரடி சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்திற்குச் சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகளில்  அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். மேலும், கரூரில் பிரபலமான கொங்கு மெஸ் மற்றும் சக்தி மெஸ் ஆகிய இடங்களிலும் இந்தச் சோதனையானது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வருமான வரி ஏய்ப்பு மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பான புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

சோதனை நடைபெற்று வரும் இடங்களுக்கு வெளியே ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிகளுக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வருமான வரித்துறை சோதனையால் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அந்தந்த பகுதிகளில் திரண்டு வருவதால் அந்த இடங்கள் பதற்றமாகவே காணப்படுகின்றன. ஏற்கனவே அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையின் விசாரணைகளை எதிர்கொண்டு வரும் செந்தில் பாலாஜிக்கு, மீண்டும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் இந்தச் சோதனை ஒரு புதிய நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version