Close Menu
    What's Hot

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»இயக்குநர் பாக்யராஜின் நெஞ்சை உருக்கும் இறுதி கடிதம்!
    தமிழ்நாடு

    இயக்குநர் பாக்யராஜின் நெஞ்சை உருக்கும் இறுதி கடிதம்!

    Editor web2By Editor web2June 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Bhagyaraj
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் திரையுலகின் ‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்படும் மூத்த இயக்குநர் கே. பாக்யராஜ்  கடந்த வாரம் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரை உலகையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

    இந்த சோக வடு மாறுவதற்குள், இன்று அவரது அலுவலக எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் “From the OFFICE of Director #KBhagyaraj sir” என்ற அறிவிப்புடன் பகிரப்பட்டுள்ள இரண்டு கடிதப் பக்கங்கள்  ஒட்டுமொத்த ரசிகர்களையும் நெகிழச் செய்து, கண்கலங்க வைத்துள்ளது.

    தனது வழக்கமான பாணியில் நையாண்டியும், தத்துவமும் கலந்து, தான் மறைந்த பிறகும் ரசிகர்களுக்காக அவர் எழுதி வைத்துள்ள உருக்கமான இறுதிக் கடிதம் இதோ…

    “சந்தோஷத்தில பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பாக்குறது”

    நான் எழுதுன இந்த வாக்கியத்தை, என் வாழ்க்கையோட பெரிய சந்தோஷமா மாத்துன என் கோடான கோடி ரசிகர்களையும், தங்கமான தாய்மார்களையும்,திரையுலக நண்பர்களையும் என் கண்ணுக்குக் கண்ணாகவே மதிக்கிறேன். அதனால்தான் என் கண்களை மட்டும் உங்கள் அன்பான பார்வைக்கு விட்டு விட்டு வந்திருக்கிறேன்.பார்த்துக் கொள்ளுங்கள் பத்திரமாக! அப்படியே என் கண்மணி சாந்தனுவின் வெற்றிக்கு உங்கள் கைதட்டல் ஆசிர்வாதமாக இருக்க விரும்புகிறேன்.

    என் ஸ்தானத்தில் இனி ரசிகர்களாகிய நீங்கள் இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். நானும் என் விழி வழி உங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். “இருக்கிறேன்” -பார்த்தீர்களா? இன்னும் ….. கண்தானம் செய்பவர்கள் இல்லாத போதும் இருப்பார்கள் -பார்வையாய்!

    Bhagyaraj letter

    வரும் போதே expiry date குறிக்கப்படாத உடல் இது. என்றாவது ஒரு நாள் அது தீக்குள்ளோ மண்ணுக்குள்ளோ கிரக பிரவேசம் செய்துவிடும்.

    எஞ்சுவது கொஞ்சமாய் அஸ்தியும், மிதமிஞ்சிய அன்பே ஆஸ்தியாயும். என் இறுதி யாத்திரையில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பில், கண்ணீரில் , கருணையில் என் ஆத்மா சாந்தியடைந்து விட்டது.

    Thanks!

    நன்றி சொல்வது மனித இயல்பு !

    நான்தான் அதையும் தாண்டி வந்துவிட்டேனே.

    இனி நான்….

    நல்ல சினிமாவில்,

    நல்ல திரைக்கதையில்,

    நல்ல வசனத்தில்,

    நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் இருப்பேன்!

    அன்புடன்

    உங்கள்

    K.பாக்யராஜ்

    BhagyarajLetter EyeDonation KBhagyaraj Kollywood
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ஹார்ட் பீட்’ தொடரிலிருந்து ரீனா விலகல்?  ரசிகர்கள் அதிர்ச்சி!
    Next Article மொஜ்தபா காமேனிக்கு குறிவைப்பு; நாளை கூட போர் தொடங்கலாம்!. ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை! 
    Editor web2
    • Website

    Related Posts

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    July 19, 2026

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    July 19, 2026

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சுகாதார சீர்கேட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை… நடவடிக்கை எடுக்கப்படுமா?

    மவுனம் காக்கும் மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம்…. கேள்வி எழுப்பும் நீலம் பண்பாட்டு மையம்

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் சேரன்.

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.