மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை பாதுகாக்கக் கோரி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ உரையாற்றினர்.
அதில், இந்தப் போராட்டம் என்பது கோடிக்கணக்கான மக்களை நடுத்தெருவில் நிறுத்தி வேடிக்கை பார்க்கின்ற பாஜக அரசைக் கண்டித்து, இந்தியா முழுவதும் நடிபெறுகின்ற ஒரு மாபெரும் போராட்டம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வழைகாட்டுதல்படி இந்தியா முழுவதும், தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் நடந்து கொண்டிருகிறது.
மகாத்மா காந்தி பெயரை மாற்ற வேண்டும் என்பதே மோடியின் சித்தாந்தம். மகாத்மா பெயரை இந்திய தேசத்தில் இருந்து அகற்றவேண்டும் என்பதும் அவர்களின் சித்தாந்தம்தான். ஆனால், ஒரு மோடி அல்ல, ஆயிரம் மோடி வந்தாலும் காந்தியின் பெயரை இந்திய மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது.
இந்த உலகத்தில் எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்திருக்கின்றன. விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றைப் படித்திருக்கின்றன. உலகில் காணமுடியாத ஒரு மாமனிதர் தேசப்பிதா மகாத்மா காந்தி அடிகள்.
எவ்வித ஆயுதமுமின்றி அகிம்சை வழியில் போராடி, ஒரு தேசத்துக்கு விடுதலைப் பெற்றுத் தந்த உலகின் ஒரே தலைவர் மகாத்மா காந்தியடிகள்தான்.
உலகில் எவ்வளவோ நாடுகளிளின் விடுதலைப் போராட்ட வீரர்களை, தியாகிகளை பார்த்துக் கொண்டிருகின்றாம். அவர்கள், அந்த தேசத்தின் தலைவர்களாக, அதிபராக, பிரதமராக பதவி ஏற்பார்கள்.
அமெரிக்காவில், கியுபாவில், தென் ஆப்பிரிக்காவில், சிங்கப்பூரில் அந்தந்த நாட்டு விடுதலைக்காகப் போராடியவர்கள் அந்த நாட்டின் அதிபர்களாக அரியணை ஏறியிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும்தான் அஹிம்சை வழியில் போராடி வெற்றி பெற்று, தேசத்தை விடுதலை பெறச் செய்த மகாத்மா காந்தியடிகள், நான் பிரதமராக மாட்டேன், எனது அரசியல் வாரிசு ஜஹவர்களால் நேரு எனக் கூறி அவரைப் பிரதமராக்கினார். இது உலகத்துக்கு மிகப்பெரிய செய்தி நாம் மகாத்மாவின் தியாகத்தை, அர்ப்பணிப்பையும் என்றும் மறவாத காங்கிரஸ்காரர்கள்.
காந்தி நடுநிலையாகச் செயல்பட்டதால், இந்த தேசத்தில் பிறப்பவன் ஒவ்வொருவரும், இந்த தேசத்தின் பிரஜை, இந்தியன் சிட்டிசன் எனச் சொன்னார்.
அவர் இஸ்லாமியர் ஆகட்டும், கிறிஸ்தவர் ஆகட்டும், பார்சி ஆகட்டும், பவுத்தர் ஆகட்டும், சீக்கியர்களாகட்டும், தலித்துகள் ஆகட்டும், மலைவாழ் மக்கள் ஆகட்டும், இந்த தேசத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தேசத்தின் முழு உரிமையும் இருக்கிறது. இதுதான் மகாத்மாவின் சித்தாந்தம்.
ஆனால், ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தம் என்பது, இந்த நாடு அனைவருக்குமானது கிடையாது. ஒரு சாரருக்கு மட்டும்தான், ஒரு பகுதியில் இருப்பவருக்குத்தான், , ஒரு மதத்தைச் சேர்ந்தவருக்கு மட்டும்தான். இதுதான் இங்கு முரண்பாடு.
420 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் ஒரு முஸ்லிமுக்கோ, கிறிஸ்தவருக்கோ சீட்டு கொடுக்காமல் வெற்றி பெறுவோம் என கொக்கரித்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.
காங்கிரஸ் பேரியக்கம்,, இந்த தேசத்தில் உள்ள எல்லோரையும் நேசிக்க வேண்டும், எல்லோரையும் பாதுகாக்க வேண்டும் எனச் சொல்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். பிஜேபி சித்தாந்தம், எல்லோரையும் நேசிக்கக்கூடாது, இங்கு ஒரு சாரர்தான் ஆளவேண்டும். ஒரு சாரார்தான் வாழ வேண்டும். பிறர் எல்லாம் வேறு நாடுகளுக்குச் செல்லவேண்டும்.
ராகுல்காந்தி அவர்கள் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார், இந்த தேசத்தின் எல்லா மக்களுக்கும் போராடுகிறார். இப்படி மோடியால் போராட முடியுமா? இந்த தேசம் எல்லோருக்குமானது என மோடியால் சொல்ல முடியுமா?
ஆனால் ஒவ்வொரு முறையும் ஆர்.எஸ்.எஸ். மாநாட்டிலே ஒரு பேச்சு, பீகாரில், அஸ்ஸாமில் ஒரு பேச்சு பேசுகிறார்கள். ஒரு மனிதனுக்கு எத்தனை வாய் இருக்கும்? பல வாய்கள் கொண்ட பல கருத்துக்களைக் கொண்ட பல பேச்சுக்களைக் கொண்ட ஒரே மனிதர் தேசத்தில் இருக்கிறார் என்றால் அவர் நரேந்திரமோடி மட்டும்தான் என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறாகள்.
மகாத்மாவை ஏற்கனவே சுட்டு படுகொலை செய்த பாதகர்கள் அவரது பெயரை குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பெயர் இந்த தேசத்தில் எங்கும் இருக்கக்கூடாது என செயல்படுகிறார்கள்.
ஆனால், மகாத்கா காந்தியின் பெயரைத் தாங்கிய மாபெரும் திட்டத்தை அன்னை சோனியா வழிகாட்டுதலில், மன்மோகன் சிங் ஆட்சியின்போது 2005-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் ஒரு பகுதியினர் எந்த வருமானமுமின்றி ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தப்போகிறேன் எனச் சொன்னதும், பொது உடைமைக் கட்சி வரவேற்றது. இந்தத் திட்டத்தினை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.
இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபோது பல்வேறு சாவல்களை சந்தித்தது. ஆனால் அதை தனது நேரடிப் பார்வையில் சோனியா எடுத்துக் கொண்டு, நடைமுறைப்படுத்தி, கண்காணித்து உலகநாடுகளே பாராட்டும்படி வெற்றிகரமாக்கினார். ஐநா சபை சான்றிதழ் கொடுத்து புகாழாரம் செய்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றின்போது, இந்தியாவில் பசியிலும் பட்டினியிலும் லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள் என பத்திரிகைகள் எழுதிய நிலையில், மக்களைக் காப்பாற்றியது மகாத்மா காந்தி பெயரைத் தாங்கியிருக்கின்ற 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்தான். இப்படி உலகப்புகழ் பெற்று, மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கின்ற திட்டத்தை, சீரழிக வேண்டும் என பாஜகவும் மோடியும் நினைக்கிறார்கள். இதை தமிழ்நாடு மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.
காந்தி பெயரை நீக்குவோம், மாநிலங்கள் 40 விழுக்காடு நிதி ஒதுக்கவேண்டும், ஒன்றிய அரசு 60 விழுக்காடு நிதி ஒதுக்குவோம் என ஜனநாயகத்துக்கு எதிராக இப்படி திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்துவேன் என துடித்துக் கொண்டிருக்கும் மோடி அரசைக் கண்டித்துதான், இந்த தேசம் முழுவதும் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும்.
இப்போது உண்ணாவிரதத்தை தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். போராட்டத்தின் நிறைவாக அகில இந்திய காங்கிரஸ் அனுமதியோடு, தமிழ்நாடு காங்கிரசைச் சேர்ந்த 10ஆயிரம் பேர் டெல்லி சென்று மோடியின் வீட்டை முற்றுகையிடுவோம் என போராட்ட அறிவிப்பையும் செல்வப் பெருந்தகை வெளியிட்டார்.
