வரும் ஜன.20ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள்,ஊராட்சி செயலாளர்களை தொடர்ந்து தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க சத்துணவு ஊழியர்களும் தயாராகி வருகின்றனர். கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தி​யத்தை ரூ.6,750 ஆக உயர்த்தி வழங்​கு​வது, பணிக்​கொடை ரூ.5 லட்​சம், காலி​யாக​வுள்ள 60 ஆயிரம் சத்​துணவு, அங்​கன்​வாடி பணி​யாளர் இடங்​களை நிரப்​புவது, அரசு ஊழியர்​களைப் போன்று 12 மாத மகப்​பேறு விடுப்பு உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 8ம் தேதி சத்துணவு ஊழியர்கள் அடையாள போராட்டத்தை நடத்தினர். இந்தநிலையில் பொங்கல் விடுமுறை முடிந்தவுடனேயே ஜன.20ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், மாவட்ட செயலாளர் ஜெயபாக்கியம் பேசுகையில், வருகிற ஜனவரி 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் சத்துணவு மையங்களை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version