2025ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது  முதுமுனைவர் மு.பெ. சத்தியவேலுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, மகாகவி பாரதியார் விருது – கவிஞர் நெல்லை ஜெயந்தா.

தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள் மொழி.

அண்ணல் அம்பேத்கர் விருது- விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன்,

பெருந்தலைவர் காமராசர் விருது – எஸ்.எம்.இதயதுல்லா,

தமிழ் தென்றல் திரு.வி.க.விருது – முன்னாள் தலைமை செயலாளர் வெ. இறையன்பு

பாவேந்தர் பாரதிதாசன் விருது – கவிஞர் யுகபாரதிக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.சப. விசுவநாதம் விருது – முனைவர் சு.செல்லபாவு

முத்தமிழறிஞர் கலைஞர் விருது – விடுதலை விரும்பி.

விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் ரொக்கமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்பட உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version