புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக தேர்தலில் களம் கண்டு வெற்றி பெற்று தற்போது தமிழக அமைச்சரவை இடம் பெற்றுள்ள முகமது பர்வேஸ் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் இன்று கலந்து கொண்டார்.

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு பணியை மேற்கொண்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளிடமும், மற்ற நோயாளிகளிடமும் மருத்துவர்கள் வழங்கும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

லும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்களை சந்தித்த அமைச்சர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு மற்றும் பாதுகாப்பு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார்.

அமைச்சரின் ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் கலைவாணி, உள்ளிருப்பு மருத்துவர்  Dr இந்திராணி உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த மருத்துவர்கள் உடன் சென்றனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version