தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில், அக்கட்சித் தலைவருக்குப் பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்தவகையில்,  ரவி மோகன் (ஜெயம் ரவி), தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்யின் வெற்றியைப் பாராட்டி மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அண்ணா, இது வெறும் வெற்றியல்ல; மக்களின் நம்பிக்கையால் முத்திரையிடப்பட்ட ஒரு புரட்சி” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “நாங்கள் எப்போதும் உங்கள் பக்கமே இருக்கிறோம் அண்ணா; எதற்கும் தயங்காமல் முன்னேறிச் செல்லுங்கள், எதிர்காலம் இப்போதே உங்கள் பக்கம் சாய்ந்துவிட்டது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். விஜய்யின் அரசியல் பயணத்திற்குத் ஆரம்பம் முதலே ஆதரவு தெரிவித்து வந்த ரவி மோகன், இந்த வெற்றிக் கணத்திலும் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்கு தொலைபேசியில் நடிகர் இயக்குனர் தியாகராஜன், நடிகர் பிரஷாந்த் இருவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல், போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள். நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் என்று நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், நடிகர் விக்ரம் தெரிவித்த வாழ்த்து குறிப்பில், வாழ்த்துக்கள் நண்பா, இன்று நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில், விஜய் அண்ணனுக்கு இந்த மாபெரும் வெற்றிக்காக என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். மக்கள் சேவையில் மேலும் உயர்ந்து, எண்ணற்ற சாதனைகள் படைக்க அண்ணனுக்கும் அவரது முழு அணிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.  https://x.com/i/status/2051252735203569986

பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் அன்பான வாழ்த்துகள் விஜய் அண்ணா என்று நடிகர் விக்ரம் பிரபுவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். https://x.com/i/status/2051252552214380650

நடிகர் அருண் விஜய், மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் …தனியே நின்று களத்தில் வெற்றி பெற்ற தவெகவினருக்கு எனது வாழ்த்துக்கள்.. முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது மக்களின் வெற்றி!!! என்று பதிவிட்டுள்ளார். https://x.com/i/status/2051251544318955711

வரலாறு படைத்துவிட்டாய் நண்பா” என விஜய்யின் அரசியல் வருகையையும், முதல் தேர்தலிலேயே அவர் படைத்த சாதனையும் நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டியுள்ளார். எப்போதும் போல தனது ‘நண்பனுக்காக’ பிரார்த்தனை செய்வதாகவும், அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். https://x.com/i/status/2051247872079704321

அர்ச்சனா கல்பாத்தி தனது பதிவில் வார்த்தைகளே தேவையில்லை என் தலைவா (G.O.A.T)… இன்று என் இதயம் நிறைந்துவிட்டது! @actorvijay அண்ணா!” என்று பதிவிட்டுள்ளர். https://x.com/i/status/2051245150383276444

நம் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க அசுர வெற்றிக்கு வாழ்த்துகள் என நடிகை ரம்யா குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version