தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றி கழகம்  நிகழ்த்தி வரும் அதிரடி மாற்றங்களை முன்னிட்டு, நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு விரல் புரட்சி.. விசிலைப் போடு..!” எனத் தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய அவர், நடிகர் விஜய்க்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள்; பல தசாப்தங்களாகப் பலரும் முயற்சி செய்ததை இன்று நீங்கள் சாதித்துக் காட்டியுள்ளீர்கள்” என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

https://x.com/i/status/2051209183018832214

மேலும், “மக்கள் நினைத்தால் அதிகாரம் அவர்கள் கைக்கே வரும் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். இனி வரும் காலங்களில் தமிழக மக்களின் வாழ்வில் ஏற்படப்போகும் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் காண ஆவலோடு காத்திருக்கிறேன்” என வரலட்சுமி பதிவிட்டுள்ளார். #TVK என்ற ஹேஷ்டேக்குடன் அவர் பகிர்ந்துள்ள இந்த வாழ்த்துப் பதிவு, சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version