Close Menu
    What's Hot

    நீலகிரியில் கடும் குளிர்..!! நடுங்கும் மக்கள்..!! ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!!

    பணமின்றி ஆன்லைன் ஷாப்பிங் செய்ய புதிய வசதி.. Flipkart Pay Later இந்தியாவில் அறிமுகம்!

    24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை.. அதிகாரப்பூர்வ லோகோ, மைதானங்கள் வெளியீடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும்!. முதல்வருக்கு திருமா வலியுறுத்தல்!
    தமிழ்நாடு

    திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும்!. முதல்வருக்கு திருமா வலியுறுத்தல்!

    Editor web3By Editor web3July 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 thiruma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட்’ தேர்வு வேண்டாமென்பதுதான் தவெக அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலு சேர்க்கக்கூடிய திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பது வியப்பளிக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

    ‘நீட்’ தேர்வையும், முன்னேறிய சமூகத்தினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டையும் முழுமையாக இரத்து செய்ய வேண்டுமென 30-07-2026 முதல் 02-08-2026 வரை இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர் அணி, மற்றும் மகளிர் பாசறை ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர்.

    உரிய முறைப்படி முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தும் அதற்குக் காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையைப் பறிக்கும் சனநாயக விரோத நடவடிக்கை ஆகும். ‘நீட்’ தேர்வு வேண்டாமென்பதுதான் தவெக அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலு சேர்க்கக்கூடிய திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பது வியப்பளிக்கிறது.

    திராவிடர் கழகத்தின் இந்தப் பரப்புரைக்கு அனுமதி வழங்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    Campaign Chief Minister cm vijay Dravidar Kazhagam NEET thiruma thirumavalavan tvk vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவில் புதிய சாதனை படைத்த “ஸ்பைடர் மேன்”!. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
    Next Article காவிரி ஆற்றில் மணல் கடத்த ரகசிய பாலம்!. அதிரடியாக இடித்து தள்ளிய போலீசார்!
    Editor web3
    • Website

    Related Posts

    நீலகிரியில் கடும் குளிர்..!! நடுங்கும் மக்கள்..!! ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!!

    July 31, 2026

    பணமின்றி ஆன்லைன் ஷாப்பிங் செய்ய புதிய வசதி.. Flipkart Pay Later இந்தியாவில் அறிமுகம்!

    July 31, 2026

    24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை.. அதிகாரப்பூர்வ லோகோ, மைதானங்கள் வெளியீடு!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீலகிரியில் கடும் குளிர்..!! நடுங்கும் மக்கள்..!! ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!!

    பணமின்றி ஆன்லைன் ஷாப்பிங் செய்ய புதிய வசதி.. Flipkart Pay Later இந்தியாவில் அறிமுகம்!

    24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை.. அதிகாரப்பூர்வ லோகோ, மைதானங்கள் வெளியீடு!

    முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு!. திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு திங்கட்கிழமை விசாரணை!

    காவிரி, மேகதாது அணை விவகாரம்:அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.