தமிழ்நாட்டில் அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 7 ஆம் தேதி அன்புமணி தரப்பு பாமக இணைந்த நிலையில், அன்றைய தினமே டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் தமிழகம் வரும் வரவேற்பு அழைப்பிதழிலும் டிடிவி தினகரனு புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
இருப்பினும், வரும் 23 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதற்குள், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை இணைத்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்யப்படும் என்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் அறிவித்திருந்தார். இந்தநிலையில், 2 நாள் பயணமாக இன்று அவர் சென்னை வருகிறார். என் டி ஏ கூட்டணி கட்சிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ள அவர், இன்றே அதிமுகவுடனான, தொகுதி பங்கீட்டை இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், பாஜகவுக்கு 50 தொகுதிகள் வழங்கவேண்டும் என்று அதிமுகவிடம் கேட்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. மார்ச் மாதத்திலேயே தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version