தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் ஆரம்பக்கட்ட நிலவரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முதற்கட்டமாக எண்ணப்பட்டு வரும் தபால் வாக்குகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் வேட்பாளருமான விஜய் முன்னிலை வகிக்கிறார். தற்போது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் விஜய் 75 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் 25 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் பின்தங்கியுள்ளார்.

அரசியல் களத்தில் முதல்முறையாகத் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் இந்த ஆரம்பக்கட்ட முன்னிலை, தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் வடசென்னையின் ஒரு பகுதியான பெரம்பூரில், ஆளும் கட்சி வேட்பாளரை விட விஜய் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பது அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இன்னும் சில நேரங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) எண்ணப்படும்போது, இந்த முன்னிலை நீடிக்குமா அல்லது கள நிலவரம் மாறுமா என்பது தெளிவாகத் தெரிந்துவிடும்.

இதேபோல், சேப்பாக்கத்தில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 21 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுகவின் ஆதி ராஜாராம் 7 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் பின் தங்கியுள்ளார்.  துறைமுகம், ராயபுரம்,ஆர்.கே,நகர்,  தொகுதியில் 19 வாக்குகள் பெற்று திமுக முன்னிலை வகிக்கிறது.

இதேபோல், தபால் வாக்கு எண்ணிக்கையில் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கிறார். சேலம் வடக்கு தொகுதியில் திமுக முன்னிலையில் உள்ளது

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version