Close Menu
    What's Hot

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»காயமடைந்தவருக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்!. ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிர்ச்சி!
    தமிழ்நாடு

    காயமடைந்தவருக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்!. ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிர்ச்சி!

    Editor web3By Editor web3May 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thirupathur hospital issue
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பத்தூர் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் இல்லாத காரணத்தால் தூய்மைப் பணியாளர் ஒருவர் நோயாளிக்குச் சிகிச்சை அளித்த அவலம் அரங்கேறியுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு குனிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நேற்று தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கசிந்துள்ளது.

    காயத்திற்கு மருந்திட்டு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக அந்த முதியவர் குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அந்த நேரத்தில் அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்களோ அல்லது செவிலியர்களோ இல்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த முதியவருக்கு, அங்கிருந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். முதியவரின் நெற்றியில் இருந்த காயத்தை துடைத்து, அவரே மருந்திட்டு கட்டுப் போட்டுள்ளார்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கும் இந்த அதிர்ச்சி காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாயத்துக்கு மருந்திடும் தூய்மைப் பணியாளர் ; மோசமான நிலையில் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
    Next Article ஜூன் 1 முதல் தாம்பரம் – செங்கல்பட்டு மின்சார ரயில் நேரங்கள் மாற்றம்!
    Editor web3
    • Website

    Related Posts

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    May 31, 2026

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    May 31, 2026

    குர்பானி தடை உத்தரவு விவகாரம்: தமிழக அரசு தலையிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    குர்பானி தடை உத்தரவு விவகாரம்: தமிழக அரசு தலையிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    May 31, 2026

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.