தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயில், சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.

ரயிலில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றினர். 30 நிமிடங்களுக்கும் மேலாக ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

மேலும், இந்த கோளாறு காரணமாக அதே வழித்தடத்தில் இயக்கப்படும் பிற புறநகர் ரயில்களும் பல்வேறு நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் புறநகர் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதுடன், அலுவலக நேர பயணிகளும் கடும் அவதியடைந்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version