தமிழ்நாட்டின் பரபரப்பான பெருநகரமான சென்னையில், ஏராளமான மால்கள் உள்ளன. இந்தநிலையில், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வடபழனி ஃபோரம் விஜயா மாலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

இங்கு உள்நாட்டு பிராண்டட் கடைகள் மற்றும் சர்வதேச பிராண்டட் கடைகள் உள்ளன. இங்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும், உணவகங்களும் உள்ளன. இதனால், மக்களின் கூட்டம் எப்போதும் அதிகளவில் இருக்கும். இந்தநிலையில், மாலின் முதல் தளத்தில் இருக்கக்கூடிய மெக்டொனால்ட்ஸ் பீட்சா கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக மால் முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது. பாதுகாவலர்கள் உதவியுடன் பொதுமக்களும் ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கோயம்பேடு, ஜே.ஜே.நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், வடபழனி ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version