சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரச்சார பணிகளை மேற்கொள்ள தவெகவில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து விஜய் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய் தலைமையிலான தவெக கட்சி தங்களுடைய அரசியல் வேலைகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. கரூர் துயரச் சம்பவத்திற்கு பிறகு மக்களை நேரில் சென்று பொதுக் கூட்டம் நடத்தி சந்திக்காமல் இருந்த விஜய் டிசம்பர் 18 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தி மக்களை சந்தித்தார்.

ஈரோட்டை தொடர்ந்து விஜய் அடுத்ததாக டிசம்பர் 28 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நடத்த விருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன் ஒருப்பகுதியாக, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் விஜய்யும் பலகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இப்படியான சுழலில் சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரச்சார பணிகளை மேற்கொள்ள தவெகவில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து விஜய் அறிவித்துள்ளார்.

புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான அந்த குழுவில், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பார்த்திபன், ராஜ்குமார், விஜய் தாமு, செல்வம், பிச்சை ரத்தினம் கரிகாலன், செரவு மைதின், கேத்ரின் பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, 234 தொகுதிகளிலும் பிரச்சார கூட்டங்களை திட்டமிடவுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version