சாமானிய மக்களைப் போன்று அரசியல் தலைவர்களும் காலை முதலே தேர்தல் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், காரைக்குடி வாக்குச்சாவடியில் முதல் ஆளாக ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் ஜனநாயகக் கடமையாற்றினர். திருத்துறைப்பூண்டியில் CPI முத்தரசன் தனது வாக்கினை செலுத்தினார். அதேபோல், திருச்சியில் வரிசையில் நின்று அமைச்சர் KN நேரு உள்ளிட்டோர் ஓட்டுப் போட்டனர்.
இதேபோல் ஸ்ரீபெரம்புதூர் தொகுதியில் தனது வாக்கினை குடும்பத்துடன் பதிவு செய்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை.
சென்னை மதுரவாயல் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
நாமக்கல் மாவட்டம் கோவிந்தம் பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய குமாரபாளையம் சட்டமன்ற வேட்பாளர் ஆன தங்கமணி வாக்கினை செலுத்தினார்..
சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது தொகுதியில் வாக்கினை செலுத்தினார். சென்னை ஓட்டேரியில் உள்ள வாக்கு மையத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு குடும்பத்துடன் வாக்களித்தார். வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
