சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சமீப காலமாக விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வந்தது.

இந்நிலையில், நேற்று, தங்கம் விலை பவுனுக்கு காலையில் ரூ.4,800 குறைந்தது, மாலையில் மேலும் ரூ.2,800 குறைந்து, மொத்தமாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ.7,600 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,26,800 க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த மாதத்தின் கடைசி நாளான இன்று (ஜன.31) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு மேலும் ரூ.7600 சரிந்துள்ளது. அதன்படி, இன்று கிராமுக்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900-க்கும், பவுனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு பவுன் 1,19.200-க்கும் விற்பனையாகிறது.
இதேபோல், நேற்றைய தினம் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 குறைந்தது. இதனால் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.405க்கும், ஒரு கிலோவின் விலை ரூ.4.05 லட்சத்துக்கும் விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.350-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3,50,000-க்கும் விற்பனையாகிறது.