நேற்று ஒரே நாளில் 85 ஆயிரம் ரூபாயாக உயர்ந்த தங்கத்தின் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்து வருவதால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. நேற்று காலை, மாலை என இரு வர்த்தக நேரத்திலும் தங்கம் விலை ஏற்றம் கண்டு ரூ.85,120க்கு விற்பனையானது.

இந்த சூழலில் இன்றும் தங்கம் விலை உயரும் என கணிக்கப்பட்ட நிலையில், காலை நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சற்று இறக்கம் கண்டது. சென்னையில் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.10,600க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.84,800க்கும் தங்கம் விற்பனையாகிறது. வரலாற்றில் முதல் முறையாக நேற்று உச்சம் தொட்ட தங்கம் இன்று சற்று குறைந்திருப்பது இல்லத்தரசிகளை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version