இன்று (ஜூலை 21, 2025) மாலை 4 மணிக்கு சேலம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) முதல் மாநில அளவிலான கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என தவெக அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக மக்களின் எதிர்கால நலனை மையப்படுத்தி, கட்சித் தலைவர் விஜய் உத்தரவின் பேரில், தவெக-வின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, 5 மண்டலங்கள், 120 மாவட்டங்கள், மற்றும் 12,500 கிளைகளில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக சென்னையில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தில் விஜய் கடைசி நேரத்தில் கலந்துகொண்டு தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நிலையில், சேலம் பொதுக்கூட்டத்திலும் அவரது பங்கேற்புக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version