புதிய தமிழகம் கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும் என்று தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தற்போது வரை எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்தநிலையில், பிப்ரவரியில் தேர்தல் கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்படும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் நேற்று (ஜன., 26) பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தேர்தலில் வெறும் எம்எல்ஏக்களை மட்டும் பெறுவதோடு அல்லாமல், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்’ என்றார். தவெகவுடன் கூட்டணியா? என்பது குறித்தும் கிருஷ்ணசாமி பேசியுள்ளார்.

இந்தநிலையில் புதிய தமிழகம் கட்சி விஜய்யின் தவெக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version