Close Menu
    What's Hot

    “கடும் வெயில்; கவனமா இருங்க “- மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

    ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!

    கோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!
    Uncategorized

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    Editor web1By Editor web1May 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    DMDK Premalatha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் நடைபெற்ற தேமுதிக மாவட்டக் கழக செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக 5 முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

    சட்டம் ஒழுங்கை சீரமைக்கக் கோரிக்கை

    தமிழ்நாட்டில் தற்போது சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. அரசு உடனடியாக சட்டம் ஒழுங்கை சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை முற்றிலும் தடுக்க வேண்டும். இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

    முழுமையான பயிர் கடன் தள்ளுபடி

    தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடி திட்டம் அரைகுறையாகவும், முழுமையற்றதாகவும் உள்ளது. இதனால் இந்தத் திட்டத்தை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி, விவசாயிகளின் பயிர் கடன்கள் அனைத்தையும் நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    DMDK meeting

    மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு

    தமிழகத்தில் அண்மைக்காலமாகத் தினந்தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை, மாணவர்களின் கல்வி மற்றும் தொழில், வணிக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழக அரசு இந்த மின்வெட்டுப் பிரச்சினைக்குத் தற்காலிகத் தீர்வு தேடாமல், நிரந்தரத் தீர்வு கண்டு தடையற்ற சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

    மேகதாது அணை விவகாரம்

    கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது; அத்திட்டத்தை அவர்கள் முழுமையாகக் கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சிக்காமல், நடுநிலையோடு செயல்பட்டு இரு மாநிலங்களுக்கு இடையே எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாத வண்ணம் உரிய ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிக்கை

    பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அந்தப் பட்டியலில் உள்ள கடைகள் உண்மையில் மூடப்பட்டுவிட்டனவா அல்லது மூடப்பட்டதாகக் கணக்குக் காட்டிவிட்டு கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை அரசு தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள ஏனைய பல்லாயிரக்கணக்கான டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவையில் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக் கூட்டம் – பங்கேற்காத தவெக அமைச்சர்கள்
    Next Article மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் உடனே தலையிட வேண்டும்!. பி.ஆர். பாண்டியன்!
    Editor web1
    • Website

    Related Posts

    ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!

    May 31, 2026

    கோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!

    May 31, 2026

    “அடிக்கடி வருவேன்…” பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “கடும் வெயில்; கவனமா இருங்க “- மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

    ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!

    கோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!

    “அடிக்கடி வருவேன்…” பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    “கடும் வெயில்; கவனமா இருங்க “- மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

    May 31, 2026

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    May 31, 2026

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.