Close Menu
    What's Hot

    நடப்பாண்டில் 2வது முறையாக தமிழ்நாட்டில் பால், தயிர் விலை உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..!

    அதிமுக செயற்குழுவை கூட்டத் திட்டமிடும் இபிஎஸ்!. அதிருப்தியாளர் மீது பாயும் நடவடிக்கை?

    அரபு நாட்டுப் பேரிச்சை சாகுபடி!. குறைந்த செலவில் இரட்டிப்பு லாபம்!. அசத்தும் இயற்கை விவசாயி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவை : பட்ஜெட் என்பது சீக்ரெட் பட்ஜெட்..! அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்..!
    Featured

    கோவை : பட்ஜெட் என்பது சீக்ரெட் பட்ஜெட்..! அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்..!

    Editor web4By Editor web4July 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 31
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் கோவை மெட்ரோ ரயில் நிராகரிப்பு தொடர்பான கேள்விக்கு முதல்வரைப் பொறுத்தவரை கோவை மதுரை நகரங்களில் மெட்ரோ உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் இது குறித்து பிரதமரிடமும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    அதிமுகவில் இருந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியதற்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் நேரடியாக விசாரணை மேற்கொள்வதற்காக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது சட்டப்பேரவை தலைவர் அதற்கான முடிவுகளை எடுப்பார் என்று கூறினார்.

    நீட் தேர்வு போராட்டம் தொடர்பான கேள்விக்கு அதுஒவ்வொருவருக்கும் இருக்கின்ற உணர்வுகள் நீட் தேர்வு பொருத்தவரை எங்கள் கட்சியின் முதல்வரின் கொள்கை முடிவு அதுதான் அந்த முடிவில் முதல்வர் தெளிவாக இருக்கிறார்.

    ஆட்சியை சரியான முறையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த உணர்வுகளை பிரதமரிடம் வெளிப்படுத்தி இருக்கிறார் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பாக உள்ளது என்பதையும் பிரதமரிடம் தெரிவித்திருக்கிறார் என்றார்.

    நாமக்கல் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்தியது தொடர்பான கேள்விக்கு ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு குறைபாடுகள் இருக்கும் நம்முடைய லஞ்ச ஒழிப்புத்துறை அனைத்து துறைகளை சார்ந்தவர்களுக்கும் என்ன நடைபெறுகிறது என்பதை மாவட்ட வாரியாக ஒரே நேரத்தில் ஒரு துறையை ஆய்வு செய்வது அவர்களது வழக்கம் அதனை அவர்கள் செய்து வருகிறார்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அவர்களது குறைகளை அந்த துறையின் செயலாளர் இடம் கூறி இருக்க வேண்டும் என்றார்.

    மேகதாது விவகாரத்தில் தவெக நிலைப்பாடு தொடர்பான கேள்விக்கு மேகதாது அணையை பொருத்தவரை ஒரு செங்கலை கூட அவர்கள் எடுத்து வைக்கக் கூடாது அதனை அனுமதிக்க மாட்டேன் என்பது கொள்கை முடிவு என்றார்.

    சிவகாசி பட்டாசு தயாரிப்பு ஆலை வடித்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு விதிமுறைகளை மீறி இருக்கக்கூடிய எந்த பட்டாசு தொழிற்சாலைகளாக இருந்தாலும் அதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் ஒரு இடத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்பதற்காக வேறு ஒரு இடத்தில் பட்டாசு ஆலை அமைக்க ஒரு சிலர் தற்காலிகமாக அமைத்து லாபத்தை ஈட்டுகிறார்கள் அதுவும் தடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பான கேள்விக்கு பட்ஜெட் என்பது சீக்ரெட் பட்ஜெட்க்கு பிறகு கேள்வி கேளுங்கள் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!
    Next Article காமன்வெல்த் 2026!. இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி!. தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி அசத்தல்!
    Editor web4

    Related Posts

    நடப்பாண்டில் 2வது முறையாக தமிழ்நாட்டில் பால், தயிர் விலை உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..!

    July 27, 2026

    அதிமுக செயற்குழுவை கூட்டத் திட்டமிடும் இபிஎஸ்!. அதிருப்தியாளர் மீது பாயும் நடவடிக்கை?

    July 27, 2026

    அரபு நாட்டுப் பேரிச்சை சாகுபடி!. குறைந்த செலவில் இரட்டிப்பு லாபம்!. அசத்தும் இயற்கை விவசாயி!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடப்பாண்டில் 2வது முறையாக தமிழ்நாட்டில் பால், தயிர் விலை உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..!

    அதிமுக செயற்குழுவை கூட்டத் திட்டமிடும் இபிஎஸ்!. அதிருப்தியாளர் மீது பாயும் நடவடிக்கை?

    அரபு நாட்டுப் பேரிச்சை சாகுபடி!. குறைந்த செலவில் இரட்டிப்பு லாபம்!. அசத்தும் இயற்கை விவசாயி!

    ஜனநாயகன் படம் தேர்தலுக்கு முன்பு வெளியாகி இருந்தால்..! 234 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருக்கும்..!

    சட்டவிரோத பட்டாசு குடோன் வெடிவிபத்து!. பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.