Author: Editor TN Talks
சட்டவிரோதமான விற்பனையில் செய்ததால் மீஷோ, மெட்டா, அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வரை மத்திய அரசு அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019ன் படி அங்கீகரிக்கப்படாத பொருட்களை விற்றதாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகளை விற்றதாக மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. அதாவது ஆன்லைனில் பொருட்களை விற்கும் ஜியோமார்ட், சிமியா, டாக் ப்ரோ, மீரோ, டிரேட் இந்தியா, இந்தியா மார்ட், மெட்டா, ஃபிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட 13 ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவை தங்களின் வணிக தளங்கள் மூலம் அங்கீகரிக்கப்படாத சுமார் 16,970க்கும் மேற்பட்ட பொருட்களை விற்றது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அங்கீகரிக்கப்படாமல் விற்பனை செய்யப்பட்ட பொருட்கல் அடையாளம் காணப்பட்டு அபராதம் விதிகப்பட்டு வருகிறது. அதன்படி, மீஷோ, மெட்டா, ஃபிளிப்காட், அமேசான் நிறுவனங்களுக்கு தலா…
2024ம் ஆண்டில் மட்டும் சுவாசப் பிரச்சனையால் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டது அதிர்ச்சியை அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. அபாயகரமான நிலையில் காற்றின் மாசு இருப்பதால் பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் டெல்லியின் காற்று மாசு 9 ஆயிரத்தை தாண்டி இருப்பதாக அறிக்கை வெளியாகி உள்ளது. இது தொடர்பாக டெல்லி அரசு வெளியிட்ட அறிக்கையில், 2024ம் ஆண்டின் இறப்பு, பிறப்பு தகவலின்படி 9,211 பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளனர். இது 2023ம் ஆண்டை காட்டின் எண்ணிக்கையான 8,801-ஐ காட்டிலும் 4.6% அதிகமாகும். காற்றுமாசுபாட்டால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் நிமோனியா, நுரையீரல் தொற்று, காசநோய், ஆஸ்துமா உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகமான முதியவர்களும், குழந்தைகளும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த ஆண்டும் காற்று…
கேரளாவில் லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்த நபர் கடத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரவூரை சேர்ந்தவர் சாதிக்(46). இவருக்கு கடந்த மாதம் 30ம் தேதி லாட்டரியில் 1 கோடி ரூபாய் விழுந்ததாக சொல்லப்படுகிறது. தனக்கு விழுந்த லாட்டரி தொகை கிடைக்க தாமதம் ஆகும் என கூறப்பட்டதால் அதை அதிக விலைக்கு சாதிக் விற்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சாதிக்கிடம் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வாங்க சிலர் முயன்றுள்ளனர். இதற்காக சாதிக்கை பரவூர் வரசொல்லி கூறியுள்ளனர். அதிக விலைக்கு லாட்டரியை விற்க நினைத்த சாதிக் தனது நண்பருடன் பரவூர் சென்றதாகவும், ஒரு கும்பல் சாதிக்கை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதன்பின்னரே சாதிக் கடத்தப்பட்டது அவரது நண்பருக்கு தெரிய வந்துள்ளது. இரவு 11 மணியளவில் சாதிக்கிடம் இருந்து லாட்டரி சீட்டை வாங்கிய அந்த கும்பல்…
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த அதிமுக பகுதி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி அதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகளை சைதாபேட்டையை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் செய்து வந்தனர். அந்த வகையில் நேற்றிரவு முழுவதும் கட்சி வேலைகளை கட்சி அலுவலகத்தில் செய்த சைதாபேட்டை அதிமுக செயலாளர் சைதை சுகுமார், இரவு அங்கேயே இருந்துள்ளார். இந்த நிலையில் அதிகாலையில் பார்க்குபோது சைதை சுகுமார் கட்சி அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதை பார்த்து கட்சி தொண்டர்கள் பதறிய நிலையில் தகவலறிந்து போலீசார் அங்கு குவிந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குமரன் நகர் போலீசார் சுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வியத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக சுகுமார் இறந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் அவரின் தற்கொலைக்கு யார் காரணம் என்ற கோணத்தில்…
2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு எனக்கூறி கட்சி ஆரம்பித்த விஜய் சைலண்டாக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்ள 10 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக விஜய் அறிவித்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்ள தேர்தல் பிரச்சார குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பார்த்திபன், ராஜ்குமார், விஜய் தாமு, செல்வம், பிச்சை ரத்தினம் கரிகாலன், செரிவு மைதீன் என்னும் நியாஸ், கேத்ரின் பாண்டியன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 234 தொகுதிகளிலும் ஆலோசனை கூட்டங்கள், பிரச்சார கூட்டங்களை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்வதுடன், இவர்களுக்கு கழக தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். ஒரு பக்கம் ஜனநாயகம்…
டெல்லியில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் கண்டெய்னர் மீது மோதி விபத்துக்குள்ளானது. தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 150 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, போராட்டம் காரணமாக ஈரான் எல்லை மூடப்பட்டது. இதனால் விமானம் பறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து நியூயார்க் செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் விமானம் டெல்லிக்கு திரும்பியது. டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியதும் அதில் இருந்து பயணிகள் வெளியேறினர். தொடர்ந்து விமானம் ஓடு பாதையில் நிறுத்த முயற்சிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக விமான நிலையத்தில் இருந்த கண்டெய்னர் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் எஞ்சின் சேதமடைந்து. இதனால் தொடர்ந்து அந்த விமானத்தின் பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமான விபத்துக்கான காரணங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில், “ திருநெல்வேலியில் வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதுவும், இவர்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாக துப்பாக்கி விற்பனை செய்ததாக செய்திகள் வருகின்றன. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில், கூலிப்படை Network, போதைப்பொருள் Network, தற்போது துப்பாக்கி Network என இவை அனைத்தையும் வளர விட்டிருப்பது யார்? இன்றைய Failure Model திமுக முதல்வர் தானே? துப்பாக்கி கலாச்சாரம் என்பதெல்லாம் தமிழ்நாடு இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று. அதுவும், இன்ஸ்டாகிராம் வாயிலாக ஏதோ புடவை விற்பது போல Assault-ஆக துப்பாக்கி விற்கும் அளவிற்கு எங்கிருந்து இவர்களுக்கு தைரியம் வருகிறது? இதுபோன்ற செய்திகள் எல்லாம், இந்த திமுக ஆட்சியில் மக்கள் எப்படி நிம்மதியாக நடமாட முடியும்? என்ற…
உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தமாக 54 பேர் காயமடைந்தனர். பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நடைபெற்றது. காலையில் 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் வாடிவாசல் வழியாக ஒவ்வொரு சுற்றுக்கும் சுமார் 100 காளைகள் வீதம் அவிழ்ந்து விடப்பட்டன. வாடிவாசலில் சீறி பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்கினர். இதில் சிலரது காளை மாடுபிடி வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் வெற்றிப்பெற்றது. இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 10வது சுற்று முடிவில் மாடுபிடி வீரர்கள் 27 பேரும், காளைகளின் உரிமையாளர்கள் 20 பேரும், பாவையாளர்கள் 7 பேரும் என மொத்தமாக 54 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 8 வீரர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மடுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் சுமார் 1,100 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களம்…
இசை கலைஞர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு பிடித்த பாடல், இசையமைப்பாளர்கள் என பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பாடலாசிரியர் மதன் கார்க்கி விண்டேஜ் கார் ஓட்டியது குறித்து முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், கோயம்புத்தூரில் சென்று கார் வாங்கி ஒட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். இரவில் கார் ஓட்டுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். டிரைவரை கார் ஓட்டவே விட்டது இல்லை” என பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து இசை கலைஞர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பயணங்களின் போது அச்சம் என்பது மடமையடா, நீ இல்லாத உலகத்தில் நிம்மதி இல்லை போன்ற பழைய பாடல்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். மேலும் பாடகர்களுடன் இணைந்து நீ இல்லாத உலகத்தில் பாடலை பாடி அசத்தினார். தனது இளமை பருவத்தில் ”பறவைகள் பலவிதம்” ஒவ்வொன்றும் ஒருவிதம் உள்ளிட்ட பாடல்களை அதிகமாக விரும்பி கேட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து தனக்கு…
இந்த முறை குறி வைத்தால் தப்பாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. ஈரானின் உச்ச தலைவர் கொமேனிக்கு எதிராக பொதுமக்கள் சாலைகளில் இறங்கி போராட்டத்தை நடத்தி வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்து வரும் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த ஈரான் அரசு தனது பாதுகாப்பு அப்டையை இறக்கி விட்டது. போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் அடக்க நினைத்தபோது ஏற்பட்ட வன்முறையில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேநேரம் ஈரான் அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க அரசு தயாராகி வருவதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மக்கள் மீது படுகொலை நடத்துவதை நிறுத்தாவிட்டால் அந்நாட்டுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப்…