Author: Editor TN Talks
மும்பையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அண்ணாமலை சர்ச்சையாக பேசி இருப்பது மகாராஷ்டிராவில் காட்டுத்தீயாய் எதிர்ப்பை பெற்று வருகிறது. மும்பையில் நாளை மறுநாள் மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தமிழகர்கள் வசிக்கும் நவிமும்பை, தாராவி உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை பிர்ச்சாரம் செய்தார். அப்போது மும்பை மகாராஷ்டிராவின் நகரம் மட்டுமில்ல. அது ஒரு சர்வதேச நகரம் என பேசியுள்ளார். மும்பை மகாரஷ்டிராவுக்கு மட்டுமில்லை என அண்ணாமலை பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மகாராஷ்டிர நவநிர்மான் சேஜா ராஜ் தாக்கரே, “ தமிழ்நாட்டில் இருந்து வந்த அண்ணாமலைக்கும் இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறு பேசுவதா? என கேட்டுள்லார். தொடர்ந்து அண்ணாமலையை விமர்சித்த உத்தரவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, “ அண்ணாமலை பாஜவில் ஒன்றுமில்லாதவர். அவரால் தனது டெபாசிட்டை கூட காப்பாற்றி கொள்ள முடியாமல் தோற்றவர். அவர் பிரதமரை போல் பேசுகிறார்.…
கரூர் துயரம் தொடர்பாக விஜயிடம் நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது என தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூரின் வேலுச்சாமிபுரத்தில் விஜய் நடத்திய பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் விசாரணையும், சிபிஐ விசாரணையும் நடந்து வருகிறது. இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், தவெக நிர்வாகிகள் நிர்மல்குமார், எஸ்.பி.ஜோஷ் தங்கையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து டெல்லியில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ்ர் அர்ஜூனா, நிர்மல்குமார் உள்ளிட்டோரை வரவழைத்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக விஜயும் விசாரணைக்கு ஆஜராக கடந்த 6ம் தேதி சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படிப்படையில் நேற்று காலை 11.30 மணியளவில் சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. மாலை 6.15 மணியளவில்…
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததை கண்டித்து காங்கிரஸ் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காத நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் கோரி தொடரப்பட்ட வழக்கு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில் ஜனநயாகன் படத்திற்கு மத்திய அரசு அழுத்தம் தருவதாகவும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜனநாயகன்’ படத்தை தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முயற்சிப்பது தமிழக கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். தமிழக மக்களின் குரல்களை அடக்குவதில் நீங்கள் ஒருபோது வெற்றிப்பெற மாட்டீர்கள் மோடி என குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2026ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கும், 2025ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது அருள்மொழி என்பவருக்கும், 2025ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது சிந்தனை செல்வனுக்கும், 2025ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2025ம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருது எஸ்.எம். இதயத்துல்லாவுக்கும், 2025ம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கும், தமிழ்த் தென்றல் திருவிக விருது முதுமுனைவர் இறையன்பு ஐஏஎஸ்-க்கும், முத்தமிழ்க்…
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கொளத்தூரை சேர்ந்த ஆதி என்ற ஆதிகேசவன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆதி ரவுடி பட்டியலிலும் இருந்துள்ளார். இந்த நிலையில் ஆதியின் தோழியான சுசித்ராவுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்துள்ளது. பிற்நத உடனே சுசித்ராவின் பெண் குழந்தை இறந்துள்ளது. இதற்காக தனது தோழியை சந்தித்து ஆறுதல் கூற கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு ஆதி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன் தினம் இரவு மருத்துவமனையிலேயே ஆதி தங்கியுள்ளார். இந்த நிலையில்தான் நேற்று அதிகாலை 3.45 மணிக்கு திடீரென மருத்துவமனைக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் தூங்கிக் கொண்டிருந்த ஆதியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆதி அங்கேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார் ஆதியின் உடலை மீட்டு…
சட்டவிரோதமாக குடியேறிய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின்விசாக்களை அமெரிக்கா ரத்து செய்து அதிர்ச்சி அளித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதீத வரி விதிப்பு, குடியேற்றம், விசா உள்ளிட்டவைகளில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து உலக நாடுகளையும், அமெரிக்க வாழ் குடியேறிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார். அந்த வகையில் சட்ட விரோத குடியேற்ற விசா ரத்து நடவடிக்கை பலரை கலக்கமடைய செய்துள்ளது. சட்டவிரோத குடியேற்ற விசா ரத்து குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், 8 ஆயிரம் மாணவர்களின் விசாக்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 2,500 பேரின் விசாக்கள் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமாக ஒரு லட்சம் விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும், இவர்கள் அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துல்ளது. தேச பாதுகாப்புக்காகவும், குடியேற்ற சட்டங்களை அமல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், விசா ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல் இந்தியாவில் உள்ள…
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையில் இன்று ஆஜராகிறார் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்கப்போகும் கேள்விகள் என்ன என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் – வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையின் முக்கிய நகர்வாக இன்று டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராகிறார் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய். அவரிடம் சுமார் 56 கேள்விகள் கேட்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், என்னென்ன கேள்விகள் என்பது தொடர்பான தகவலும் ஊடகங்களில் கசிந்துள்ளது. அதன்படி, விஜய்யிடம் சிபிஐ முன்வைக்க உள்ள முக்கிய கேள்விகளை பொறுத்தவரை, 1. நிகழ்ச்சி நடைபெறும் நாளில் இறுதி முடிவு…
கடலூரில் நடந்த தேமுதிக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் யாருடன் கூட்டணி என்பதை தெரிவிக்கமால சூசகமாக கூட்டணி முடிவு எடுத்துவிட்டதாக கூறியுள்ளார். தொண்டர்களிடையே பேசிய அவர், “தமிழ்நாட்டு மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்ட வேண்டும் என்றவர் கேப்டன். பெண்களை கண்களாக கண்ணியமுடன் பார்த்தவர் கேப்டன் விஜயகாந்த். கோயம்பேட்டில் தலைவர் புதைக்கப்படவில்லை. அவர் விதைக்கப்பட்டிருக்கிறார். இந்த மாநாட்டுக்கு தமிழத்தில் இருந்து இத்தனை பேர் வந்து இருக்கிறீர்கள். வேறெந்த கட்சியில் இப்படி நடக்குமா? அவங்க எல்லாரும் காசு கொடுக்கணும், சோறு கொடுக்கணும், வேட்டி, சேலை கொடுக்கணும். ஆனால், நீங்க அன்புக்காக இங்க வந்து இருக்கீங்க. ஏளனமாக பேசுவதும், தரைகுறைவாக பேசுவதும் எந்த கொம்பனாக இருந்தாலும் தேமுதிக தொண்டர்கள் பதிலடி கொடுப்பார்கள். தேமுதிகவை பார்த்து யாராவது தப்பா பேசனா அந்த கடவுள் தொண்டர்கள் மூலம் பதிலடி கொடுப்பார். தேர்தல் வந்தால் எவ்வளவு சீட், எத்தனை பேரம் என்று சொல்கிறீர்களே? ஆமாம், நான்…
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. படம் திரைக்கு வருவதற்கு முன்பு சென்சார் வழங்குவதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த சூழலில் படத்தில் 25 இடங்களில் காட்சிகள் மாற்றம் மற்றும் நீக்கம் செய்த பிறகே நேற்று சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்படி, ’தீ பரவட்டும்’ என்பதற்கு பதிலாக ‘நீதி பரவட்டும்’ என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ’இந்தி அரக்கி’ என்ற வசனம் ‘அரக்கி’ என மாற்றப்பட்டுள்ளது. இந்தி எழுத்துக்களின் மீது சாணம் அடிக்கும் காட்சி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ‘ அந்த அச்சம் எவ்வளவு காலம் உங்களிடம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்” என பேரறிஞர் அண்ணா பேசுவது போன்ற காட்சிகளும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதை தவிர்த்து சில இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ளன. தீ கொளுந்து விட்டு எரியும் காட்சிகள், வன்முறை காட்சிகள், இறந்த உடல்களை…
பல தடைகளுக்கு பிறகு வெற்றிகரமாக இன்று திரைக்கு வந்துள்ள பராசக்தி திரைப்படம் எப்படி இருக்கு என்பதை பார்ப்போம். கடந்த 2024ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே விமர்சனங்கள் வர தொடங்கின. கேவிஎன் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடித்துள்ள பராசக்தி பொங்கல் கொண்டாட்டமாக இன்று திரைக்கு வந்துள்ளது. நேற்றுவரை சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் பராசக்தி ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும், இந்தி அரக்கி, தீ பரவட்டும் உள்ளிட்ட வசனங்கள் காட்சிகள் என கிட்டத்தட்ட 23 இடங்களில் காட்சிகள் நீக்கம் செய்த பிறகு பராசக்திக்கு சென்சார் போர்டு சான்றிதழை வழங்கியது. இதனால் அறிவித்தப்படி பராசக்தி திரைக்கு வந்தது. ஏற்கெனவே சொன்ன மாதிரி 1965 காலக்கட்டத்தில் நடந்த மொழி பிரச்சனையை மையப்படுத்தியே பராசக்தி எடுக்கப்பட்டுள்ளது. புறநானூர் என்ற பெயரில் மாணவர் புரட்சி படை நடத்தி வரும்…