Author: Editor TN Talks

வீட்டில் பல விதமான செடிகளும், பூக்களும் நிறைந்த தோட்டத்தை வைத்திருபவர்களுக்கு, குளிர்காலம் ஒரு சவாலான பருவம் தான். கடுமையான குளிர், பனி மற்றும் குறைந்த சூரிய ஒளி ஆகியவை செடிகளின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கின்றன. கோடை மற்றும் மழைக்காலத்தில் செழிப்பாக இருந்த செடிகள் கூட, குளிர்காலத்தில் வாடி, காய்ந்து போக ஆரம்பிக்கும். ஆனால், சில எளிய மற்றும் சரியான பராமரிப்பு முறைகளைப் பின்பற்றினால், வீட்டில் வளரும் செடிகள் இந்த குளிர்காலத்திலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதுமட்டுமல்லாமல், இனி வரும் பருவ காலத்திலும் செடி செழித்து வளரும். அந்த வகையில், மற்ற காலங்களை போல் இல்லாமல் இந்த குளிர்காலத்தில் செடிகளை எப்படி பராமரிப்பது? செடி வாடிப்போகாமல் இருக்க என்ன செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். தண்ணீர் விடுவதில் கவனம்! குளிர்காலத்தில் செடி பராமரிப்பில் நீர் நிர்வாகம் மிக முக்கியமானது. குளிர்ந்த காலநிலையில், செடிகள் நீரை மெதுவாகவே பயன்படுத்தும். எனவே, கோடை காலத்தை ஒப்பிடும்போது, தண்ணீர்…

Read More

கார்த்திகை விரதம் மற்றும் தொடர் புயல் எச்சரிக்கையின் விளைவாக ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மீன் சந்தை வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழில் முக்கியமான மாதங்களில் ஒன்றான கார்த்திகை கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. இந்த மாதத்தில் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். மாதம் தொடங்கியது முதல் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். அதேபோல், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை காசிமேட்டில் இருந்து பெருவாரியான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஒரு சில மீனவர்கள் மட்டும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். இந்நிலையில், சுமார் 40 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களும் விடுமுறை தினமான…

Read More

2024 தேர்தலில் இண்டியா கூட்டணி வென்ற தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்காளர்களை நீக்க திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். உத்​தரபிரதேச முன்​னாள் முதல்​வரும், சமாஜ்​வாதி கட்​சித் தலை​வரு​மான அகிலேஷ் யாதவ் லக்​னோ​வில் செய்​தி​யாளர்​களிடம்  கூறியதாவது: நாடு முழு​வதும் உ.பி. உள்​ளிட்ட 12 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப்​பணி​கள்​ (எஸ்​ஐஆர்) நடை​பெற்று வரு​கிறது. இது உடனடி​யாக நிறுத்​தப்​பட​வேண்​டும். கடந்த 2022 உ.பி. சட்​டப் பேர​வைத் தேர்​தலில் பாஜக 255 இடங்​களில் வெற்றி பெற்​றது. ஆனால், 2024 மக்​கள​வைத் தேர்​தலில் அந்​தக் கட்​சி​யால் 162 பேர​வைத் தொகு​தி​களில் மட்​டுமே முன்​னிலை பெற முடிந்​தது. அதே நேரத்​தில் 2022 தேர்​தலில் 111 இடங்​களில் சமாஜ்​வாதி கட்சி வெற்றி பெற்​றது. 2024 மக்​கள​வைத் தேர்​தலில் எங்​கள் கட்சி 183 இடங்​களில் அதி​கப்​படி​யான வாக்​கு​களைப் பெற முடிந்​தது. 2022-ம் ஆண்டு தேர்​தலில் 2 இடங்​களில் வெற்றி பெற்ற காங்​கிரஸ்…

Read More

எஸ்ஐஆர் படிவம் நிரப்புவது சம்மந்தமாக இணையவழி குற்றவாளிகள் கால் செய்து ஓடிபி எண்ணை கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று புதுச்சேரி இணையவழி போலீஸார் எச்சரித்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத் தின் அறிவுறுத்தலின் பேரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி புதுச்சேரி யில் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலை பயன்படுத்தி இணைய குற்றவாளிகள் பொதுமக்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு படிவம் நிரப்புவது சம்மந்தமாக பேசுகிறோம், அதற்கு உங்கள் தொலைபேசியில் ஓடிபி எண் வந்திருக்கும் அதை கூறுங்கள் என்று கேட்கின்றனர். அவ்வாறு கேட்டால் ஓடிபி எண்ணை பகிர வேண்டாம். ‘எங்களுடைய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (பிஎல்ஓ) நேரிடையாக சென்று கொடுக்கிறோம்’ என்று கூறி விடுங்கள். உங்களை கட்டாயப்படுத்தி கேட்கும் பட்சத்தில் உங்களுக்கு அழைப்பு வந்த எண்ணை குறித்து வைத்துக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது சைபர் க்ரைம் காவல் நிலையத்திலோ அல்லது 1930 மூலமாகவோ…

Read More

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதான மூவருக்கு ஆண்மை பரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம் புனரியைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி(30), அவரது தம்பி காளி என்ற காளீஸ்வரன்(21), உறவினரான மதுரையைச் சேர்ந்த குணா என்ற தவசி(20) ஆகியோரை காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கடந்த 3-ம் தேதி இரவு பீளமேடு போலீஸார் கைது செய்தனர். காலில் காயமடைந்த இவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப்பின் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் இருந்து, கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது. கடந்த 17-ம் தேதி கோவை மத்திய சிறையில் நீதிபதி முன்னிலையில் நடந்த அடையாள அணிவகுப்பில், பாதிக்கப்பட்ட மாணவி கைது செய்யப்பட்ட மூவரையும் தனித்தனியாக அடையாளம் காட்டினார். அதேபோல, அவரது ஆண் நண்பரும் அடையாளம் காட்டினார்.…

Read More

இலங்​கையை ஒட்டி ஏற்​பட்​டுள்ள காற்​றழுத்த தாழ்​வுநிலை​யால் டெல்டா மற்​றும் தென் மாவட்​டங்​களில் இன்​றும், நாளை​யும் (நவ.23, 24) கனமழை பெய்​யும் என்று தனியார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறி​யிருப்​ப​தாவது: குமரிக்​கடல் கடந்து அரபிக்​கடல் சென்ற காற்​றழுத்த தாழ்வு நிலை லட்​சத்​தீவு அருகே நீடித்​துக் கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில், இலங்​கையை ஒட்​டி​யுள்ள தென்​மேற்கு வங்​கக் கடலில் புதிய கீழடுக்கு சுழற்சி கடந்த 9-ம் தேதி உரு​வானது. இது மேலும் தீவிரமடைந்து இலங்​கை​யின் தெற்​குப் பகு​தி​யையொட்டி தாழ்வு நிலை​யாக உரு​வெடுத்​தது. தற்​போது, இலங்​கைக்கு தென் மேற்கே குமரிக் கடலை​யொட்​டிய பகு​தி​யில் நிலை​கொண்​டுள்​ளது. இது மேலும் தீவிரமடைந்து இன்​றும், நாளை​யும் தமிழகத்​தின் பெரும்​பாலான மாவட்​டங்​களுக்​கும் பரவலான மழைப்​பொழிவை கொடுக்​கும். டெல்டா மற்​றும் தென் மாவட்​டங்​களில் கனமழை பெய்​யும். குறிப்​பாக, தென் மாவட்​டங்​களின் கடலோரம் மற்​றும் மேற்​குத் தொடர்ச்சி மலைப் பகு​தி​களில் மிக கனமழைக்கு வாய்ப்​புள்​ளது. மாஞ்​சோலை உள்​ளிட்ட மலைப் பள்​ளத்​தாக்கு பகு​தி​களில் அதி…

Read More

பாமக மகளிரணி சார்பில் தொடர்ச்சியாக 100 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ளரங்க கூட்டம் நடத்தி 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னை அடுத்த உத்தண்டியில் நடந்தது. பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் பாமக மகளிரணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சவுமியா அன்புமணி பேசியதாவது: தேர்தலுக்கு முன்பே போதை உள்ளிட்டவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டங்களை மகளிரணியினர் கிராம அளவில் நடத்த வேண்டும். பாடல் , நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாமக சார்பில் உள்ளரங்க கூட்டங்கள் தொகுதி வாரியாக நடத்தப்பட வேண்டும். தேர்தல் நெருங்கும்போது கடைசி நேரத்தில் சென்று மாம்பழத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறக்கூடாது. தருமபுரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஆண்கள் சரியாக வாக்களித்து விடுகின்றனர். பெண்கள்தான் கடைசி நேரத்தில் மனம் மாறி மாற்று கட்சிகளுக்கு வாக்களித்து விடுகின்றனர் என்று ஒரு பெண் என்னிடம் கூறினார்.…

Read More

போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி வரும் ஜன.2 முதல் 12-ம்தேதி வரை தான் மேற்கொள்ள் இருக்கும் சமத்துவ நடை பயணத்துக்கு எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்தநிர்வாகிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புகைப்பிடிப்பவர்களுக்கு, மது அருந்துபவர்களுக்கு இந்த நடைபயணத்தில் அனுமதி இல்லை. மருத்துவ வசதிகளும் பயணத்தின் போது மருத்துவர்களும் உடன்வருவது போன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என் எஞ்சிய நாட்களை மக்களுக்காக வாழ விரும்புகிறேன். கஞ்சா போன்ற போதைப் பொருட்களை ஒழிக்க இந்த நடைபயணம் நடைபெறவுள்ளது. கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் வைத்திருந்தால் குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை, பயன்படுத்தினால் 7 ஆண்டு சிறை என்று சட்டத்தை புதிதாக கொண்டு வந்து அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். கல்லூரிகளிலே சாதி சங்கங்கள் வைத்துள்ளார்கள், மோதல் ஏற்படுகிறது, வீச்சரிவாள், பட்டா கத்தியோடு சண்டை போடுகிறார்கள். இதை தடுக்கத்தான் ‘சமத்துவ…

Read More

கரூர் சோகத்தைத் தொடர்ந்து பொதுமக்கள், தொண்டர்களை சந்திக்காமல் இருந்த விஜய், அண்மையில் கட்சியின் சிறப்பு பொதுக் குழுவை கூட்டினார். அதனைத் தொடர்ந்து மக்கள் சந்திப்புக்கும் விஜய் ஆயத்தமாகி வருகிறார். சேலத்தில் இருந்து டிச.4-ல் விஜய் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதி கோரிகாவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், கார்த்திகை தீபத் திருவிழா உள்ளிட்ட சில பாதுகாப்பு காரணங்களை கூறி, வேறு ஒரு தேதியில் பிரச்சாரத்தை வைத்துக்கொள்ள போலீஸார் அறிவுறுத்தினர். இதற்கிடையில் காஞ்சிபுரத்தில் இன்று விஜய், மக்கள் சந்திப்பை நடத்த இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு கொடுக்கப்பட்ட 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக தலைமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும்…

Read More

தமிழக பாஜக சார்பில், எஸ்ஐஆர் குறித்த ஆய்வுக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்துப் பேசியது: பிஹார் போல தமிழகத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். எஸ்ஐஆரைக் கண்டு திமுக-வுக்கு பயம். ஏனென்றால், எனது தொகுதிக்குட்பட்ட ஒரு பூத்தில் மட்டும் இறந்து போனவர்கள் 30 பேர், வெளியூர் சென்றவர்கள் 40 பேர், இடம் மாறியவர்கள் 25 பேர் என 95 வாக்காளர்கள் இல்லை. எனவே, எஸ்ஐஆர் பணிகளை சரியாக செய்தால் ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தும் திமுகவுக்கான வாக்குகள். திமுக-வின் வாக்குகளை கட் செய்தாலே நமது கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். பொறுப்புடன் பணி செய்தால் 200 தொகுதிகளில் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

Read More