Author: Editor TN Talks

ஆஸ்​திரேலியா – இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான பாரம்​பரியமிக்க 5 போட்​டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடரின் முதல் போட்டி பெர்த்​தில் இன்று காலை 7.50 மணிக்கு தொடங்​கு​கிறது. பென் ஸ்டோக்ஸ் தலை​மையி​லான இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி 5 போட்​டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளை​யாடு​வதற்​காக ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான பாரம்​பரியமிக்க இந்த ஆஷஸ் தொடர் 74-வது முறை​யாக நடை​பெறுகிறது. கடைசி​யாக ஆஸ்​திரேலிய மண்​ணில் இங்​கிலாந்து அணி கடந்த 2010-2011-ம் ஆண்டு நடை​பெற்ற ஆஷஸ் தொடரை 3-1 என வென்​றது. அதன் பின்​னர் ஆஸ்​திரேலிய மண்​ணில் நடை​பெற்ற 3 தொடர்​களை​யும் இங்​கிலாந்து அணி இழந்​தது. இதில் 13 போட்​டிகளில் தோல்​வியை​யும், 2 ஆட்​டத்தை டிரா​வும் செய்​திருந்​தது இங்​கிலாந்து அணி. எனினும் இம்​முறை வயதான வீரர்​கள், பலவீன​மான பந்து வீச்​சுடன் காணப்​படும் ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ராக இங்​கிலாந்து வீரர்​கள் ஆதிக்​கம் செலுத்த முயற்​சிக்​கக்​கூடும். பந்து வீச்சை பொறுத்​தவரை​யில் ஜோப்ரா…

Read More

சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியடைந்த நிலையில், ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர்  பிஹாரில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மவுன விரதம் இருந்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் நிதிஷ் குமார் 10வது முறையாக பிஹார் முதல்வராக இன்று பதவியேற்றார். அவருடன் 26 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த சூழலில், பிரசாந்த் கிஷோர்  பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மவுன விரதம் இருந்தார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்டு 236 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. மேலும், அக்கட்சி 3.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “கடந்த மூன்று ஆண்டுகளாக நான் உழைத்ததை விட இரண்டு மடங்கு கடினமாக உழைப்பேன். என் முழு பலத்தையும் பயன்படுத்துவேன். பின்வாங்கும் கேள்விக்கே இடமில்லை. பிஹாரை மேம்படுத்துவதற்கான எனது உறுதியை நிறைவேற்றும் வரை பின்வாங்க மாட்டேன்.…

Read More

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (நவ. 21) முதல் வரும் 23ம் தேதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக இன்று (நவ. 21) காலை டெல்லியில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பாக தனது x தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு, மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சி மாநாடு என்று குறிப்பிட்டுள்ளார். பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உச்சிமாநாட்டின் போது பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்தித்து பேச இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜி 20 உச்சிமாநாட்டில் நடைபெறும் முக்கிய 3 அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்று…

Read More

தேர்​தல் ஆணை​யம் மீதான நம்​பிக்​கையை உடைக்க காங்​கிரஸ் கட்சி முயற்​சிப்​ப​தாக ஓய்​வு​பெற்ற நீதிப​தி​கள், உயர் அதி​காரி​கள் உள்​ளிட்ட 272 முக்​கிய பிர​முகர்​கள் குற்றம்சாட்டி உள்​ளனர். ஓய்​வு​பெற்ற 16 நீதிப​தி​கள், 123 அரசு உயர் அதி​காரி​கள், 133 ராணுவ உயர் அதி​காரி​கள் உள்​ளிட்ட 272 முக்​கிய பிர​முகர்​கள் ‘தேசிய அரசி​யல் சாசன அமைப்​பு​கள் மீதான தாக்​குதல்’ என்ற தலைப்​பில் திறந்த மடல் எழுதி உள்​ளனர். அதில் கூறி​யிருப்​ப​தாவது: சில அரசி​யல் தலை​வர்​கள், நேர்​மை​யான மாற்று கொள்​கைகளை முன்​வைப்​ப​தற்கு பதில், ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களை முன்​வைத்து அரசி​யல் நாடகம் நடத்​துகிறார்​கள். அவர்​கள் இந்​திய பாது​காப்​புப் படை​யினரின் வீரத்​தை​யும் சாதனை​களை​யும் சந்​தேகிக்​கின்​றனர். நீதித் துறை​யின் செயல்​ பாட்​டை​யும் சந்​தேகிக்​கின்​றனர். நாடாளு​மன்​றத்​தை​யும் அதன் அதி​காரி​களை​யும் குறை கூறுகின்​றனர். இப்​போது அதேமுறை​யில் இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் நேர்மை கண்ணி​யத்​தின் மீது குறை கூறுகிறார்​கள். குறிப்​பாக, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்ஐஆர்) என்ற பெயரில் தேர்​தல் ஆணை​யம்…

Read More

வளரும் கட்சிக்குள் கோஷ்டிகள் தலை தூக்குவது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அந்த விதத்தில் விஜய்யின் தவெக-வுக்குள் அதற்குள்ளாகவே கோஷ்டி அரசியல் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டது. ‘விஜய் மக்கள் இயக்கத்தை’ வழி நடத்திய புஸ்ஸி ஆனந்தை மட்டுமே மலைபோல் நம்பி தவெக என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் ஆனந்தை அமர்த்தினார். ஆனால், மன்றத்தை கட்டி இழுப்பது போல் கட்சியை அவரால் கட்டி இழுக்க முடியவில்லை. பணம் வாங்கிக் கொண்டு கட்சிப் பதவிகளை ‘விற்பதாக’ ஆங்காங்கே புகார்கள் வெடித்தன. விஜய்க்கும் தங்களுக்கும் இடையில் தடுப்பு அரணாக இருப்பதாக ஆனந்த் மீது தொண்டர்கள் அதிருப்திகளைக் கொட்டினார்கள். இருந்த போதும் கட்சிப் பொறுப்பாளர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டிலும் கண்ணசைவிலும் வைத்திருந்தார் ஆனந்த். இதனால் அவரை மீறி கட்சிக்குள் எதுவும் அசையாது என்ற நிலையே இருந்தது. இந்த நிலையில் தான், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார் என அரசியலில் கரை கண்டவர்கள் மாற்றுக்…

Read More

சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை ஓய்வின்றி பணியாற்ற தயாராக இருக்க வேண்டுமென திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ‘உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடனான சந்திப்பு அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 89 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘ஒன் டு ஒன்’ சந்தித்து நேரடி ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, 42-வது நாளாக நேற்று நடைபெற்ற நிகழ்வில் திருவள்ளூர் தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, தற்போதைய சிட்டிங் தொகுதியான திருவள்ளூரில் மீண்டும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். எஸ்ஐஆர் திருத்தப் பணிகள், பூத் கமிட்டி கூட்டங்களை சுணக்கமின்றி மேற்கொள்ள வேண்டும். தேர்தல் முடியும் வரை அனைவரும் ஒய்வின்றிஉழைக்க வேண்டும். பொது மக்களை சந்திக்கும்போது அரசின் நலத் திட்டங்களின் பயன்களை எடுத்துக்கூற வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே,…

Read More

தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு குப்பை வண்​டி​யில் உணவு அனுப்பப்பட்டதாகக் கூறி பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்​கத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: கோவை காந்​திபுரத்​தில் புதி​தாகக் கட்​டப்​பட்​டுள்ள செம்​மொழிப் பூங்​கா​வில் சுத்​தம் செய்​யும் பணி​களில் ஈடு​பட்​டிருந்த தூய்​மைப் பணி​யாளர்​களுக்​கு குப்பை வண்​டி​யில் காலை உணவு அனுப்பி வைத்த திமுக அரசின் ஆணவம் அரு​வருக்​கத்​தக்​கது. மனி​தாபி​மானமற்ற இச்​செயலை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறேன். கழிப்​பறை​யில் கூட காசு பார்த்து கொள்​ளை​யடிக்​கும் திமுக தலை​வர்​களை ராஜமரி​யாதை​யுடன் நடத்​தும் உங்​கள் அரசுக்​கு, நமது நாட்​டைச் சுத்​தப்​படுத்​தும் தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு நாகரி​க​மான முறை​யில் உணவளிப்​ப​தில் என்ன சிக்​கல்? எங்​களுக்கு உணவளி​யுங்​கள் என்று தூய்​மைப் பணி​யாளர்​கள் கேட்​டார்​களா? எதற்​காக ‘சோறு போடு​கிறோம்’ என்ற போர்​வை​யில் அவர்​களின் சுயமரி​யாதையை சீண்​டிப் பார்க்​கிறீர்​கள்? விளிம்பு நிலை மக்​கள் மீது திமுக​வுக்கு உள்ள வெறுப்பு இந்​தளவுக்​குத் தரம் தாழ்ந்து போகும் என்று நாங்​கள் கனவில் கூட நினைக்​க​வில்​லை. திமுக…

Read More

நமது இசையை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் காப்புரிமையை பெற வேண்டும். அதன் மூலம் பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்று ஆளுநர் ரவி கூறினார். சென்னை பாரதிய வித்யா பவன் சார்பில் மார்கழி மகா உற்சவம் நடைபெறுகிறது. அதன் துவக்க விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசுகையில், ” தமிழ்நாட்டில் பாரதிய வித்யா பவன் கலாச்சார மையமாக திகழ்கிறது. அதைப் போல, கலைக்களுக்கான மாதமாக மார்கழியை கடைப்பிடிக்கிறோம். உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த கலைகளை காண்பதற்கும், கற்பதற்கும் சென்னைக்கு பலரும் வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் உள்ள தனித் திறமைகளை வளர்ப்பதில் மார்கழி மாதம் முக்கிய பங்கு வகிக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ்காரர்கள் தலையீட்டால் கலை மற்றும் கலாச்சாரம் மறைக்கப்பட்டன. அவற்றை நாம் மீட்டு காக்க வேண்டும். அனைத்து மொழிகளையும் இணைப்பதற்கு இசை முக்கியமாக உள்ளது. மேற்கத்திய கலாச்சாரத்தை தவிர்த்து,…

Read More

சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மக்கள் பயணம் செய்யும் வகையில் எதிர்காலத்தில் மின்சார ஏர் டாக்சி சேவையை இயக்கலாம் என கும்டா பரிந்துரை செய்துள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA அல்லது கும்டா), சென்னையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு தேவையான பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது குறித்த தனது ஆய்வு அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது. அதில் 2023-ஆம் ஆண்டு முதல் 2048-ஆம் ஆண்டு வரையில், சென்னையில் பொது போக்குவரத்தான பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில், விரைவு ரயில், புதிய வழித்தடங்கள், சாலை வசதி, சாலை அமைப்பு, பார்க்கிங் வசதிகள், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மின்சார பேருந்துகளுக்கும், மின்சார வாகனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, மின்சார படகு சேவையான ‘வாட்டர் மெட்ரோ’ மற்றும் மின்சார விமான சேவையையும் அமல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில், சென்னை ஐஐடி-யில் இ-பிளேன் (ஏர் டாக்சி) தயாரிப்புப்…

Read More

குற்ற வழக்கில் ஆஜராகாத மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து வள்ளியூர் குற்றவியல் நடுவண் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதியில் மின்பேட்டரி காணாமல் போனது. இந்த சம்பவம் குறித்து செயல் அலுவலர் உச்சிமகாளி அளித்த புகாரின் அடிப்படையில், 6 பேர் மீது திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். ஒரு வழியாக, 2011 ஆம் ஆண்டு வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுந்தரேசன், குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்து வள்ளியூர் குற்றவியல் நடுவண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இந்த வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை தொடர்பான விவரங்களை கேட்பதற்காக சுந்தரேசனை நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், தற்போது மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியாக உள்ள சுந்தரேசன்…

Read More