Author: Editor TN Talks
அதிமுகவில் இருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், பாஜகவில் இணையவுள்ளார். அக்கட்சியின் புதுச்சேரி மேலிட பொறுப்பாளரை இன்று அவர் சந்தித்தார். புதுவை மாநில அதிமுகவில் புரட்சித் தலைவி ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தவர் பாஸ்கர். கடந்த 2011-16, 2016-21-ம் ஆண்டுகளில் முதலியார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிட்ட பாஸ்கர் தோல்வியடைந்தார். இருப்பினும் கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். புதுச்சேரி மாநில அதிமுக மாநில செயலாளர் அன்பழகனின் தம்பியான இவர், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு இரு தினங்களுக்கு முன் கடிதம் அனுப்பினார். ஏற்கெனவே முன்னாள் எம்எல்ஏ அசனா அதிமுகவில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து இவரும் விலகினார். இதில், அசனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டார். இதே போல் பாஸ்கர் வேறு ஒரு…
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதா கலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ஆர் ரவி நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்தார். இது சம்பந்தமாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு கொடுத்த அந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன், “சட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் அவற்றை கிடப்பில் போட்டுவிட்டு, பின்னர் குடியரசு தலைவருக்கு அந்த சட்ட மசோதாக்களை பரிந்துரை செய்த விஷயம் சட்டவிரோதமானது. அதுமட்டுமின்றி சட்டப்பேரவையில் மறு நிறைவேற்றும் செய்து அனுப்பி வைக்கப்படும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும் குடியரசுத் தலைவர் மூன்று மாதத்திலும் முடிவு எடுத்தாக வேண்டும்”, என்ற காலக்கெடுவையும் நிர்ணயத்தினர். உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 13ஆம் தேதி, இந்த விவகாரம் தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 143ஐ…
காற்றுத் தரச் சுட்டெண் ( Air quality index – AQI ) என்பது மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் சுவாசிக்கத் தேவையான சுத்தமான மற்றும் தரமான காற்று உள்ளதா என்பதை சரியாக குறிக்கும் அளவீடு ஆகும். இந்த அளவீடு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரங்களிலும் கணக்கெடுக்கப்படும். தலைநகர் டெல்லியில் கடந்த 10 வருடங்களாகவே காற்று மாசு இருந்து வருவது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக கடந்த ஏழு நாட்களாக பாரத தலைநகர் டெல்லியில் காற்றுத் தரச் சுட்டெண் அளவு 300க்கு மேல் இருந்து வருகிறது. இன்று அளவுக்கு அதிகமாக அந்த அளவு 400 ஐ தொட்டு விட்டது. டிடியு, புராரி, சாந்தினி சௌக், ஆனந்த் விஹார், முண்ட்கா, ஓக்லா, பவானா, வஜீர்பூர் என 20க்கும் மேற்பட்ட நிலையங்களில் அந்த அளவானது இன்று 400க்கு மேல் உள்ளது. காற்றத் தரச் சுட்டெண் அளவானது : 0 முதல் 50 வரையில் இருந்தால்…
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சேவை கூடிய விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வழியாக, வந்தே பாரத் ரயில் சேவை சென்னை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய ரயில் சேவையை ராமேஸ்வரத்தில் இருந்து பிரதமர் மோடி துவங்கி வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதற்கு இடையில் தற்பொழுது ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி வழியாக சென்னை வந்தடைய கூடிய வகையில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையின் கால அட்டவணை வெளியாகி உள்ளது. வெளியாகி உள்ள கால அட்டவணையின் நேரப்படி அதிகாலை 5:30 மணிக்கு சென்னை எக்மோரில் இருந்து கிளம்பும் இந்த வந்தே பாரத் ரயில் சேவை மதியம் 1 மணி 15 நிமிடத்தில் ராமேஸ்வரம் வந்தடையும். சென்னை எக்மோரில் இருந்து புறப்படும் இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம்,திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம் வழியே…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிக சக்திவாய்ந்த நாடாக கருதப்படும் சவுதி அரேபியாவை, நேட்டோ அல்லாத முக்கிய நாடுகளின் கூட்டமைப்பில் (MAJOR NON – NATO ALLIES) அமெரிக்கா சேர்த்துள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இஸ்ரேல் – காஸா போரில் அமெரிக்க நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வந்த சவுதி அரேபியாவுக்கு, ‘நேட்டோ அல்லாத நாடுகள் கூட்டமைப்பு’ அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், நேற்று காலை அமெரிக்காவுக்கு வருகை தந்தார். வாஷிங்டன் விமான நிலையத்துக்கு வந்த அவர், அங்கிருந்து வெள்ளை மாளிகைக்கு கார் மூலமாக சென்றார். வெள்ளை மாளிகையில் அவரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இளவரசருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து…
தமிழ்நாடு – உத்தரப் பிரதேசம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை லீக் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் உத்திரபிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தது. அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணியில் பாபா இந்திரஜித், ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோர் சதம் விளாசினார். இதில் இந்திரஜித் 149 ரன்களையும், ஆண்ட்ரே சித்தார்த் 121 ரன்களையும் சேர்க்க, அடுத்து வந்த அஜித்தேஷ் குருஸ்வாமி 86 ரன்களையும் சேர்த்தார். இதன் மூலம் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 455 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த யுபி அணியில் ரிங்கு சிங் சதம் விளாசி மிரட்டியதுடன், 176 ரன்களையும் சேர்த்து அசத்தினார்.…
ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள U-19 உலகக் கோப்பைக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இளையோருக்கான ஐசிசி U -19 ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான அட்டவணையானது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது ஜனவரி 15ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதேசமயம் முதல் நாள் நடைபெறும் மற்ற லீக் ஆட்டங்களில் ஜிம்பாப்வேவை எதிர்த்து ஸ்காட்லாந்தும், வெஸ்ட் இண்டீஸை எதிர்த்து தான்சானியாவும் விளையாடவுள்ளது. இதில் தான்சானியா அணி வரலாற்றில் முதல் முறையாக அண்டர்19 உலகக் கோப்பை தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்பதால், மொத்தம் 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதவுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு…
கழுத்தை சுற்றியுள்ள தோல் கருமையாக மாறுவது (Hyperpigmentation), மோசமான சுகாதாரப் பழக்கங்கள் அல்லது இன்சுலின் எதிர்ப்பு போன்ற சில ஆரோக்கிய நிலைகளின் காரணமாக இருக்கலாம். இது பலருக்கும் தன்னம்பிக்கையை குறைக்கும் ஒரு விஷயமாக தோன்றும். இதனை நீக்க பல க்ரீம்களை பயன்படுத்தினாலும் பல சமயங்களில் பலனில்லாமல் போகும். ஆனால், கழுத்தில் உள்ள இந்த கருமையைப் போக்க உதவும் பல இயற்கையான மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் உள்ளன. உருளைக்கிழங்குச் சாறு, கற்றாழை ஜெல், தயிர் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் போன்ற பொருட்கள் கருமையான சருமத்தை நீக்க உதவுகின்றன. இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது, இவை காலப்போக்கில் தோல் நிறம், அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்தும். உருளைக்கிழங்கு சாறு: உருளைக்கிழங்கில் இயற்கையான என்சைம்கள் மற்றும் லேசான ப்ளீச்சிங் காரணிகள் உள்ளன. இவை காலப்போக்கில் நிறமியைக் குறைக்க உதவுகின்றன. இதில் உள்ள வைட்டமின் C சத்தும் சருமத்தை ஒளிர செய்து ஒரே சீரான…
தமிழகத்தில் கார்த்திகை மாதம் திங்கட்கிழமை (நவ.17) தொடங்கியதை ஒட்டி, லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தங்களின் புனித யாத்திரையைத் துவங்கும் விதமாக, மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த விரதக் காலம் பொதுவாக ஒரு மண்டலம் அதாவது 41 நாட்கள் நீடிக்கும். இந்த நாட்களின் முக்கிய அங்கமாக, பக்தர்கள் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகப் பல்வேறு கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிப்பதாக நம்பப்படுகிறது. அதில் மிக முக்கியமானதும், சவாலானதும் ஒன்றுதான் – காலில் செருப்பு அணியாமல் வெறுங் காலில் நடப்பது. ஐயப்ப விரதத்தில் வெறுங் காலில் நடப்பது என்பது ஆழமான ஆன்மிகப் பொருளைக் கொண்டது. செருப்புகளை துறப்பது என்பது, உலகப் பற்று, ஆடம்பரம், மற்றும் சுகபோகங்கள் மீதான பற்றின்மையை வெளிப்படுத்துகிறது. அனைவரும் சமம் என்பதை குறிக்கும் எளிய வாழ்வின் அடையாளம் என நம்பப்படுகிறது. வெறுங்காலில் நடப்பதால், உடல் நேரடியாக பூமித்தாயுடன் தொடர்பு கொள்ள வழிவகுக்கிறது. இது உடலுக்கும் பூமிக்கும் இடையிலான சக்தியை சமநிலைப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இந்த…
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ‘உடன்பிறப்பே வா’ நிகழ்வில் ஓட்டப்பிடாரம், ஆலங்குளம், கன்னியாகுமரி தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, ஆலங்குளம் தொகுதி சார்பில் பங்கேற்ற தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், ‘‘எங்க அப்பா முத்துவேல் 1967-ல் இருந்து திமுக உறுப்பினர். இப்பவும் டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிட்டு இருக்காரு. உங்ககூட போட்டோ எடுக்க கூட்டிட்டு வரவா?’’ என கேட்டார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், ‘‘அப்பாவுக்கு போன் பண்ணுங்க, நானே பேசி வரச் சொல்லுறேன்’’ என கூறியதுடன், அவரது தந்தையுடனும் போனில் பேசினார். இதைக் கண்டு ‘இதுபோதும் தலைவரே’ என ஆனந்த கண்ணீரில் சிவகுமார் நெகிழ்ந்துவிட்டார். இதற்கிடையே, ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பில் கோவை தெற்கு மாவட்டம் சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கம், அதிமுகவினருடன் தொடர்பில் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் விசாரணையின் முடிவில் மகாலிங்கம் பதவி பறிக்கப்பட்டு, அந்த இடத்துக்கு தற்போது புதிதாக ஆர்.ரமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.