Author: Editor TN Talks
தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக வலம் வந்து பாடகர், நடிகர், இயக்குநர் என பல பரினாமங்கள் எடுத்தவர் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமாவில் ராப் இசையை கலந்தவர் இவர். இவரது பல பாடல்களின் சில வரிகள் யாருக்குமே புரியாத வகையில் இருக்கும். அது தான் அவரது ஸ்பெஷல். அது எதனால் என அவரது பாடலிலேயே கேள்வி கேட்கப்பட்டு அதில் பதிலும் சொல்லப்பட்டு இருக்கிறது. கன்னியாகுமரி மாவடம் நாகர்கோவிலை சேர்ந்தவர் விஜய் ஆண்டனி. சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்தவர், தானே ஆடியோ பைல்ஸ் என்ற ஒலியரங்கை அமைத்து, ஒலி பொறியாளராக பணியாற்றி வந்தார். தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள், ஆவணப்படங்கள் என சில ஜிங்கில்ஸ் அமைத்தார். தொடர்ந்து சில தொலைக்காட்சி தொடர்களுக்கும் இசையமைத்தார் விஜய் ஆண்டனி. சன் டிவியில் ஒளிப்பரப்பான ’சின்ன பாப்பா, பெரிய பாப்பா’, 2006-ம் ஆண்டு வெளியான ’கனா காணும் காலங்கள்’, 2007-ம் ஆண்டு ’காதலிக்க நேரமில்லை’ போன்ற…
“உலக அளவில் இருந்து அகதிகளை வரவேற்க இந்தியா ஒரு சத்திரமல்ல” எனக் கூறி இலங்கைத் தமிழரின் மனுவை நிராகரித்துள்ளது உச்சநீதிமன்றம். பார்ப்பதற்கு சிறப்பான தீர்ப்பு போல தோன்றலாம்.. ஆனால் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று மத்திய அரசைப் போல் உச்சநீதிமன்றமும் பார்ப்பது வேதனை அளிக்கிறது. சீனாவில் 1959-ல் புரட்சி ஏற்பட்ட போது 14-வது தலாய்லாமா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான திபெத்தியர்கள் இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்தனர். அப்போது பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு, இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலா என்ற நகரத்தையே ஒதுக்கித் தந்தார். நாடுகடந்த அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளவும் அனுமதி அளித்தார். கர்நாடகாவின் பைலுகுப்பே, முண்ட்கோடு, டெல்லியில் மஜ்னு-கா-தில்லி ஆகிய இடங்களில் அதிக அளவில் திபெத்தியர்கள் குடியேறினர். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் உதகை, கொடைக்கானல் ஆகிய இடங்களிலும் திபெத்தியர்களை நீடக்தற்போது வரை இந்தியாவில் ஏறத்தாழ ஒரு லட்சம் திபெத்தியர்கள் வசிக்கின்றனர். இதுபோதாதென்று 1950 முதல் 1987-க்கு இடையில் இந்தியாவில்…
தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு அவசரகால மேலாண்மை மற்றும் காவிரியில் நீர்ப்பாசனத்திற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முக்கிய அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, ராமச்சந்திரன், சேகர் பாபு, சிவசங்கர், பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முக்கிய அதிகாரிகள் முருகானந்தம் (தலைமைச் செயலாளர்), சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், டிஜிபி சங்கர் ஜீவால், அமுதா ஐஏஎஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அலுவலர்கள் மற்றும் அமைச்சர்களிடம் முதல்வர் கூறியதாவது, “மாவட்ட ஆட்சியர்கள் தங்களது பணிகளில் முழுமையாக தயாராக இருக்க வேண்டும். கடலோர மாவட்டங்கள் புயல் மற்றும் கனமழையால் நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை இப்போது துவங்க வேண்டும்.” என்றும், அவசர செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், “இந்த பருவமழையில் இயல்பான மழை…
உலக அளவில் இருந்து அகதிகளை வரவேற்க இந்தியா ஒரு சத்திரமல்ல எனக் கூறி இலங்கைத் தமிழரின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம். சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சுபாஷ்கரன் என பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கடந்த 2018ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தண்டனையை ரத்து செய்யக்கோரிய அவரது மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த சுபாஷ்கரனின் சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்தது. மேலும் தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இலங்கை தமிழரான சுபாஷ்கரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,” இவர் ஒரு…
சாம்சங் நிறுவனத்தின் பணி நீக்கம் செய்யப்பட்ட 23 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க அரசு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் சாம்சங் நிறுவனம் இதில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பணி பாதுகாப்பு ஊதிய உயர்வு தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்று பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் . அது தொடர்ந்து அரசின் சார்பில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது தொடர்ந்து போராடும் கைவிடப்பட்டது . இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்ட ஊழியர்களை சாம்சங் நிறுவனம் பணிநீக்கம் செய்ததால் அவர்களை மீண்டும் பணி வேண்டும் என்று சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர் . தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி கணேசன் தலைமையில் சாம்சங் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள்…
கல்லூரி மாணவியை திருமணம் செய்த திமுக நிர்வாகி ஒருவர், திமுக பிரமுகர்களுக்கு தன்னை இரையாக்க முயற்சிப்பதாக அம்மாணவி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். திரைப்பட பாணியில் நடந்துள்ள இச்சம்பவம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த10-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் பிறந்தநாள் விழா அரக்கோணத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ ரவியை, நட்டநடு சாலையில் சந்தித்த மாணவி, தனக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் எனக் கூறி கண்ணீர் விட்டுள்ளார். இது தொடர்பாக அப்பெண் கொடுத்த மனுவில், ”அரக்கோணம் காவனூர் பகுதியை சேர்ந்த தெய்வசாயல் என்பவர் திமுக ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். ஏற்கனவே திருமணமான அவர், தன்னை காதலிப்பதாக ஏமாற்றி கடந்த ஜனவரி 31-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். 2…
வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் டெல்லியில் வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெறுகிறது இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள செல்பவர்களுக்கு செய்யப்படவுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயகி தலைமையில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுக, அதிமுக, தேமுதிக, சிபிஐ, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம் எம் அப்துல்லா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.இக்கூட்டத்தில் டெல்லியில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து…
உறவுகளில் தனித்துவமானது “தாய்மாமன் “உறவு என்பார்கள் தமிழர்கள். தமிழில் தாய்மாமன் சார்ந்த சினிமாக்கள் கொட்டிக்கிடக்கிறது. அதிலிருந்து இந்த மாமன் எப்படி வேறுபடுகிறது. இன்பாவின் (சூரி) அக்கா கிரிஜாவுக்கு (சுவாசிகா) திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு ஒட்டுமொத்த அன்பையும் கொடுத்து, இன்பாவே வளர்க்கிறார். இந்தச் சூழலில் இன்பாவுக்கு ரேகாவுடன் (ஐஸ்வர்யா லட்சுமி) திருமணம் ஆகிறது. ஆனால், எப்போதும் மாமாவுடனே ஒட்டிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையால் இன்பாவுக்கும் ரேகாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் இன்பாவின் மனைவிக்கும் கிரிஜாவுக்கும் உறவு முறிகிறது. இறுதியில் விரிசல் சரியாகி உறவுகள் சேர்கிறதா? இல்லையா? என்பதுதான் கதை. இதன் கதையை நடிகர் சூரி எழுதி இருக்கிறார். தாய்மாமனுக்கும் மருமகனுக்குமான ஆத்மார்த்தமான அன்பை மையப்படுத்தியும் அதற்குள் குடும்ப சென்டிமென்டைத் தூக்கலாகவும் கலந்து எழுதிய கதையை இயல்பாகப் படமாக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். ராஜ்கிரண் – விஜி தொடர்பான காட்சிகளில், குட்டிபத்மினியும் பண்ணையாரும் படத்தில் வருவது…
இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனை பயன்படுத்திய அமெரிக்க பெண் மருத்துவரான ரேச்சல் அணி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரேச்சல் அணி புதுச்சேரியில் சந்திக்க வந்த அரவிந்தர் கண் மருத்துவமனை மருத்துவர் வெங்கடேசன் வரவழைக்கப்பட்டு அவரிடம் அமெரிக்க பெண் மருத்துவரை பாதுகாப்பாக போலீசார் ஒப்படைத்துள்ளனர். மேலும் அமெரிக்க பெண் மருத்துவர் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என கூறப்படும் நிலையில் அவர் கொண்டு வந்துள்ள தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன்,இருக்கும் இடத்தை சுற்றியுள்ள கட்டிடங்கள் இருப்பிடங்கள் அனைத்து தகவலும் தெளிவாக தெரிவிக்கும் நவீன தொழில்நுட்ப வசதி கொண்டுள்ளதாகவும் இது நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் . மேலும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் இந்த சேட்டிலைட் போன் புழக்கத்தில் இருந்தாலும் இது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது தற்பொழுது இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதட்டமான சூழல் காரணமாக…
ஆப்ரேஷன் சிந்தூரை வழி நடத்திச் சென்றவர்களில் முக்கியமான ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக அமைச்சரை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கும் நிலையில், போர் நடவடிக்கையிலும் மத அரசியலா? பாஜக எப்போது திருந்தும் என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் நடத்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூரை செயல்படுத்தியது. தாக்கிய பயங்கரவாதிகள் இந்தியர்களின் மதங்களை விசாரித்து விட்டுச் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது என்னதான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதலாக நடந்திருந்தாலும், சிலர் மத வெறுப்பின் கண்ணோட்டத்தோடும் இத்தாக்குதலைப் பார்க்கின்றனர். இந்நிலையில், ஆப்ரேஷன் சிந்தூரை வழி நடத்தியது மட்டுமன்றி, நாட்டுக்கு விளக்கம் அளித்த முக்கிய ராணுவ அதிகாரியான ராணுவ கர்னல் சோபியா குரேஷி மீதும் அந்த மத வெறுப்பு பாய்ந்திருக்கிறது. பாஜக…