Author: Editor TN Talks
கரூர் மாவட்டத்தில் சாமி கும்பிடுவதில் பட்டியலின மக்களிடம் பாகுபாடு காட்டுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசியலமைப்பின் பாதுகாவலர் நீதிமன்றம் தான் என்று தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டம் பொருந்தலூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது தீச்சட்டி எடுத்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் செல்வதை உறுதிப்படுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், நெரூர் வடக்கு பகுதி ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோவில் திருவிழாவின் போது தேரை, பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கும் கொண்டு செல்லவும், எவ்விதமான பாகுபாடும் இன்றி விழா நடத்தக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமூகத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றனர். அரசின் கொள்கைகள்…
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானுடனான பதற்றம் நீடிக்கும் நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ தளபதி உபேந்திர திவேதி ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். ஸ்ரீநகரில் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். அப்போது, பயங்கரவாதிகளுக்கு எதிராக வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்க தலை வணங்குவதாக அவர் தெரிவித்தார். இந்திய ராணுவ வீரர்களின் சேவைக்கு நாடே கடமைப்பட்டுள்ளது என்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் நாடே பெருமை கொள்வதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். இந்தியா தனது மக்களை பாதுகாப்பதுடன், எதிரி நாட்டுக்கு பதிலடி தருவதும் நிரூபணம் ஆகியுள்ளதாக பெருமிதம் தெரிவித்த அவர், முரட்டுத்தனமான நாட்டுக்கு அணு ஆயுதம் தேவையா? எனக் கேள்வி எழுப்பினார். பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பதை சர்வதேச அணு ஆயுத…
கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கியது ஐபிஎல் 2025. லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆப் சுற்றுகள் மே மாதம் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையில் கடந்த மாதம் 22 பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஐபிஎல் லீல் சுற்றுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் வரும் 17-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஜூன் 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. ஆகையால் தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா திரும்பும் படி பிசிசிஐ அறிவுறுத்தியது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் மீண்டும் இந்தியா திரும்ப தயங்குவதாகவும், அந்ததந்த அணி நிர்வாகத்தினர் மற்றும் பிசிசிஐ வெளிநாட்டு வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது. இப்படிப்பட்ட சூழலில் குஜராஜ் டைட்டன்ஸ் அணியிலிருந்து பட்லர் விலகுவதாக…
தமிழக காவல் நிலைய கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவருக்கு கை, கால் முறிவுக்கு சிகிச்சை வழங்கக் கோரி அவரது தந்தை இப்ராஹிம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இடது காலிலும், வலது கையிலும் ஏற்பட்ட எலும்பு முறிவுவுக்கு உரிய சிகிச்சை வழங்க சிறைத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கைது செய்யப்பட்ட நபருக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், கழிவறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டிருப்பதாகவும்…
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் தாமதித்து வருவதாக கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “ஆளுநர்கள் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியவுடன், அதற்கு மூன்று மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும்” என நேரக் கட்டுப்பாடு விதித்தது. இது, மசோதா தொடர்பான விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படும் முதல் முறையாகும். இந்த நிலையில், இன்று (மே 15) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அரசியல் சட்டத்தின் 143வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை பெறும் நோக்கில் மொத்தம் 14 கேள்விகளை எழுப்பியுள்ளார். இவை கீழ்வருமாறு உள்ளன: ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும் போது, அரசியல் சட்டத்தின் 200வது பிரிவின் அடிப்படையில் அவர் ஏற்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் என்ன? ஆளுநரிடம் மசோதா வந்தபின், அவர் அமைச்சரவையின் ஆலோசனைக்கு கட்டுப்படவேண்டிய நிலைதான் ஏற்கத்தக்கதா? 200வது பிரிவின் கீழ் கவர்னருக்கு…
அழகான ஒன் -லைன் அதற்கு ஏற்றது போல் அமைக்கப்பட்ட திரைக்கதை. பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கோ அல்லது பதைபதைக்கும் காட்சிகளோ எதுவும் இல்லை. இதற்கும் சர்சைகள் – பிரச்சனைக்குரிய கருத்துகள், என்று படம் முழுக்க எழுத ஆயிரம் விஷயங்கள் இருந்த போதிலும், முற்றிலுமாக அதை தவிர்த்து விட்டு எல்லோரும் ரசிக்கும் படியாக ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்த டூரிஸ்ட் பேம்லி படக்குழு .. டூரிஸ்ட் பேம்லி, கதை என்று ஒன்றுமில்லை, இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக புலம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு ஈழத்தமிழர் குடும்பம். அவர்களின் “அகதி” என்கிற சொற்பதத்தை தவிர்த்து இந்தியர்கள் ஆனார்களா ? இல்லையா ? என்பது தான் கதையே.. இயக்குநர் அபிஷன் ஜிவிந்த் அப்படி தான் சொல்ல நினைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. படத்தில் ஒரு சிங் குடும்பமும் இருக்கிறது. அவர்கள் ஈழத்தமிழ் பேசி நாயகன் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். “தமிழர்கள்” மட்டுமே ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று எந்த…
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர் ரவிமோகன். ஜெயம் படத்தில் தனது திரைவாழ்வை தொடங்கிய அவர் அதன் காரணமாகவே ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பெயரை ரவிமோகன் என மாற்றிக் கொண்டார். திரைப்படங்களில் வெற்றிநாயகனாக வலம்வந்த அவரது சொந்த வாழ்க்கையில் புயல் வீசியது. 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் ரவிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆரவ் மற்றும் ஆயான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த அவர்களின் வாழ்வினில் சில வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு தனது மனைவியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்தார். இந்நிலையில் கெனிஷா என்ற நடனக்கலைஞருடன் ரவி மோகன் இணைந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு தகுந்தார்போல் அவரும் பொதுநிகழ்ச்சிகளில் சமீபமாக கெனிஷாவுடன் தென்பட்டார். இதுகுறித்து ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இரண்டு பிள்ளைகளின் தகப்பன் என்பதை ரவிமோகன் மறுக்க முடியாது…
தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நகைச்சுவை நடிகர் என்றால் அது வைகைப் புயல் வடிவேலு தான். தனது எதார்த்தமான பாடி லேங்குவேஜுடன் கூடிய நகைச்சுவை நடிப்பால் நம்மை கவர்ந்த வடிவேலு சமீப காலமாக வருடத்திற்கு ஒரு படம் என்று நடித்து வருகிறார். ஹீரோவுடன் நகைச்சுவை நடிகர்கள் இணைந்து கொடுக்கும் நகைச்சுவை காட்சிகள் என்றென்றும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடிக்கும். அப்படி வடிவேலு இயக்குநர் சுந்தர்.சி-உடன் இணைந்து நடித்திருந்த ’தலைநகரம்’ திரைப்படத்தில், இருவரின் நகைச்சுவை காட்சிகள் இன்று வரையிலும் ஒரு மாஸ்டர் பீஸ். அதேப் போல 2010-ம் ஆண்டு இருவரது நடிப்புல் வெளியான ’நகரம் மறுபக்கம்’ திரைப்படத்தில் வரக் கூடிய நகைச்சுவை காட்சிகளும் இன்று வரை பிரபலம். சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த அனைத்துப் படங்களுமே நகைச்சுவைக்கு பிரபலம் தான். அப்படியிருக்க கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் இருவரும் சேராமல் இருந்து வந்தனர். 14 வருடங்கள் கழித்து இருவரும் ’கேங்கர்ஸ்’…
கர்நாடகாவில் 14 வயது சிறுவனை 12 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தை சேர்ந்த நண்பர்களான 14 வயது மற்றும் 12 வயது சிறுவர்கள் இருவரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் 8 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இருவரும் ரூ.5 மதிப்புள்ள தின்பண்டத்தை கடையில் வாங்கி சாப்பிட்டுள்ளனர். தின்பண்டத்தை பகிர்ந்து கொள்வதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கைகலப்பாகி இருவரும் உருண்டு பிரண்டு சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த 12வயது சிறுவன், கத்தியை எடுத்து வந்து 14 வயது சிறுவனை சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடியுள்ளான். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் குறித்து…
உலகப் பிரசித்தி பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். மலர் கண்காட்சிக்காக 1.75 லட்சம் ரோஜா, கார்ப்பரேஷன், கிரைசாந்தி உள்ளிட்ட மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான ராஜா சோழன் அரண்மனை, அரண்மனை நுழைவாயில், ராஜா சிம்மாசனம், அன்னப் பறவை, யானை, புலி உள்ளிட்ட 24 மலர் சிற்ப வடிவமைப்புகளை பார்வையிட்டு வருகிறார். இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சரும், நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மு.பெ சாமிநாதன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, தமிழக அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.