Author: Editor TN Talks

இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு, தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி, கீழடி அறிக்கை எப்போது வரும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துரோகங்களை தமிழ்நாடு கணக்கிடுவதாகக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் சமக்ரசிக்‌ஷா அபியான் கல்வி நிதி எப்போது வரும்? தொகுதி மறுசீரமைப்பில், தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடரும் மாநிலங்கள் மீது நிதிச்…

Read More

தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. திமுக தரப்பில் மாவட்ட நிர்வாகிகளை முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் வரவழைத்து கருத்துக் கேட்பு நடத்துவது, காணொளி வாயிலாக மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துரையாடல், திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி மண்டல மாநாடு, திருப்பூரில் மகளிரணி மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வார்டு பொறுப்பாளர்கள் கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் அதிமுக தரப்பில் அக்கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மாநிலம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். மேலும் மாவட்டச் செயலாளர்களை வரவழைத்து எம்.ஜி.ஆர். மாளிகையில் நேரில் சந்தித்து கலந்தாய்வு நடத்தியுள்ளார். பாமகவில் அன்புமணியும், பாஜகவில் நயினார் நாகேந்திரனும் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக…

Read More

இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருவதை ஒட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தல், பிரச்சாரம் உள்ளிட்டவைகளில் தீவிரமடைந்து வருகின்றன . அந்த வகையில் அதிமுக, பாஜகவுடன் டிடிவி தினகரனின் அமமுகவும் கூட்டணி சேர்ந்துள்ளன. இந்த சூழலிப் இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து இன்று மதியம் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் மோடி மதியம் 2.15 மணிக்கு ஹெலுகாப்டர் மூலம் மதுராந்தகம் புறப்படுகிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரை சந்தித்து பேசுகிறார். மாலை 3.10 மணிக்கு பொதுக்கூட்டத்தில் உரையாடும் மோடி தனது பேச்சை முடித்து கொண்டு 4 மணியளவில் சென்னை விமான நிலையம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுகிறார். மோடியின் வருகையை ஒட்டி…

Read More

தவெகவில் ஏன் சேர்ந்தோம் என்று செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் தவெகவில் விஜயின் கீழ் அனைவரும் தொண்டர்கள் தான் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் அனந்த் கூறியுள்ளார். பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 392 பேர் இன்று தவெகவில் இணைந்தனர். சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஆனந்திடம் செங்கோட்டையனிடம் அதிருப்தி உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆனந்த், நாங்கள் ஒற்றுமையாகதான் இருக்கிறோம். எங்களுக்குள் சின்ன சின்ன சண்டைகள் கூட இல்லை. செங்கோட்டையனுடன் எந்த மனக் கசப்பும் இல்லை. எல்லோரும் விஜய் தலைமையின் கீழ் தொண்டர்கள் தான் என்றார். முன்னதாக தவெகவின் தேர்தல் பிரச்சார குழுவில் செங்கோட்டையனுக்கு 3வது இடம் வழங்கப்பட்டிருப்பதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்களுடன் பேச வேண்டும் என்றாலும், தவெக பொதுச்செயலாளர் ஆனந்தின் அனுமதி பெற்றே பேச வேண்டும்…

Read More

நாக தோஷமும், கேது தோஷமும் இருப்பவர்கள் கீழ்க்கண்ட திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீமாகாளேஸ்வரர் கோயிலில் ராகுவும், கேதுவும் மனித உருவில் காட்சியளிக்கின்றனர். இவர்களை செவ்வாய், வெள்ளி, ஞாற்று கிழமைகளில் ராகு காலத்தில் வழிபட்டால் தோழ நிவர்த்தி பெறலாம். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூரில் உள்ள மூலவர் நாகநாதர் அம்பாள் பிரகதாம்பாள் ஆலயம் நாக தோஷத்தை நீக்க கூடியது. இதே பேரையூரில் இருக்கும் நாகநாதர் சுவாமியை தரிசித்தாலும் தோஷ பலனை அடையலாம். இங்கு போக முடியவில்லை என்றால் திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணங்குடி பகுதியில் இருக்கும் ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஆலயமும் ராகு கேதுவுக்கு சிறந்த பரிகாரத் தலமாகும். இதே மாவட்டத்தில் இருக்கும் பாமணி தலத்தில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் நாதநாதரை வழிபடலாம். இங்குள்ள ஆதிசேஷனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நாகதோஷமும், கேது தோஷமும் நிவர்த்தி அடையலாம். நாகை மாவட்டத்தில் உள்ள நாகநாத சுவாமி, திரும்பரத்தில் உள்ள சௌந்தரநாயகி…

Read More

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், ரூ.13 கோடி செலுத்தக் கூறி அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு வருமான வரித்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் இன்னொரு வாரியாக கூறப்படும் தீபக்கும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தீபா தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது வருமான வரி பாக்கி முதலில் ரூ.36 கோடி என்றும், பின் ரூ.13 கோடி  செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான தொகையை தெரிவித்தால்  இந்த நோட்டீசை செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைகேட்ட நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு…

Read More

அதிமுக ஒரு மூழ்கும் கப்பல், அதில் ஏறி பயணிப்பவர்கள் அனைவரும் மூழ்குவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் 49வது புத்தக கண்காட்சியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பார்வையிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புத்தகங்களை வெறும் காகிதங்களாகப் பார்க்காமல், ஒரு அறிவு ஆயுதமாக பார்க்க வேண்டும் என்றும், வாசிப்பு பழக்கம் கல்வித்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் கூறினார். தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்தோடு ஒப்பிடும் அறிவு ஜீவிகள் இங்கே வந்து இந்த கூட்டத்தைப் பார்க்க வேண்டும் என்று கடுமையாக  சாடியவர், தமிழ்நாட்டில் அறிவுத்திறன் வாய்ந்த அறிவாளிகள் இருப்பதால் தான் இத்தனை பேர் வந்து புத்தக கண்காட்சியை பார்வையிடுவதாக தெரிவித்தார். தொடர்ந்து அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர் தேசிய ஜனநாயக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். பாஜக, அதிமுக, அமமுக கூட்டணி குறித்து பேசியவர், தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட இயற்கைக்கு…

Read More

புரட்சித்தலைவி ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவின் தலைமைப் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தபோது அவருடைய நாட்கள் எண்ணப்படுவதாக ஆரூடம் கணித்தவர்கள் ஏராளம் பேர். ஆனால் அவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு முழுதாக நான்கரை ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியில் இருந்தார் எடப்பாடி பழனிசாமி. அதிர்ஷ்டவசமாக பதவிக்கு வந்தவர் என்று ஏளனம் பேசியவர்கள் பலரின் வாயை அடைக்கும் வகையில், தனது செயல்பாடுகளால் அட போட வைத்தார் எடப்பாடி பழனிசாமி. குடிமராமத்து எனும் ஒற்றைத் திட்டம் போதும் அவரது ஆட்சிகாலத்தின் மாண்பினை எடுத்துரைக்க. இத்தனை ஆண்டுகாலம் உரிய பராமரிப்பின்றி இருந்த தமிழக நீர்நிலைகளை சிறப்பாக மீட்டெடுத்து இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக அதனை மாற்றிக் காட்டினார். அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வால் புறக்கணிக்கப்படும் சூழல் உருவானபோது ஆளுநரின் உத்தரவு வரும்வரை காத்திருக்காமல் தமிழக அரசின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 7.5 சதவித உள்ஒதுக்கீட்டை கொண்டு வந்து கிராமப்புற மாணவர்களும் இன்று தோளில் ஸ்டெதெஸ்கோப்…

Read More

ஆபரண தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.3,600 வரை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் ஏற்றத்தை கண்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,610க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,08,800 க்கு விற்பனையானது. காலையில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை மாலை ஜெட்வேகத்தில் எகிறியது. மாலை பங்கு சந்தை முடியும் போது ஒரு சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,11,200-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.290 வரை தங்கம் உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். கடுமையான விலை உயர்வால் நடுத்தர மக்களால் தங்கம் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தங்கத்துக்கு போட்டியாக வெளியின் விலையும் கடுமையாக உய்ரந்துள்ளது வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.340க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளிக்கு ரூ. 22,000 வரை உயர்ந்து…

Read More

திமுக கூட்டணி தொடர்வதால் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தாதீர்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனத்திற்குப் பிறகு முதல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்க்குழு கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆக்கப் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்க 52 செயற்குழு உறுப்பினர்கள், 39 சிறப்பு அழைப்பாளர்கள் என 91 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 60…

Read More