Author: Editor TN Talks
சட்டப்பேரவையில் தான் பேசும்போது மைக் ஆஃப் செய்யப்பட்டு விட்டதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. அவை தொடங்கியதும் உள்ளே வந்த ஆளுநர் ஆர். என்.ரவி சில நிமிடங்களிலேயே அவையில் இருந்து உடனடியாக வெளியேறினார். இதனால் அவையில் சில நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஆளுநர் தனது உரையை தொடங்காமல் புறக்கணித்து வெளியேறியதாக கூறப்பட்டது. தான் பேசும்போது மைக் ஆஃப் செயப்பட்டு விட்டதாகவும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்ததாக 13 காரணங்களை ஆளுநர் மாளிகை வெளியிட்டது. இந்த நிலையில் ஆளுநரின் குற்றச்சாட்டு தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். அவர் பேசும்போது, மகக்ளார் தேர்வு செய்யப்பட்ட அரசை ஆளுநர் தொடர்ந்து அவமதித்து வருகிறார். அரசு நிர்வாகத்தின் நிறை குறைகளை அரசியல்வாதியை போல் ஆளுநர் பேசுவது…
ஜனநாயகன் படத்தின் சென்சார் தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திக்கப்பட்டது. ஜனவரி 9ம் தேதி ரிலீசாக இருந்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட்டது. தணிக்கை சான்றிதழ் தொடர்பான மேல்முறையீட்டு மனுவின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பிரதீப் ராய் ஆகியோர் ஆஜராகினர். சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகினர். விசாரணையின் வாதம் தொடங்கியதும் முதலில் வாதிட்ட சென்சார் போர்டு தரப்பு, படத்தை மறு ஆய்வுக்குட்படுத்த விடாமல் சான்றிதழ் வழங்க தனி நீதியின் உத்தரவு பெற்றதாகவும், தங்கம் மீது தவறு இல்லை என்றும் வாதிடப்பட்டது. தொடர்ந்து தங்களின் வாதத்தை படத்தின் தயாரிப்பு குழு தொடங்கியது. அப்போது, சென்சார் போர்டு சொன்னபடி சில காட்சிகளை நீக்கியும் படத்திற்கு சான்று கிடைக்கவில்லை என்றும்…
பாஜகவின் தேசிய தலைவராக இருந்த ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அவருக்கு பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்வதாக தேசிய தலைமை அறிவித்தது. அதன்படி பாஜகவின் தேசிய தலைவராக போட்டியின்றி நிதின் நபீன் தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்று கொண்டார். டெல்லியில் நடைபெற்ற கட்சி தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜகவின் தலைவர்கள் பங்கேற்றனர். புதிதாக தலைவராக தேர்வான நிதின் நபீனுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, கட்சி என்று வரும் போது நபீன் தான் எனக்கு பாஸ். நான் கட்சியின் ஒரு சிறிய தொண்டன். மதிப்பிற்குரிய நிதின் நபீன் நம் அனைவருக்கும் தலைவர். பாஜகவை நிர்வகிப்பது மட்டும் அவரது கடமை இல்லை, ஜனநாயக கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதும் அவரது கடமை” என புதிதாக தேர்வான தலைவரை உயர்த்தி மோடி பேசினார்.
ஜனநாயகன் படத்திற்கு எதிரான புகாரோ, மறு ஆய்வு தொடர்பான நகலோ தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வாதிட்டுள்ளது. ஜனவரி 9ம் தேதி ரிலீசாக இருந்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட்டது. தணிக்கை சான்றிதழ் தொடர்பான மேல்முறையீட்டு மனுவின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பிரதீப் ராய் ஆகியோர் ஆஜராகினர். சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகினர். வழக்கு விசாரணையின் போது படத்தை யார், யார் பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய சென்சார் தரப்பு, படத்தை அட்வைசரி போர்ட் உறுப்பினர்கள் பார்த்ததாகவும், படத்திற்கு எதிராக புகார் அளித்தவர் ஜனநாயகத்தை பார்க்கவில்லை…
தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவது தொடர்கதையாகி வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே டயர் வெடித்து அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக வெளிவந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். விண்ணை தொடும் ஆம்னி பேருந்து கட்டண கொள்கையை திமுக அரசு கண்டு கொள்ளாத வேளையில், கூட்டமாக இருந்தாலும் பரவாயில்லை என அரசு பேருந்தில் பயணித்தால், ஓட்டை உடைச்சல் பேருந்துகள் மூலம் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவது நியாயமா? திமுக ஆட்சியில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையான நிலையில், மக்களின் அடிப்படை போக்குவரத்து தேவையை கருத்தில் கொள்ளாது, விண்டேஜ் காரை ஓட்டி போட்டோ ஷூட் நடத்துவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக…
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திடீரென அரசு பேருந்து தீ பற்றி எரிந்ததால் பயணிகள் அலறியடித்து ஓடினர். குமுளியில் இருந்து திண்டுக்கல் வழியாக திருப்பூர் சோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்து அங்கிருந்து திருப்பூருக்கு செல்வதற்கு பேருந்து பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது திடீரென பேருந்து இன்ஜினில் இருந்து கரும்புகை ஏற்பட்டு பேருந்தை சூழ்ந்து கொண்டதுடன் தீ பற்றியது. இதனால் பதறியடித்த பயனிகள் பேருந்தை விட்டு கீழே இறங்கி ஓடினர். அப்போது அங்கு வாகனத்தில் இருந்த தண்ணீரை கொண்டு வந்து பற்றி எரிந்த பேருந்தின் மீது ஊற்றி அப்பகுதியில் இருந்தவர்கள் அனைத்தனர். பேருந்து பற்றி எரிந்ததால் திடுக்கிட்ட பொதுமக்கள், தரமில்லாத பேருந்துகளை அரசு இயக்குவதாகவும், மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு தரமற்ற பேருந்துகள் இயக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தை அமாவாசையை ஒட்டி திருப்பதியில் உள்ள காளஹஸ்தி சிவன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தை அமாவாசையை ஒட்டி நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை தமிழக மக்கள் வழிபட்டனர். அதன் தொடர்ச்சியாக திருப்பதியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களன ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு சிறப்பு அலங்காயம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் காளஹஸ்தியில் உள்ள பரத்வாஜேஸ்வரர் கோயில் வளாகத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆதாரனைகளும் நடத்தப்பட்டு, கலசங்களுக்கு வேத பண்டிதர்கள் சிறப்பு பூஜை செய்தனர். இதில் காளஹஸ்தி கோயில் அறங்காவலர் குழு தலைவர் கொட்டே. சாய் பிரசாத், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இறுதியாக உற்சவர் மூர்த்திகளின் நான்கு மாட வீதி உலாவும் நடைபெற்றது.
மதுரையில் ஓடி கொண்டிருக்கும் அரசு பேருந்தின் டயர் வெடித்து கழன்று தனியாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் 55 பேர் பயணித்துள்ளனர். கடட்டபுளி நகர் பகுதிக்கு அருகே மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தின் பின்பக்க டயர் வெடித்தது. அப்போது ஒட்டுநர் பிரேக் போட்டதால் பேருந்தின் பின்பக்க டயர் துண்டாகி தனியாக ஓடி விழுந்தது. பின்னர் நிலைத் தடுமாறிய பேருந்து சாலையின் இடதுபுறம் சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
கரூர் பெருந்துயரம் தொடர்பாக டெல்லியில் தவெக தலைவர் விஜயிடம் 2வது முறையாக சிபிஐ நடத்திய விசாரணை நிறைவுப்பெற்றது. கரூரில் செப்டம்பர் 27ம் தேதி தவெக பிரச்சாரத்தில் நடந்த துயரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தீவிரமடைந்து வருகிறது. தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி முடித்த சிபிஐ அடுத்ததாக தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பி வைத்தது. அதன்படி, கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவகத்தில் ஆஜரான விஜயிடம் கரூரில் நடந்தது தொடர்பாக சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு பிறகு இன்று மீண்டும் விசாரணைகு விஜய் ஆஜரானார். அவரிடம் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது தொடர்ந்து பிரச்சாரம் செய்தது ஏன்? எப்போது பேச்சை முடித்தீர்கள், பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு ஏன் தாமதமாக போனீர்கள்? அனுமதிக்கப்பட்ட கூட்டத்தை விட அதிகமானோர் வந்தது எப்படி? தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசியபோது பார்க்கவில்லையா? வாகனத்தின்…
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 2வது முறையாக விசாரணைக்கு ஆஜரான விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு திணறடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 27ம் தேதி நடந்த கரூர் துயரம் தொடர்பாக டெல்லியில் நடந்து வரும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி தவெக தலைவர் விளக்கம் அளித்து வருகிறார். கடந்த 12ம் ஆஜரான விஜயிடம் கரூரில் நடந்தது தொடர்பாக சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு பிறகு இன்று மீண்டும் விசாரணைகு விஜய் ஆஜரானார். அவரிடம் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது தொடர்ந்து பிரச்சாரம் செய்தது ஏன்? எப்போது பேச்சை முடித்தீர்கள், பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு ஏன் தாமதமாக போனீர்கள்? அனுமதிக்கப்பட்ட கூட்டத்தை விட அதிகமானோர் வந்தது எப்படி? தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசியபோது பார்க்கவில்லையா? வாகனத்தின் மேலே நின்றபோது கீழே நடந்ததை பார்க்கவில்லையா? அவ்வளவு நெரிசலிலும் வாகனத்தை முன்னே செலுத்தியது ஏன்?…