Author: Editor web1
கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி (LDF) பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளநிலையில், காங்கிரஸ் கூட்டணி (UDF) பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளது. கேரளாவில் கடந்த 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அடுத்தாண்டு வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட இந்த தேர்தல் பெரும் மாற்றத்தை தந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். மாலை 5 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 941 ஊராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 504 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 341 இடங்களிலும், பாஜக கூட்டணி 26 இடங்களிலும் முன்னிலை வகித்தது. 87 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 54 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 28 இடங்களிலும், பாஜக கூட்டணி 1 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது. இதேபோன்று, 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4 (கொச்சி, கொல்லம், திருச்சூர், கண்ணூர்), இடதுசாரி கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி தலா ஒரு இடங்களில் முன்னிலை வகித்தது.…
ரஷ்யா- உக்ரைன் இடையேயான மோதல் 3ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். 2022 பிப்ரவரியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4வது ஆண்டை நெருங்கி வரும் போரில் ஏராளமான உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே ரஷ்யா, உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டார். அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இருப்பினும் அடுத்த கட்ட முயற்சியாக, போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை அதிபர் டிரம்ப் விரைவுபடுத்தியுள்ளார். இந்தநிலையில், அமைதி ஒப்பந்தத்தை ஏற்க ரஷ்யா மற்றும் உக்ரைன் காலதாமதம் செய்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இருநாட்டு தலைவர்கள் வெறும் சந்திப்புக்காக மட்டுமல்லாமல் தீர்வுக்காகவும் ஆலோசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், இருதரப்பு மோதலில் உயிரிழப்புகளை தடுக்க அமெரிக்க விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இருநாட்டுக்கும்…
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தின் 2ம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார். சரத்குமார், சண்முக பாண்டியன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பொன்ராம், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தின் 2ம் பாகத்திற்கான அப்டேட் குறித்த அறிவிப்பை தெரிவித்தார். அதன்படி, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் 2ம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை மனதில் வைத்து கதையில் சில மாற்றங்களை செய்து வருவதாக கூறினார். கதை முழுமையாக தயாரானதும் சிவகார்த்திகேயனிடம் கூறி, அதனை அவர் ஒப்புக் கொண்டால் படத்தை தொடங்க இருப்பதாக பொன்ராம் தெரிவித்தார்.
சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு அடுத்த மாதம் 10ம் வரை முன்பதிவு நிறைவடைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. சுவாமி தரிசனத்துக்கு கடந்த ஆண்டுகளைப் போலவே ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. அதன்படி, துவக்கத்தில் தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பக்தர்களும், உடனடி தரிசன முன்பதிவு மூலம் 20 பக்தர்களும் அனுமதி பெற்றனர். இந்தாண்டும் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அதிகரிக்கத் தொடங்கின. இதனையடுத்து, உடனடி தரிசன பதிவை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில், மண்டல பூஜைக்கு பிறகு நடைபெற உள்ள மகர விளக்கு பூஜைக்கான முன்பதிவும் தற்போது நடந்து வருகிறது. அதன்படி, ஜனவரி 10ம் தேதி வரை முன்பதிவு…
2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (டிச. 12) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பல்வேறு முக்கிய திட்டப் பணிகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதில், வரும் 2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தப் பணிகளுக்காக ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ், நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு உலகிலேயே மிகப்பெரிய நிர்வாக நடவடிக்கை என்றார். இந்த…
ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை அதிகரித்து வரலாற்றில் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெள்ளி விலையும் வெகுவாக உயர்ந்து வருகிறது. அதன்படி, இன்று (டிச. 12) காலை தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு கிராமுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,250-க்கும், சவரன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில், மாலையில் மீண்டும் அதிகரித்த தங்கம் விலை, நகைப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.98,960க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,370க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.1,600 உயர்ந்த நிலையில் மாலை ரூ.960 உயர்ந்தது. அதேபோன்று, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம்…
நடிகர் சூர்யாவின் 47வது திரைப்படத்தை பிரபல OTT நிறுவனம் மிகப் பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘சூர்யா 46’ படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில், ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இந்தப் படத்தில் காவல்துறையாக சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவுடன், ‘பிரேமலு’ ஹீரோ நஸ்லேன் மற்றும் நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்தநிலையில், ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சூர்யா 47’ படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த போது, அவர் மீது ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அப்போது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை இல்லாததால், 2022 ஏப்ரலில் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். பின்னர் பொறுப்பேற்ற பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, இம்ரான் கான் மீது, பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது. ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்ட இம்ரான் கான், கடந்த 2023 ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கானை சந்திக்க அவரது குடும்பத்தினர் நீதிமன்ற ஆணை பெற்றிருந்தும், அவர்களுக்கும், இம்ரான் ஆதரவாளர்களுக்கும் போலீசார் அனுமதி மறுத்து…
2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் டிசம்பர் 15 முதல் 23 வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அடுத்தாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அரசியல் கட்சிகளும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்தநிலையில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இன்று (டிச. 11) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப…
10-வது நாளாக இன்று (டிச. 11) சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த 8 நாட்களாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சேவையால் இண்டிகோ நிறுவனம் கடும் விமர்சனத்தையும், பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றது. இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று (டிச. 10) சிங்கப்பூர், பாங்காக், பினாங்கு, குவைத், மும்பை, கொல்கத்தா, கவுகாத்தி, கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 33 இண்டிகோ விமானங்களும், சென்னைக்கு வரவேண்டிய 37 விமானங்களும் என மொத்தம் 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தாலும் பயணிகள் முன்பதிவு ரத்து போன்ற காரணங்களால் விமான சேவையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று 10வது நாளாக புறப்பட வேண்டிய…