Author: Editor web1
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் குறித்து மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் மத்திய அரசுக்கு 3 முக்கிய கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். டிசம்பர் 1ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து, டிசம்பர் 9ம் தேதி SIR தொடர்பாக விவாதம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மக்களவையில் இன்று (டிச. 9) விவாதம் நடைபெற்றது. காலையில் விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி, நடுநிலையான அமைப்பான தேர்தல் ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் சூழல் உருவானது துரதிருஷ்ட வசமானது என குறிப்பிட்டார். SIR விவகாரத்தில் வெளிப்படையான நடவடிக்கைகள் இருக்கும் வகையில் செயல்பாடுகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து நடைபெற்ற தேர்தல்…
‘எஸ்கே 26’ படம் தொடர்பாக வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் கூட்டணி அடுத்த இணைய உள்ளது. அந்த வகையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘எஸ்கே 26’ படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனின் தோற்றம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றிய பேசிய வெங்கர் பிரபுவும், சிவகார்த்திகேயன் உடனான திரைப்படம் நிச்சயம் வித்தியாசமான நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். கதையைக் கேட்ட தயாரிப்பு நிறுவனமும், சிவகார்த்திகேயனும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதுவரை பார்க்காத எஸ்கே-வை இந்தப் படத்தில் நிச்சயமாக பார்க்கலாம் என்றும் வெங்கட் பிரபு கூறியிருந்தார். இந்தநிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட்பிரபு இருவரும் கிராபிக்ஸ் தொழில்நுட்ப பணிகளுக்காக அமெரிக்காவுக்கு பயணித்திருப்பதற்கான அறிவிப்பாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மைக்ரோசாப்ட் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் CEO சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO சத்ய நாதெல்லா, டெல்லியில் இன்று (டிச. 9) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு, உள்கட்டமைப்பு திறன் ஆகியவற்றை உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு துறையைப் பொறுத்தவரை இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். சத்ய நாதெல்லா உடனான சந்திப்பு குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலாக அமைந்ததாக பிரதமர்…
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் டிசம்பர் 21ம் தேதி தொடங்கி டிசம்பர் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. விசாகப்பட்டித்தில் முதல் 2 போட்டிகளும், எஞ்சிய 3 போட்டிகள் திருவனந்தபுரத்திலும் நடைபெற உள்ளன. இந்தநிலையில், இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீராங்கனை உள்பட புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த குணாலன் கமலினி, வைஷ்ணவி ஷர்மா இருவருர் அறிமுக வீராங்கனைகளாக களமிறங்க உள்ளனர். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான கமலினி மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 8வது பயங்கரவாதியை தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில்நிலையம் சிக்னல் அருகே கடந்த நவம்பர் 10ம் தேதி மாலை பயங்கர கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், 15 பேர் உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தையடுத்து பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், உமர் நபி என்பவன் மனித வெடிகுண்டாக செயல்பட்டு, தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. மேலும், உமர் நபிக்கு நெருக்கமானவர்களை NIA கைது செய்து வருகிறது. கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அரியானா மாநிலம் பரிதாபாதில் உள்ள அல்பலாஹ் பல்கலையில் பணியாற்றும் மருத்துவர் உள்ளிட்ட 7 பயங்கரவாதிகளை NIA அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும்,…
இந்தோனேஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் 7 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் குடியிருப்புகளுடன் விவசாயத் துறைக்கு தேவையான பொருட்களை தயாரித்து கொடுக்கும் அலுவலகம் ஒன்றும் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில், இன்று (டிச. 9) பிற்பகல் அடுக்குமாடிக் கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் முதல் மாடியில் ஏற்பட்ட தீ, சிறிது நேரத்தில் மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவத் தொடங்கியது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. தீ விபத்தில் சிக்கியும், மூச்சுத் திணறியும் 20 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த பயங்கர தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர் ஹார்திக் பாண்டியா இரட்டை சாதனை படைப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியநிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 20 ஓவர் தொடர் நாளை (டிச. 9) தொடங்குகிறது. ஆசிய கோப்பை போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த ஹார்திக் பாண்டியா, தற்போது காயத்தில் இருந்து குணமாகி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். இந்த தொடரில் அவர் இரட்டை சாதனை படைப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுவரை இந்திய அணிக்காக 120 T20 போட்டிகளில் விளையாடி உள்ள பாண்டியா, 1860 ரன்கள் மற்றும் 98 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.…
வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ள சிவகார்த்திகேயனின் கெட்டப் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. அமரன், மதராஸி திரைப்படங்களைத் தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தநிலையில், விஜயின் 68வது படமான GOAT-க்கு பிறகு, இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்துடன் மீண்டும் வெங்கட் பிரபு இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில், சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு கூட்டணி அமைய உள்ளதாக உறுதியான தகவல் வெளியானது. இதுபற்றி அண்மையில் பேசிய வெங்கட் பிரவு, சிவகார்த்திகேயனுடனான படம் வித்தியாசமான நகைச்சுவை படமாக இருக்கும் என்றார். தயாரிப்பு நிறுவனத்துக்கும், சிவகார்த்திகேயனுக்கம் கதை மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறினார். இந்த திரைப்படத்தில் வித்தியாசமான சிவகார்த்திகேயனை பார்க்கலாம் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தார். இந்தநிலையில், வெங்கட் பிரபு…
இந்தியாவில் உள்ள சீன தூதரகம் ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை வரும் 22ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான சீன தூதர் ஜூபெய்ஹோங் தமது X வலைதள பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தில் 2025 டிசம்பர் 22 அன்று முதல் சீன ஆன்லைன் விசா விண்ணப்ப முறை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் https://visaforchina.cn/DEL3_EN/qianzhengyewu என்ற இணையதள முகவரியில் படிவத்தை நிரப்பி ஆன்லைனில் பதிவேற்றலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கூடுதல் விவரங்கள் தேவைப்படுபவர்கள் டெல்லியில் உள்ள சீன விசா விண்ணப்ப சேவை மையத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அதன் அலுவலக நேரமான காலை 9 மணி முதல் மதியம் 3 வரை அணுகலாம் என்று சீன தூதர் ஜூபெய்ஹோங் தெரிவித்துள்ளார். வேறு தகவல்கள் எதுவும் தேவைப்பட்டால், +91-9999036735 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் தமது…
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை (டிச. 9) விசாரணைக்கு வருகிறது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின், அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் இந்த தீபத்தை, மலையில் உள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். அந்தப் பகுதியில் சிக்கந்தர் தர்கா உள்ளதாகவும், தீபத்தூணுக்கும், தர்காவுக்கும் குறுகிய இடைவெளி இருப்பதால், அங்கு தீபம் ஏற்றும்பட்சத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ம் தேதி உத்தரவிட்டார். ஆனால், தீபநாளான 3ம் தேதி வழக்கம்போல் உச்சி…