Author: Editor web3
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக அதிக வெற்றி சதவீதம் கொண்ட டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் திகழ்கிறார். 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் தனது முதல் பெரிய கோப்பையை வென்ற பிறகு, சூர்யகுமார் யாதவ், தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரையும் 2-1 என ஜெயித்து அதிரடி காட்டினார். அதற்கு முன், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து T20I போட்டிகளில் 4-1 என தொடர் வெற்றி பெற்றது. இப்போது, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் T20 போட்டியிலும் 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் இலங்கை அணியை 3-0 என வீழ்த்தி, சுர்யகுமார் யாதவ் தனது அதிகாரப்பூர்வ T20I கேப்டன்சி பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார். குறுகிய வடிவ கிரிக்கெட்டில் சூர்யகுமார்…
சென்னையில் இன்று ஒரே நாளில் புதிய உச்சமாக வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.8000 உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. இதேபோல், தங்கம் விலை ஒரு சவரனுக்கு விலை ரூ.240 உயர்ந்து ரூ.96,24க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணகளால் முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று((டிச.10) சற்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் நேற்று (டிச.9) ரூ.96,000க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.240 உயர்ந்து ரூ.96,240க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.12,030க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.207 ஆகவும் ஒரு கிலோ ரூ.8,000 உயர்ந்து…
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை திமுக இன்று தொடங்கவுள்ளது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் அதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இதன் அடிப்படையில் திமுகவும் அதிகபணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. பீகாரை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் SIR பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நாளை (டிச.11) உடன் முடிவடையவுள்ளது. இந்தநிலையில், திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை இன்று தொடங்கவுள்ளது. அதன்படி, தேனாம்பேட்டையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் பங்கேற்று பரப்புரையை தொடங்கி வைக்கவுள்ளார். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவினரை உற்சாகத்துடன் செயல்பட வைப்பதே என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி திட்டமாகும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதிசெய்வதுதான் இதன் முதன்மை இலக்கு. பூத் கமிட்டி உறுப்பினர்களுக்குத் தேர்தல் பணிகள், வாக்காளர்களைச்…
மக்கள் அன்றாடம் சந்திக்கும் இடர்களை குறைப்பதே சீர்திருத்தம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இண்டிகோ நெருக்கடி காரணமாக கடந்த ஒரு வாரமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். இதையடுத்து, புதிய விதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் டெல்லியில் நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ப்போது, சமீபத்தில் முடிவடைந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் 10வது முறையாகப் பதவியேற்றார். சட்டங்கள் குடிமக்களுக்கு சுமையாக இல்லாமல், அவர்களின் வசதியை மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, விதிகளும் சட்டங்களும் நல்லதுதான், ஆனால் அமைப்பை சரிசெய்ய மக்களைத் துன்புறுத்துவது சரியல்ல”.…
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லையில் மீண்டும் வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன. தாய்லாந்து F-16 போர் விமானங்கள் கம்போடிய இராணுவத் தளத்தின் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஃபிஃபா அமைதி பரிசைப் பெற்ற 24 மணி நேரத்திற்குப் பிறகு, தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே மீண்டும் வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன.வீரர்களுக்கு இடையிலான மோதலைத் தொடர்ந்து, தாய்லாந்து கம்போடியா மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரு வீரர் கொல்லப்பட்டதாகவும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது, அதே நேரத்தில் இரு நாடுகளைச் சேர்ந்த மக்களும் மீண்டும் எல்லைப் பகுதிகளை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். அறிக்கைகளின்படி, திங்கள்கிழமை அதிகாலையில் தாய்லாந்து கம்போடியா மீது F-16 போர் விமானங்களை ஏவியது. கம்போடிய துருப்புக்கள் ஒரு தளமாக மாற்றிய ஒரு கேசினோ கட்டிடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. கம்போடியாவின் தாக்குதலைத் தொடர்ந்து…
விதிகளை மீறும் எந்தவொரு விமான நிறுவனத்திற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், சமீபத்திய விமான ரத்துகள் மற்றும் தாமதங்கள் விமான நிறுவனத்திற்குள் ஏற்பட்ட உள் பிரச்சினைகளின் விளைவாகும் என்று தெளிவுப்படுத்தினார். பயணிகள், விமானிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு சமரசம் செய்யாது என்று கூறிய அவர், இந்த செய்தி அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமான நிறுவனம் தனது பணியாளர்கள் மேலாண்மை மற்றும் பணியாளர் பட்டியலை நீண்ட காலத்திற்கு முன்பே முறையாக நிர்வகித்திருக்க வேண்டும் என்றும், ஆனால் அதன் உள் சிக்கல்கள் நாடு முழுவதும் பரவலான இடையூறுகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறினார். மத்திய அரசு இந்த சூழ்நிலையை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், சிரமங்களை அனுபவித்த எந்தவொரு பயணிகளையும் முழுமையாகப் பொறுப்பேற்க வைக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். விதிகளை மீறும்…
மக்களவையில் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு விழா குறித்த சிறப்பு விவாதத்தில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆளும் பாஜகவை தாக்கி பேசியுள்ளார். காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய்க்குப் பிறகு பேசிய யாதவ், சுதந்திரப் போராட்டத்தின் போது தேசியப் பாடல் ஒரு சக்தியாக இருந்தது என்று வலியுறுத்தினார். ‘சுதந்திர இயக்கத்தில் பங்கேற்காதவர்களுக்கு, வந்தே மாதரத்தின் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்’ என்று கூறி பாஜகவை விமர்சித்தார். 1905 முதல் 1908 வரை ஆங்கிலேயர்கள் இந்தப் பாடலைத் தடை செய்தனர், ஆனால் புரட்சியாளர்கள் அதை உயிருடன் வைத்திருந்தனர் என்பதை யாதவ் நினைவு கூர்ந்த அகிலேஷ், ஆளும் கட்சி தேசத்தை ஒன்றிணைக்க அதைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். “வந்தே மாதரம் பாடப்பட வேண்டும். நாம் எவ்வளவு தூரம் வந்தே மாதரத்தை பாடுகிறோம் என்று யோசித்துப் பாருங்கள். நாட்டை ஒன்றிணைத்த அதே வந்தே மாதரத்தை, சிலர் அதைப் பயன்படுத்திப் பிரிவினையை ஏற்படுத்த…
சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அஞ்சான் 2 படம் குறித்த அப்டேட் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் கடந்த வாரம் மறு வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. ரீ ரிலீஸில் இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது. பல காட்சிகளை நீக்கிவிட்டு அஞ்சான் திரைப்படத்தை புது பொலிவுடன் ரீ எடிட் செய்து வெளியிட்டு இருக்கின்றார் லிங்குசாமி. அவர் எதிர்பார்த்ததை போல இப்படம் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. ஆனந்தம், ரன், சண்டைக்கோழி, பையா, வேட்டை போன்ற அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்த லிங்குசாமிமீண்டும் பார்மிற்கு வந்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுப்பார் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது அஞ்சான் ரீரிலீஸ் வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து அவர் மீண்டும் முன்னணி ஹீரோக்களை வைத்து படமெடுத்து வெற்றிகாண்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தநிலையில், அஞ்சான் 2…
விண்வெளி உலகில் பயணம் செய்ய உங்களுக்கு விருப்பம் இருந்தால், அதை நிறைவேற்ற நாசா தயாராக உள்ளது. நாசாவின் அடுத்த சந்திர பயணத்தில் நீங்கள் சேரலாம்.50 ஆண்டுகளுக்கும் மேலாக நாசாவின் முதல் மனித சந்திரன் பயணமாக இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்புப் பணியில் நீங்கள் எவ்வாறு பங்கேற்க முடியும், போர்டிங் பாஸைப் பெற நீங்கள் எவ்வளவு செலவிட வேண்டியிருக்கும் என்பதை தெரிந்துகொள்வோம். நாசா, ஆர்ட்டெமிஸ் II என்ற சந்திர பயணத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறது, இது ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் கனேடிய விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் ஆகிய நான்கு விண்வெளி வீரர்களை ஏப்ரல் 2026 இல் சந்திரனுக்கு அழைத்துச் செல்லும். இந்த 10 நாள் பயணத்தின் போது, அவர்கள் சந்திரனுக்கு அப்பால் 4,600 மைல்கள் பயணித்து பூமிக்குத் திரும்புவார்கள். ஆனால், இலவசமாக உங்கள் பெயரை விண்வெளிக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை அமெரிக்கா விண்வெளி ஆய்வு…
SIR பணியில் நாம் பாதி கிணற்றை மட்டுமே கடந்துள்ளதாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பீகாரை தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR என்கிற சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் 2-ம் கட்டமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறுவதையொட்டி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி(SIR) கடந்த மாதம் 4-ம்தேதி தொடங்கியது. இந்த பணி தொடங்கியதில் இருந்தே அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் SIR பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், வரும் 11-ம்தேதியுடன் SIR பணிகள் முடிவடைய உள்ளது. அதன் பின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் உங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்க ஒருமாத காலம் அவகாசம் அளிக்கப்படும். கடைசியாக பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள்…