Author: Editor web3

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 1) வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் போரால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இன்று வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விலை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது.…

Read More

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், யாரும் விரும்பாத ஒரு மோசமான சாதனையைச் சமன் செய்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஐபிஎல் 2026-ன் நான்காவது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது. நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ்  அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில், தனது துல்லியமான பந்துவீச்சைத் தவறவிட்ட அர்ஷ்தீப், ஒரே ஓவரில் 4 வைட்கள் மற்றும் 1 நோ பால் என வாரி வழங்கினார். இதனால், வெறும் 6 பந்துகள் வீசப்பட வேண்டிய அந்த ஓவரில், அவர் மொத்தம் 11 பந்துகளை வீச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். இது அந்தப் போட்டியின் போக்கையே மாற்றியமைத்ததோடு, அர்ஷ்தீப்பின் பந்துவீச்சுத் தரத்தையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 19 ஓவர்களுக்குப் பிறகு குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் பந்து அர்ஷ்தீப்பிடம் ஒப்படைக்கப்பட்டது, அவர் 20வது ஓவரின் முதல்…

Read More

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால், ஏப்ரல் மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.380 உயர்ந்து ரூ.14,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் ரூ.3,040 அதிகரித்து ரூ.1,12,400-ஆக உயர்ந்துள்ளது. மார்ச் மாத இறுதியில் ஓரளவு குறைந்திருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி எகிறியுள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,670-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,09,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், வெள்ளியின் விலையும் தன் பங்குக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.15 அதிகரித்து ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.15,000 அதிகரித்து ரூ. 2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம், ஏற்கனவே தனது முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் சிலருக்கு எதிராக அந்தந்த தொகுதித் தொண்டர்களிடையே அதிருப்தி நிலவுவதாலும், தொழில்நுட்ப ரீதியாக சில மாற்றங்கள் தேவைப்படுவதாலும், சுமார் 3 முதல் 5 தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்ற கட்சித் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி தவெக-வில் இணைய ஆர்வம் காட்டும் ஒருசில முக்கியப் புள்ளிகளுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த மாற்றம் இருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில், வலுவான வேட்பாளர்களைக் களம் இறக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். எனவே, கள நிலவரம் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த இறுதிச் சீரமைப்புப் பணிகளை…

Read More

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ள புதிய சுங்கக் கட்டண உயர்வு, ஏப்ரல் 1-ம் தேதியான இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. சுங்க கட்டண உயர்வு என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் அமல்படுத்தப்படும். அதன்படி, தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் வருடாந்திர கட்டண உயர்வு இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) இந்த அறிவிப்பின்படி, சுங்கக் கட்டணங்கள் 3% முதல் 7% வரை உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, கார், ஜீப் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ஒருமுறை கடந்து செல்ல ரூ. 5 முதல் ரூ. 10 வரையிலும், பேருந்துகள் மற்றும் லாரிகள் போன்ற கனரக வாகனங்களுக்கு அவற்றின் வகையைப் பொறுத்து ரூ. 40 முதல் ரூ. 200 வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெங்களூரு – சென்னை…

Read More

உலகளவில் பல்வேறு தினங்கள் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது மகளிர் தினம், குழந்தைகள் தினம், பெற்றோர் தினம், காதலர் தினம் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த தினங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் முட்டாள்கள் தினத்திற்கு கொடுப்பதில்லை என்று தெரியவில்லை. தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பலரும் வேலை போன்ற பல்வேறு காரணங்களால் மனஅழுத்தத்தில் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் முட்டாள்கள் தினத்தை கொண்டாடும் போது அவர்களுக்குள் இருக்கும் மனஅழுத்தம், விலகி மனது லேசாகும். நம் வாழ்க்கையில் பின்னேக்கி பள்ளி பருத்திற்கு சென்று ஏப்ரல் 1-ம்தேதியன்று சக நண்பர்களிடம், வீட்டில் உள்ளவர்களிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்ட சென்ற அந்த நாட்களை மறக்க முடியாது. அதே போல் நண்பர்களையும், சகோதரிகளையும், சகோதரர்களையும், வீட்டில் உள்ளவர்களையும் ஏமாற்ற உன் சட்டையிலே என்ன கற ? உன் பின்னே நாய் வருது பாரு..? உன் தோள் மேல பல்லி இருக்குது பாரு.. என்று நாம் கையாட்ட…

Read More

திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, சீட் கிடைக்காத அதிருப்தியில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் அடுத்தடுத்து பதவி விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் வரிசையாக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். சென்னை தி.நகர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான ஜெ. கருணாநிதி, தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, அவர் வகித்து வந்த திமுக பகுதிச் செயலாளர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். கடந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அவருக்கு சீட் மறுக்கப்படக் காரணம் என்று கூறப்பட்டாலும், அவரது ஆதரவாளர்கள் தலைமைக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர். இதேபோல், வேலூர் மாவட்டத்திலும் திமுகவிற்குள்ளே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி-யின் மகனும், குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளருமான…

Read More

ரஷ்யாவிற்குச் சொந்தமான ‘AN 26’ ரக ராணுவ விமானம், கிரிமியா தீவுப் பகுதியில் எதிர்பாராத விதமாக விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 23 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என மொத்தம் 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விமானம் தரையிறங்க முயன்றபோது அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ள ரஷ்ய ராணுவம், விமானத்தின் மீது எந்தவிதமான வெளிப்புறத் தாக்குதலோ அல்லது ஏவுகணைத் தாக்குதலோ நடத்தப்படவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்டு விபத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. “மார்ச் 31 அன்று, மாஸ்கோ நேரப்படி சுமார் 18:00 மணியளவில், கிரிமியன் தீபகற்பத்தின் மீது…

Read More

60 ஆண்டுகால பழமையான 1961-ஆம் ஆண்டு சட்டம் நீக்கப்பட்டு, எளிமையான மொழியில் வடிவமைக்கப்பட்ட புதிய ‘வருமான வரிச் சட்டம் 2025′ நாளை (ஏப்.1) முதல் அமலுக்கு வருகிறது. இது நாட்டின் வரி அமைப்பில் ஒரு பெரிய சீர்திருத்தத்தைக் குறிக்கும். வரி ஆண்டு’ (Tax Year) அறிமுகம்: நிதி ஆண்டு (FY) மற்றும் வரி மதிப்பீட்டு ஆண்டு (AY) என்ற குழப்பமான முறை நீக்கப்பட்டு, இனி ‘Tax Year’ என்ற ஒரே பொதுவான பெயரில் அழைக்கப்படும். HRA சலுகை விரிவு: சென்னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களுக்கு இணையாக பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் நகரங்களில் வசிக்கும் வீட்டு வாடகைப்படியில் இனி 50% வரிவிலக்கு பெறலாம். PAN விதி மாற்றங்கள்: ஏப்ரல் 1, 2026 முதல், ஒரு நிதியாண்டில் மொத்தத் தொகை ரூ. 10 லட்சத்தைத் தாண்டினால், நிரந்தரக் கணக்கு எண் (PAN) வைத்திருப்பது கட்டாயமாகும். முன்னதாக, ஒரு நாளைக்கு ரூ.…

Read More

அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், வெள்ளை மாளிகையைச் சீரமைக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. உள்நாட்டுப் போர்ச் சூழல் மற்றும் பொருளாதாரச் சரிவால் அமெரிக்க மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில், வெள்ளை மாளிகையில் சுமார் 400 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,300 கோடி முதல் ரூ.3,800 கோடி வரை) மதிப்பீட்டில் பிரம்மாண்டமான ‘பாலரூம்’ (Ballroom) மற்றும் நவீன வசதிகளை உருவாக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, வெள்ளை மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘லிங்கன் பாத்ரூம்’ பகுதியைத் தங்கம் மற்றும் பளிங்கு கற்களால் அவர் சீரமைத்திருப்பது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது. “நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது, அதிபர் தனது குளியலறையைத் தங்கமாக மாற்றுவதில் குறியாக இருக்கிறார்” என எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் சாடி வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வாஷிங்டனில் உள்ள ‘நேஷனல் மால்’ (National Mall) பகுதியில்…

Read More