Author: Editor web3

மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. எதிர்காலத்தில் வரவிருக்கும் தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழ்நாட்டிற்கான நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை, மாநிலப் பிரதிநிதித்துவம் மற்றும் மாநில உரிமைகளில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் (சாதக, பாதக அம்சங்கள்) குறித்து எம்பிக்களின் கருத்துகளை முதலமைச்சர் இக்கூட்டத்தில் கேட்டறிய உள்ளார். முன்னதாக, இக்கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த திமுக, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதில் தங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை எனத் தெரிவித்திருந்தது. அதேசமயம், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக மாநில அளவிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான குறிப்பிட்ட சில இருக்கைப் பகுதிகளுக்கு இலவச டிக்கெட்டுகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலி (Galle) சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பில் உள்ள சிங்களவர் விளையாட்டுக் கழக  மைதானத்திலும் நடைபெற உள்ளன. காலி மைதானத்தில் 4ஆம் எண் நுழைவாயில் வழியாகவும், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் 3, 4, 5 மற்றும் 7 ஆகிய நுழைவாயில்கள் வழியாகவும் ரசிகர்கள் இலவசமாக உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மைதானத்தில் உள்ள புல்வெளிப் பகுதிகளில் அமர்ந்து பார்க்க மட்டுமே இந்த இலவச அனுமதி பொருந்தும். இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான வரவிருக்கும் டெஸ்ட் தொடரை…

Read More

உக்ரைன் மீதான போருக்கு நிதி திரட்டுவதைத் தடுக்கும் நோக்கில், ரஷ்யாவின் எரிசக்தித் துறை மற்றும் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது கடும் தடைகளை விதிக்க வகை செய்யும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘லிண்ட்சே ஓ கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ (Lindsey O Graham Sanctioning Russia and Iran Act of 2026) என்ற பெயரிலான இந்த மசோதாவுக்கு ஆதரவாக 86 வாக்குகளும், எதிர்த்து 11 வாக்குகளும் பதிவாகின. உக்ரைன் போரைக் காரணம்காட்டி ரஷ்யா மீது தடைகளை விதிக்க தீவிரமாக வலியுறுத்தி வந்த குடியரசுக் கட்சியின் மூத்த செனட்டர் லிண்ட்சே கிரகாம் கடந்த ஜூலை 11 அன்று காலமானதைத் தொடர்ந்து, அவரது நினைவாகவே இந்த மசோதாவுக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு கோடைகால விடுமுறை என்பதால், பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா…

Read More

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஆன்லைன் விற்பனை முறை மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து விரிவான விளக்கங்களை அளித்தார். டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யலாம் என்ற நீதிமன்ற உத்தரவை முழுமையாகப் படித்துவிட்டுப் பின்னர் பதிலளிப்பதாக அவர் தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளில் ஸ்கேனிங், ஜிபே போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதிகள் இருந்தபோதிலும், வாடிக்கையாளர்களிடம் 10 முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இதை முழுமையாகத் தடுக்கும் வகையிலேயே தற்போது ஆன்லைன் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இன்று முதல் அதிகாரப்பூர்வமாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை சுமார் 700 பேர் இதன் மூலம் ஆர்டர் செய்துள்ள நிலையில், புதிய நடைமுறை என்பதால் எழும் ஆரம்பக்கட்டச் சிக்கல்கள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருவதாக…

Read More

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி – அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கையில் வாளுடன் வந்த அவர்கள், விடுதியின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விடுதியின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கமுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, அந்த மர்ம நபர்கள் விடுதி மீது பெட்ரோல் குண்டு வீசும் சிசிடிவி  காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுத் தப்பியோடிய குற்றவாளிகளைக் காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Read More

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இதன் மூலம் கடந்த மூன்று நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4.19 அடி வரை உயர்ந்தது. இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதனால் கர்நாடகாவின் கபினி அணைக்குச் செல்லும் நீரின் அளவு குறைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக தமிழகத்தின் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் சரிவைச் சந்தித்துள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.57 அடியாகப் பதிவாகியுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,674 கன அடியாகக் குறைந்துள்ளது. அதேசமயம், பொதுமக்களின் அத்தியாவசியக் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

Read More

வேலூர் விமான நிலையத்தை உடனடியாகப் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி, தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். மத்திய அரசின் ‘உடான்’ (RCS-UDAN-II) திட்டத்தின் கீழ் கடந்த 2017-ஆம் ஆண்டு வேலூர் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணிகள் மற்றும் ஆய்வுகள் நிறைவடைந்து, இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககத்தின் (DGCA) கள ஆய்வுகளும் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து பாதுகாப்பு மையத்திடமிருந்து (BCAS) பெறப்பட வேண்டிய இறுதிப் பாதுகாப்பு அனுமதி மட்டுமே தற்போது நிலுவையில் உள்ளது. இந்தச் சான்றிதழ் கிடைத்தவுடன் உடனடியாக உரிமம் வழங்கி, விமான நிலையத்தைச் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்பி எல்.கே.சுதீஷ் வெளியிட்டுள்ள தகவலில், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட வடதமிழக மக்கள் கடந்த 9 ஆண்டுகளாக விமானச் சேவைக்காகக்…

Read More

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் விதமாக, புதிதாக 15 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எட்டுப் பேர் மூத்த வழக்கறிஞர்கள் ஆவர். மீதமுள்ள ஏழுப் பேர் இதற்கு முன் மாவட்ட நீதிபதிகளாகப் பணியாற்றி வந்தவர்கள். வழக்கறிஞர்களாக இருந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பொறுப்பேற்பவர்களின் பட்டியலில் என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ஆர்.ஆர்.விவேகானந்தன், எஸ்.ரவிக்குமார், என்.திலீப்குமார், ஏ.மனோகரன், கே.கோவிந்தராஜன் மற்றும் ரஜ்னீஷ் பத்தியில் ஆகிய எட்டுப் பேர் இடம்பெற்றுள்ளனர். இதேபோல், மாவட்ட நீதிபதிகளாகப் பணியாற்றி தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வு பெற்றுள்ளவர்களின் பட்டியலில் பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகர், எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன் மற்றும் என்.குணசேகரன் ஆகிய ஏழுப் பேர் இடம்பெற்றுள்ளனர். தற்போது நடைபெற்றுள்ள இந்த 15 புதிய நியமனங்களின் மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, இதுவரை இருந்த நீதிபதி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை…

Read More

ஜப்பானின் தெற்குத் தீவுப் பகுதிகளை ‘டால்பின்’ (Dolphin) என்ற சூறாவளி மிகக் கடுமையாகத் தாக்கி வருகிறது. மணிக்கு சுமார் 144 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்றடிக்கும் இந்த காற்றால் ஒகினாவா மாகாணம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. புயலின் தீவிரம் காரணமாக ஒகினாவாவின் முக்கியப் போக்குவரத்து மையமான நாஹா விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூறாவளிக் காற்றில் சிக்கி 70 வயது மதிக்கத்தக்க மூன்று முதியவர்கள் காயமடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக, அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் வசித்த 240 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை மிகக் கனமழையும், தீவிரமான காற்றும் நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என ஜப்பான் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. தென் ஜப்பானைக் கடக்கும் இந்த ‘டால்பின்’ சூறாவளி, நாளை மறுதினம் காலையில் சீனாவின் கிழக்குக் கடற்கரைப்…

Read More

சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து தான் பயன்படுத்திய வார்த்தைகளுக்காக வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார். பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர் அவையில் பேசுகையில், முதலமைச்சரை விமர்சிக்கும் போது இவ்வளவு கடுமையான சொற்களைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தம்மை கடிந்து கொண்டதாகக் குறிப்பிட்டார். மேலும், சிறையில் தன்னைச் சந்திக்க வந்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரும், “விமர்சனங்கள் அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டுமே தவிர, வன்மமான வார்த்தைகளால் அல்ல” என அறிவுரை வழங்கியதாகக் கூறினார். எனவே, உணர்ச்சிவசப்பட்டு தான் கூறிய அந்த வார்த்தைகளை அனைவரும் பெருந்தன்மையோடு மறந்துவிடுமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் “கொலை வாளினை எடடா” என்ற வரியை மேற்கோள் காட்டிவிட்டு, “இந்த வரியைச் சொன்னதற்காகத் தயவுசெய்து என்னை மறுபடியும் கைது செய்து சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள்” என்று கலகலப்பாகக் குறிப்பிட்டார். பின்னர், தற்போதைய த.வெ.க…

Read More