Author: Editor web3
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்மூஸ் நீரிணையைத் திறக்க வேண்டுமானால், அமெரிக்கா தனது “நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும்” என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த நீரிணை மற்றும் அதன் போக்குவரத்து நிர்வாகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைக் தலைகீழாக மாற்றக்கூடிய புதிய நிபந்தனைகளையும் ஈரான் விதித்துள்ளது. ஈரானின் மிக உயர்மட்ட அமைப்பான ‘உயர்ந்த தேசிய பாதுகாப்புப் பேரவை’ (வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா இனி ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தக் கூடாது. ஈரானுக்கும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளுக்கும் எதிரான போரை அமெரிக்கா நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகையை அமெரிக்கா விலக்கிக் கொள்ள வேண்டும் மற்றும் இப்பகுதியிலிருந்து தனது ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும். போர் சேதங்களுக்கான இழப்பீட்டை முழுமையாக வழங்க வேண்டும், பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை “நிபந்தனையற்ற முறையில்” விடுவிக்க வேண்டும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு முக்கியத்துவம்…
நைஜர் நாட்டில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ராணுவப் பயிற்சியை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 42 வீரர்கள் உயிரிழந்தனர். மடாவா பகுதியில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Doukou Doukou என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு பேருந்துகள் மோதிய இந்த கோர விபத்து கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) அன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வியாழக்கிழமையன்று தங்களது ராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த உதவி அதிகாரிகள் உட்பட 42 வீரர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 18 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்; அவர்கள் தற்போது கவலைக்கிடமான நிலையில் கோமாவில் சிகிச்சை பெற்று வருவதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், ராணுவத்துக்கென சொந்தமாகப் போக்குவரத்து வாகனங்கள் இருந்தபோதிலும், வீரர்கள் ஏன் ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.…
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டணிக் கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில், மத்திய அரசின் தொகுதி மறுவரையறைத் திட்டத்திற்கு ஒருமனதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் மாநில வாரியான தொகுதி ஒதுக்கீட்டை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல், இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஐ-எம்) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி.க்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். எனினும், திமுக மற்றும் அதிமுக இக்கூட்டத்தைப் புறக்கணித்தன. அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே தொடர வேண்டும் என எம்.பி.க்கள் வலியுறுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்களின் உரிமைகளை நிரந்தரமாகப் பாதுகாக்கும் வகையில், மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட…
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து மத்திய பாஜக அரசு முன்னெடுக்கும் நகர்வுகளையும், அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் விமர்சித்து ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேட்டியளித்துள்ளார். தொகுதி மறுவரையறை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக, அதிமுக உறுப்பினர்கல் பங்கேற்காத நிலையில், காங்கிரஸ் (11), விசிக (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2), ஐயுஎம்எல் (1) மற்றும் மதிமுக (1) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், கூட்டத்தில் என்ன நிலைபாடு எட்டப்பட்டது என்பது குறித்து துரை வைகோ எம்.பி. செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, அனைத்து மாநிலங்களிலும் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை உயர்த்துவதாகக் கூறி, தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு திரட்ட பாஜக முயன்று வருகிறது. சில எதிர்க்கட்சிகளும் இது நல்ல திட்டம்…
தமிழகத்தில் காவிரி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் சந்தித்துப் பேசினர். டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக் கோரியும், விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் தஞ்சாவூரில் திமுக சார்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கும், சட்டமன்றத்தில் இது குறித்து குரல் எழுப்பியதற்கும் இச்சந்திப்பின் போது விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், விவசாயிகளின் உரிமைகளுக்காகக் களமிறங்கிய எதிர்க்கட்சித் தலைவரை, ஆளும் த.வெ.க அரசின் காவல்துறை கைது செய்த நிகழ்வு தங்களுக்குப் பெரும் மனவருத்தத்தை அளித்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளைப் புறக்கணிக்கும் த.வெ.க அரசைக் கண்டித்து, 84 விவசாய அமைப்புகள் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் சட்டமன்றத்திலும் வெளியிலும்…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சியரா நெவாடா மலைப்பகுதியில் தனியாக மலையேற்றத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பயின்று வந்த விக்ரம் முபாயி (Vikram Mubayi) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்யோ தேசிய வனப்பகுதியில் (Inyo National Forest) உள்ள பிக் பைன் லேக்ஸ் (Big Pine Lakes) பகுதிக்கு விக்ரம் தனியாக மலையேற்றத்திற்குச் சென்றுள்ளார். ஆகஸ்ட் 1-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் அவர் கடைசியாகத் தனது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதன்பிறகு அவரைக் காணவில்லை. இதனையடுத்து, இன்யோ கவுண்டி மீட்புக் குழுவினர் மற்றும் கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதலின் முடிவில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இருப்பினும், விக்ரம் எவ்வாறு உயிரிழந்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெளிவாகத்…
அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி, நீண்ட நாட்களாக உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தனது 68-வது வயதில் காலமானார். சமீபத்தில் நடைபெற்ற 2026 பிஃபா உலகக்கோப்பைத் தொடரின் போதே, தனது குடும்பம் ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து வருவதாக மெஸ்ஸி வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக, உலகக்கோப்பையில் அல்ஜீரியா அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்த பிறகு மெஸ்ஸி மைதானத்திலேயே கண்கலங்கி அழுதார். இது ரசிகர்களிடையே பெரும் கேள்விகளை எழுப்பியது. போட்டிக்குப் பின் இதுகுறித்து விளக்கமளித்த மெஸ்ஸி, “நான் ஏன் அழுதேன்? அதற்கும் கால்பந்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் சில கடினமான நாட்களைக் கடந்து வருகிறேன்” என்று கூறியிருந்தார். அவரது இந்த வார்த்தைகள் அவரது தந்தையின் உடல்நலக்குறைவுடனேயே தொடர்புபடுத்தப்பட்டன. ஜார்ஜ் மெஸ்ஸியின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியபோது, மெஸ்ஸியின் குடும்பத்தினர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர். அதில், “ஜார்ஜ் மெஸ்ஸி உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்.…
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ், காயம் காரணமாக ‘தி ஹண்ட்ரட் 2026’ (The Hundred 2026) தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் விரைவில் நடைபெறவுள்ள ‘மகளிர் ஆசியக் கோப்பை’ தொடரில் அவர் பங்கேற்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் சவுதர்ன் பிரேவ் (Southern Brave) அணிக்காக விளையாடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸுக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் சார்லி நாட் (Charlie Knott) சவுதர்ன் பிரேவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் சவுதர்ன் பிரேவ் அணிக்காக 6 இன்னிங்ஸ்களில் விளையாடிய ஜெமிமா, 143 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 28-ஆம் தேதி மகளிர் ஆசியக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆகஸ்ட் 30 அன்று…
யு.பி.ஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக எழுந்த அச்சங்களுக்கு மத்தியில், வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மேலும், பெரும்பாலான வியாபாரிகளுக்கான பரிவர்த்தனைகளும் இலவசமாகவே தொடரும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. UPI மூலம் செய்யப்படும் தனிநபர்களுக்கு இடையிலான அனைத்துப் பரிவர்த்தனைகளும் முற்றிலும் இலவசமாகவே தொடரும். கடைகளில் பொருட்களை வாங்கும் சாதாரண வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித பரிவர்த்தனைக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி மக்களவையில் ‘வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026’ நிறைவேற்றப்பட்டது. இது ‘பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007’ பிரிவு 10A-ல் திருத்தம் கொண்டுவர வழிவகை செய்கிறது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முழுமையான ஒப்புதல் பெற்ற பிறகு, NPCI தலைமையிலான ‘UPI மற்றும் சேவைகள் வழிகாட்டுதல் குழு’ MDR (Merchant Discount Rate) கட்டணம் குறித்து முடிவெடுக்கும். இந்த MDR…
கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த விளாத்திகுளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று நேரில் வந்து கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலவரம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்குப் பல முதலீடுகள் சென்றுவிட்டதாகவும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வந்தால் வழக்கு போட்டுவிடுவார்களோ என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே நிலவுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தி.மு.க.வினரைக் கைது செய்து முடக்கிவிடலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம் என்று குறிப்பிட்ட அவர், தி.மு.க. எதற்கும் அச்சப்படும் கட்சியல்ல என்றும், ஜனநாயக முறையில் கருத்துக்களை வெளிப்படுத்தும் வலிமையான இயக்கம் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால் இந்த அரசு தங்களை…