Author: Editor web3

இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தொகுதி மறுவரையறை குறித்த புதிய மசோதா எதுவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத, அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையில், எதற்காக தமிழக முதல்வர் அவசர அவசரமாக எம்.பி.க்கள் கூட்டம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது? கண் முன்னே நடக்கும் காவிரி- மேகதாது பிரச்சனைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரியுள்ள நிலையில், அவற்றை எல்லாம் உதாசினப்படுத்திவிட்டு இந்த அரசின் முதல்வர், எதற்காக தாக்கல் செய்யப்படாத மசோதாவிற்கு கூட்டத்தை நடத்துகிறார்? இன்று வரை மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லை. விவசாயிகள் கண்ணீருக்கு பதில் சொல்லாமல் இந்த அரசு நடத்தும் மடைமாற்று அரசியல் அரங்கேற்றத்திற்கு அதிமுக ஒருபோதும் துணை போகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே, இக்கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தொகுதி மறுவரை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட்டம் போடுவது கேளிகூத்தா இருக்கு என்று விமர்சித்துள்ளார். பெரம்பலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களே…

Read More

தமிழக-கேரள எல்லைப் பகுதியான குமுளி அருகில் உள்ள முல்லைப் பெரியாறு அணை, தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் இருபோக விவசாயத் தேவைகளுக்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி முதல் போக விவசாயத்திற்காக இந்த நீர்  தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தாமதமாக தொடங்கியதால், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் சரிந்தது. இதனால் விவசாயத்திற்குத் தண்ணீர் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் 122.30 அடியாக உயர்ந்தது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக ஆயக்கட்டுப் பகுதி விவசாயத்திற்கு வினாடிக்கு 200 கன அடியும், குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடியும்…

Read More

உத்தரகண்டை சேர்ந்த ரேணு தரியல் என்பவர், உலகின் மிக நீண்ட முடியை கொண்ட நபர் என்ற கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அவரது தலைமுடியின் நீளம் 271.50 செ.மீ (8 அடி 10 அங்குலம்) ஆகும். உத்தரகண்ட் மாநிலம் ஹல்தவானியில் கடந்த ஏப்ரல் மாதம் இவரது சாதனை அளவிடப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இது ராபர்ட் வாட்லோவின் பதிவான உயரமான 272 செ.மீ-ஐ விட சிறிதளவே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 2015 முதல் தொடரும் பயணம்: கடந்த 2015-ம் ஆண்டு முதல் தனது தலைமுடியை தொடர்ந்து வளர்த்து வருவதாகவும், அந்தக் காலத்தில் அவர் முடியை வெட்டியதே இல்லை என்றும் கின்னஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நீண்ட முடி அழகு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகக் கருதப்படும் இந்திய கலாச்சார பாரம்பரியத்தினால் ஈர்க்கப்பட்டே தான் முடியை வளர்க்கத் தொடங்கியதாக அவர் கூறியுள்ளார். தற்போது இவரது முடி தடிமனாகவும் பளபளப்பாகவும் இருப்பதுடன், தரையில் பின்தொடர்ந்து செல்லும் அளவுக்கு நீண்டுள்ளது.…

Read More

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டரான ரிஷப் பந்த், தனது சொந்த மாநிலத்தில் நிலம் வாங்குவதற்காக உத்தரகண்டு முதலமைச்சர் புஷ்கர் சிங் தமியிடம் உதவி கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் நள்ளிரவில் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், டெல்லியிலிருந்து தனது வசிப்பிடத்தை உத்தரகண்டுக்கு மாற்றி, அங்குள்ள ‘பஹாடி’ (மலைவாழ்) மக்களுடன் இருக்கவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக நிலம் வாங்குவதற்காக தான் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும், அதற்கான செயல்முறை மிகவும் கடினமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அந்த நிலத்தை இலவச பரிசாக பெற விரும்பவில்லை என்றும், அரசாங்கத்தின் முறையான விலையைக் கொடுத்து வாங்க விரும்புவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பந்த் பங்கேற்றிருந்த வேளையில், இந்தத் திடீர் பதிவால் ஆரம்பத்தில் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ரிஷப் பந்த்தின் கோரிக்கைக்குப் பதிலளித்துள்ள…

Read More

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசுக்குச் சொந்தமான சிட்கோ நிலத்தைப் போலியான ஆவணங்கள் மூலம் முறைகேடாக அபகரித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், சென்னை மாநகர முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்த நிலத்தைத் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாகச் சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், மா.சுப்பிரமணியன் மீது மோசடி, கூட்டுச் சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவை எதிர்த்து மா.சுப்பிரமணியன் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய்…

Read More

தமிழகத்தின் நலன்களை விட தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் முதல்வர் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்கலாம் என்று மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்தநிலையில் இந்த கூட்டத்தில் திமுக பங்கேற்காது என எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ள நிலையில் அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது…

Read More

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை அழைத்து நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தையும் சென்னையில் நடத்திக் காட்டினார். ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் எங்கள் கழகத் தலைவர் ஓரணியில் திரட்டிக் காட்டினார். அனைவரது எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டமுன்வரைவை பா.ஜ.க. கொண்டுவந்தபோது, சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்கு இடையிலும் இதனை எதிர்த்துப் போராடினார். கருஞ்சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏற்றி, சட்ட வரைவின் நகலைக் கொளுத்தினார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாமல் தோல்வியடையச் செய்தார். தற்போதைய நாடாளுமன்றக்…

Read More

கோயில்களுக்கு வரும் பக்தர்கள் சிலர், வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பது, வீடியோ மற்றும் செல்ஃபி எடுப்பது, மற்றும் சமூக வலைதளங்களுக்காக ரீல்ஸ் (Reels) தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தற்போது அதிகரித்துள்ளது. இதனால் கோயில்களின் புனிதத் தன்மை கெடுவதோடு, சாமி கும்பிட வரும் மற்ற பக்தர்களுக்கும் மிகுந்த சங்கடமும் அசௌகரியமும் ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், பக்தர்கள் கோயிலுக்குள் நுழையும் முன்பே தங்கள் செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்க வசதியாக, கோயில் நிர்வாகங்கள் உடնே பாதுகாப்பு மையங்களை அமைக்க வேண்டும். இந்த மையங்கள் பெரும்பாலும் கோயிலின் நுழைவு வாயிலிலோ அல்லது காலணி பாதுகாப்பு மையத்திற்கு அருகிலோ இருக்க வேண்டும். செல்போன்களைப் பாதுகாப்பாகப் பெற்றுக்கொள்ள ஒரு போனுக்கு ரூபாய் 5/- என்ற சீரான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இதற்கான ரசீது ITMS மூலமாகவே வழங்கப்பட வேண்டும். வரும் செப்டம்பர் 1, 2026 முதல் அனைத்து முதுநிலைத் திருக்கோயில்களிலும் பக்தர்கள் கைப்பேசியைக் கோயிலுக்குள் எடுத்துச் செல்வது முழுமையாகத்…

Read More

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களுக்குத் தரிசனம் செய்ய வருகை தரும் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தங்களது வருகை நேரம் குறித்த விவரங்களை ஒரு நாளைக்கு முன்னதாகவே கோயில் அலுவலகத்திற்குத் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு முக்கிய பிரமுகர்கள் வருகை தரும்போது, கோயில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பதற்கோ அல்லது காணொளி பதிவு செய்வதற்கோ எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகை தரும் விஐபிக்களால் சாதாரண பக்தர்களின் தரிசனத்திற்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படாத வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்து ஒழுங்குபடுத்த வேண்டும். கோயில்களின் புனிதத் தன்மையும், அவற்றின் மரபு சார்ந்த ஒழுங்குமுறைகளும் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது என்பதால், இந்த நடைமுறையை அனைத்துக் கோயில்களிலும் உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்று ஆணையர் வினய் உத்தரவிட்டுள்ளார்.

Read More