Author: Editor web3

ஐந்து முறை பிஃபா உலகக் கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான சர்வதேச நட்புப் போட்டி அக்டோபர் 3 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்திய கால்பந்து வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் இந்தப் போட்டியை நடத்துவதற்கு மேற்கு வங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சால்ட் லேக் மைதானத்தில் (Salt Lake Stadium) நடைபெறவுள்ள இந்தப் போட்டி, பிஃபா தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ள ஒரு அணியை இந்தியா சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் முதல் நிகழ்வாக இருக்கப் போகிறது. இதற்கான நிர்வாக உதவிகளை வழங்க மாநில அரசு உறுதியளித்துள்ளதாக AIFF தலைவர் கல்யாண் சவுபே தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் லியோனல் மெஸ்சி கொல்கத்தாவுக்கு வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு  சிக்கல்களை அடுத்து, தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மெஸ்சியின்…

Read More

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சமீபத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் இந்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று வெளியுறவு அமைச்சகம்  தெளிவுபடுத்தியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஷேக் ஹசீனாவின் சந்திப்பு முற்றிலும் ஒரு தனியார் ஊடக நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும், அதில் இந்திய அரசுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். வங்கதேசத்தின் தற்போதைய அரசு குறித்தும், அந்த நிகழ்வில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகளுக்கும் இந்திய அரசு எந்த விதத்திலும் ஆதரவளிக்கவில்லை என்றும் அவர் கூறினார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு பிறகு நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற்ற ஒலியலவிலான இணையவழிச் சந்திப்பில் பேசினார். அப்போது, தன் மீது சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருந்தாலும், வரவிருக்கும் டிசம்பர் மாதம் வங்கதேசத்திற்குத்…

Read More

கிரிக்கெட் விளையாட போதுமான ஆட்கள் இல்லாதபோது சிறுவர்கள் தங்களது சூழலுக்கு ஏற்ப விளையாட்டை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில், மலைப்பாங்கான ஒரு பகுதியில் சிறுவர்கள் சிலர் தங்களது அணியில் நான்கு கால் நண்பர்களை இணைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடியுள்ள சுவாரஸ்யமான வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ள இந்தக் காட்சிகளில், அழகிய மலைப் பின்னணியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதும், அவர்களுடன் இரண்டு நாய்கள் மிகுந்த உற்சாகத்துடன் களத்தில் ஓடித் திரிவதும் பதிவாகியுள்ளது. வழக்கமான செப்பனிடப்பட்ட மைதானங்களுக்கு மாறாக, கரடுமுரடான மலைப் பாறைகள் நிறைந்த பகுதியே அவர்களது ஆடுகளமாக உள்ளது. https://x.com/mufaddal_vohra/status/2085194949176578427? விளையாட்டின் போது அந்த நாய்கள் வெளிப்படுத்திய திறமைகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, ஒரு நாய் விக்கெட் கீப்பர் போன்று பந்தைக் கவ்விப் பிடிப்பதும், பேட்ஸ்மேன் அடிக்கும் பந்துகளை மலைப்பாறைகளில் தாவிச் சென்று மீட்டு வந்து பந்துவீச்சாளரிடம் சேர்ப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு…

Read More

சமூக வலைதளங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் தொடர்பான வழக்கில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா மீது அமெரிக்க நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. நியூ மெக்சிகோ நீதிமன்றம் மெட்டா நிறுவனம் ரூ.567 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,800 கோடிக்கு மேல்) தொகையைச் செலுத்த உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, இதில் 420 மில்லியன் டாலர்கள் இளையோர் மனநல சிகிச்சை சேவைகளுக்காக ஒதுக்கப்படவுள்ளது. மீதமுள்ள தொகைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விழிப்புணர்வு, தடுப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்புடைய செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும். இந்த வழக்கின் முதல் கட்டத்தில், குழந்தைகள் மனநல பாதிப்புக்கு மெட்டா நிறுவனமே காரணம் என்றும், தளத்தில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் குறித்த தகவல்களை மறைத்ததாகவும் கூறி ஜுரிகளில் ஒருமித்த தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ.375 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் தீவிர வயதுச்…

Read More

தாய்லாந்தின் நான்டபுரி (Nonthaburi) மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் வெள்ளிக்கிழமை இன்று மாணவன் ஒருவன் நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று ஆசிரியர்கள் மற்றும் மூன்று மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைத்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாங்காக்கின் வடமேற்கே உள்ள ‘டெப்சிரின் நான்டபுரி பள்ளி’யில் (Debsirin Nonthaburi School) இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராயல் தாய் காவல் துறையின் பேச்சாளர் டிரைரோங் பிவ்பான் (Trairong Piwpan) ஏபி செய்தி நிறுவனத்திடம் இதனை உறுதிப்படுத்தினார். காயமடைந்த 15 பேரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் தெரிவித்தார். உள்ளூர் மக்களால் “மன உளைச்சலில் இருந்தவன்” என்று வர்ணிக்கப்படும் அந்த மாணவன், பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு தனது தந்தைக்குச் சொந்தமான கைத்துப்பாக்கியால் தனது தாத்தா மற்றும் பாட்டியைச் சுட்டுக் கொன்றுள்ளான்; அதன்பிறகே பள்ளிக்குச் சென்று இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளான். துப்பாக்கிச் சூட்டுக்கான உண்மையான நோக்கம்…

Read More

வருமானத்தை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் நிர்வாகப் பொறுப்பில் உள்ள இரண்டு நிறுவனங்களில், கடந்த 2018ஆம் ஆண்டு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினர். இந்த ஆவணங்களை, 2013-14 முதல் 2015-16 வரையிலான மூன்று நிதியாண்டுகளில் கே.என்.நேரு தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளுடன் அதிகாரிகள் ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்போது, அந்தக் காலக்கட்டத்தில் 17 கோடி ரூபாய் வருமானமும், 11 கோடி ரூபாய் முதலீடும் முறையாகக் கணக்கில் காட்டப்படவில்லை என்று கண்டறியப்பட்டது. இதைக் கணக்கில் சேர்த்து மதிப்பீடு செய்யுமாறு கடந்த 2019ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கே.என்.நேரு தாக்கல் செய்த மேல்முறையீட்டை வருமான வரித்துறை ஆணையர் ஏற்றுக்கொண்டார். இதை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு…

Read More

கால்நடை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான மிக முக்கியமான பொருண்மை குறித்து பிரதமர் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம், 1984-ன் விதிமுறைகளின்படி, அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வின் (Common Entrance Examination) அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறை (Centralized Counselling Process) மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளதோடு, அதற்கு மாற்று ஏற்பாடாக, மேற்படி 2026-27 கல்வியாண்டு முதல் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில், நீட் (NEET UG-2026) தேர்வின் தரவரிசைப்…

Read More

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய பாமக உறுப்பினர் கணேஷ் குமார், மாநிலத்தில் பல மதுக்கடைகள் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இன்னும் சட்டவிரோதமாக இயங்கி வருவதாகக் குற்றம்சாட்டியதுடன், ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்திற்கும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், ஆன்லைன் வாயிலாக மதுபானங்களை முன்பதிவு செய்ய மட்டுமே வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய கணேஷ் குமார், ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை எப்போது வழங்கப்படும் என்று மக்கள் தன்னிடம் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருவதாகத் தெரிவித்தார். மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குப் புதிய பேருந்துகள் வாங்குவது தொடர்பாக பட்ஜெட்டில் எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மாநிலத்தின் நிதிநிலைமை சீராக இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று பட்ஜெட்டின் போது அரசு குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அப்படியானால் முக்கியத்…

Read More

பாமக தலைவர் அன்புமணி தனது எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டில் இளைய தலைமுறையின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்த தவெகவின் ஆட்சியில் இளைஞர்களின் எதிர்காலம் சிறக்கும்; அரசு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு முற்றிலும் எதிராக அரசின் பல்வேறு சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், மனிதநேயத்துக்கும் எதிரான அரசின் இந்த அணுகுமுறை ஆபத்தானது ஆகும். தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தனியார் கூட்டாண்மையுடன் செயல்படுத்துவதற்கான 5 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பிலும் மின்சாரப் பேருந்துகளை தனியார் நிறுவனங்களின் மூலம் மொத்த செலவு ஒப்பந்த முறையில் இயக்குதல், மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த விடுதிகளை அமைத்தல், கோவை & அரியலூர் இடையே ரூ.4000 கோடி மதிப்பிலான மின்வழித்தடம் அமைக்கும் திட்டம், மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைத்தல், சென்னையில் நகர்ப்புற…

Read More

கடலூர் முதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன் பல்வேறு அரசியல் நிலவரங்கள் குறித்துப் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், பிறமொழி பேசும் தேசிய இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதுடன் மாநில சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 17 அன்று மாநாடு நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். தமிழ் தேசியம் என்பது பிற மொழி பேசுவோருக்கு எதிரான வெறுப்பு அரசியல் அல்ல என்றும், மொழி மற்றும் மாநில உரிமைகளை வென்றெடுப்பதே விசிக-வின் தமிழ் தேசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறைச் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதல்வர் தலைமையில் நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் விசிக கலந்துகொள்ளும் என்று அவர் கூறினார். மேலும், மாநிலங்களுக்குப் போதுமான நிதியை…

Read More