Author: Editor web3

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்தியா உட்பட 60 நாடுகளின் மீதான புதிய உலகளாவிய வரிகளை விதித்துள்ளதை எதிர்த்து, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 25 அமெரிக்க மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. கட்டாய உழைப்பு முறை மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அமல்படுத்தப்பட்டுள்ள இந்த வரிகள், அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. உச்ச நீதிமன்றம் மற்றும் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் முந்தைய வரிகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் தற்போது 1974-ன் வர்த்தகச் சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் (Section 301) புதிய வரிகளைக் கொண்டுவந்துள்ளது. எனினும், இது வரம்பை மீறிய செயல் என்றும், அமெரிக்கக் குடும்பங்கள் மற்றும் வணிகங்களின் மீது சட்டவிரோதமாக வரிகளை திணிக்கும் முயற்சி என்றும் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கில் அரிசோனா, கலிபோர்னியா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், ஹவாய், இல்லினாய்ஸ், கென்டக்கி, ரெயின்,…

Read More

ரஷ்யாவின் கருங்கடல் சுற்றுலா நகரமான கெலென்ட்ஜிக்கிற்கு (Gelendzhik) அருகிலுள்ள அர்கிபோ-ஒசிபோவ்கா (Arkhipo-Osipovka) கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த ட்ரோன் தாக்குதலில், மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது ஏழு பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் இச்சம்பவத்தில் 40 பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 19 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றதாகவும் கிராஸ்னோடார் கிராய் பிராந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறையைக் கழிக்க ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் குவியும் இந்தக் கடற்கரை, தாக்குதல் நடந்தபோது மிகவும் கூட்டமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. https://x.com/visegrad24/status/2084301901915406517? ட்ரோன் கடற்கரையில் மோதி வெடிக்கும் தருணம் ஊடகங்களால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. வெடிப்புக்கு முன்பு இயந்திரத் துப்பாக்கிச் சுடும் சத்தம் போன்ற சத்தங்களைக் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர். திடீரென நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் அங்கிருந்தவர்கள் தப்பியோடக்கூட நேரம் கிடைக்கவில்லை என்று சுற்றுலாப் பயணி ஒருவர் வேதனை தெரிவித்தார்.…

Read More

ஈரான் நாட்டுக்கான இந்தியாவின் புதிய தூதராக அனுபவம் வாய்ந்த தூதரக அதிகாரியான விஸ்வேஷ் நேகி (Vishwesh Negi) நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி,. விஸ்வேஷ் நேகி 2002-ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி (IFS) அதிகாரியாவார். இவர் தற்போது வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். விரைவில் இவர் ஈரானின் தெஹ்ரான் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது புதிய பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியுறவு அமைச்சகத்திற்கு முன்பு, இவர் பாதுகாப்பு அமைச்சகத்தில் சர்வதேச கூட்டுறவுப் பிரிவின் இணைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும், பல்வேறு நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களிலும் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். தற்போதைய மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில் இந்த நியத்துவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஹோர்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட கடல்வழி வணிகப் பாதைகள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து ஈரான்…

Read More

அமெரிக்காவின் யுஜின் நகரில் நாளை முதல் (ஆகஸ்ட் 5) முதல் ஆகஸ்ட் 9 வரை உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கோலாகலமாக நடைபெறவுள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 36 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ இந்திய தடகள அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாபெரும் பெருமையாக, இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களில் தமிழகத்தை மட்டும் சேர்ந்த 10 இளம் வீரர், வீராங்கனைகள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர். தேசிய அணியில் தமிழகத்தின் பங்களிப்பு சுமார் 30 சதவீதமாக இருப்பது மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. யூவின் ஆனந்த், ஜித்தின், நீல்ஸ் சாம்ராஜ், ரஞ்சித்குமார், நகுல் பிரபு, தரணிதரன், அம்ரிஷ், ரோய்ஷன், பவானா, தியா ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் ஆவர்.  தேசிய அளவில் முத்திரை பதித்த இந்த இளம் திறமையாளர்கள், சர்வதேச தடகள மேடையில் தங்களின் திறமையை நிரூபிக்கவும், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போன்ற உயர்மட்ட உலகளாவிய போட்டிகளுக்காக…

Read More

ஐபிஎல் 2027 சீசன் நெருங்கி வரும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. அந்த அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த்தை லக்னோ அணி விடுவித்துள்ளதால், அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஏடன் மார்க்ரம் லக்னோ அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், லக்னோ அணியின் காலிப்பணியிடமாக உள்ள கேப்டன் பதவி குறித்து மார்க்ரம் வெளிப்படையாகப் பேசியுள்ளார். கேப்டன் பதவியைப் பற்றி தான் பெரிதும் கவலைப்படவில்லை என்றும், அணியின் புதிய கேப்டனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அணி நிர்வாகத்திடம் விட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கிரிசின்போ ஊடகத்திற்கு மார்க்ரம் அளித்த பேட்டியில், “எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் எதைச் சிறந்ததாக நினைக்கிறார்களோ அதை முடிவு செய்யலாம். எங்களிடம் அணியில் பல தரமான தலைவர்கள் இருக்கிறார்கள், அதனால் நான் அதைப் பற்றி பெரிதாக…

Read More

மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடுத்த இந்த வழக்கில், டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி அஸ்வினி பன்வார் தீர்ப்பளித்து, பிரிஜ் பூஷன் மற்றும் இணை குற்றம் சாட்டப்பட்ட வினோத் தோமர் ஆகிய இருவரையும் விடுதலை செய்தார். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மல்யுத்த வீராங்கனைகளிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அமைப்பும் அரசாங்கமும் பிரிஜ் பூஷனைக் காப்பாற்ற முயன்றதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். வினேஷ் போகத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நாங்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டியிருந்தது. தனது அதிகாரத்தையும் பலத்தையும் பயன்படுத்தி, பல பெண்களின் பெயர்களை வாபஸ் பெறச் செய்ய…

Read More

கேரள மாநிலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாக, உலகப் புகழ்பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மூன்றாவது நாளாகக் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மொழிகளில் திரைப்படங்கள் ஷூட்டிங் நடத்தப்பட்ட இந்த அழகிய அருவிப் பகுதிக்குத் தினசரி வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அங்குச் செல்ல வனத்துறையினர் தற்காலிகத் தடை விதித்துள்ளனர். தொடர் மழையின் தாக்கத்தால் மலைப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மளுக்கப்பாறை, பன்னிமேடு, சோலையார் மற்றும் மோட்டார் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைக்கூட்டங்கள், சிறுத்தைகள், கரடிகள் மற்றும் புலிகள் அதிக அளவில் இடமாற்றம் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக யானைகள் கூட்டம் கூட்டமாகத் தேயிலைத் தோட்டங்களுக்குள் உலா வருவதால், தோட்டத் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை எச்சரித்துள்ளது. வனத்துறையினரும், வேட்டைத் தடுப்புக்காவலர்களும் அப்பகுதிகளில் சுழற்சி முறையில் தீவிரக் கண்காணிப்புப்…

Read More

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி, திமுக எம்பிக்கள் வெளிநடப்புச் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி காவிரியில் தமிழகத்திற்குத் திறக்க வேண்டிய 7,000 கன அடி நீரை விடுவிக்க மறுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்பிக்கள், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். மேலும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், உரிமையையும் காக்க மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக எம்பி…

Read More

திருப்பூர் மாநகரக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவரின் மனைியான ஹேமலதா, போலி வழக்கறிஞரான தனது நண்பர் நாகேந்திர குமாருடன் இணைந்து தனியார் வங்கியில் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளார். செம்பால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட சுமாராக அரை கிலோ எடையுள்ள போலி நகைகளை அந்த வங்கியில் வைத்து இவர்கள் 52 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளனர். பின்னர் அந்த நகைகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வெளியே விற்க முயன்றபோதுதான் அவை முற்றிலும் போலி என்பது தெரியவந்தது. இந்தச் சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சிகரமான முறைகேடு குறித்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், மோசடிக்குத் துணைபோன வங்கி கிளை மேலாளர் மணி, நகை மதிப்பீட்டாளர் சதீஷ்குமார், வங்கி ஊழியர் அபினேஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளரின் மனைவி ஹேமலதா ஆகிய நான்கு பேரைக் மத்திய குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள போலி வழக்கறிஞர் நாகேந்திரனைத் தீவிரமாகத்…

Read More

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும், சுற்றியுள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்திற்குத் துணையாகவும் இருப்பது அமராவதி அணையாகும். ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்த ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் நின்றுபோய் வறண்டு கிடக்கிறது. குறிப்பாக, கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் தடுப்பணைப் பகுதி முழுவதும் தண்ணீர் இன்றி வெறும் மணல் பரப்பாகக் காட்சியளிப்பதை ட்ரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட கழுகுப் பார்வை காட்சிகள் கவலையுடன் வெளிப்படுத்தியுள்ளன. ஆற்றுப் படுகை முழுவதும் தண்ணீர் இல்லாததால், அப்பகுதி தற்போது கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிவரும் இடமாக மாறியுள்ளது. இன்று ஆடிப் பதினெட்டாம் பெருக்கைக் கொண்டாடத் தயாராகிவரும் நிலையில், அமராவதி ஆற்றில் புனித நீராட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் பக்தர்களும், குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்குத் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளனர்.

Read More