Author: Editor web3

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, தமிழக முதல்வர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மாநிலத்திலுள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மாநில அரசு அழைப்பு விடுத்திருந்தது. இருப்பினும், காவிரியரி விவகாரத்தில் இருந்து மக்களைத் திசைதிருப்பவே முதல்வர் இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதாகக் குற்றம்சாட்டியுள்ள திமுக, தற்போதைய சூழலில் இதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கும் தென் மாநிலங்களுக்கும் தொகுதி மறுசீரமைப்பால் எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தாலும், நாளை நடைபெறவிருக்கும் முதல்வர் தலைமையிலான எம்பிக்கள் கூட்டத்தை திமுக எம்பிக்கள் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

காவிரி விவகாரத்தில் இருந்து மக்களை திசைதிருப்பவே முதல்வர் எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தொகுதி மறுசீரமைப்பு மசோதாவே இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை; பிறக்காத குழந்தைக்கு பெயர் சூட்டுவதைப் போல இது உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கும் தென் மாநிலங்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் திமுக மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது. ஆனால், தற்போது மக்கள் குடிநீருக்கே வழியில்லாமல் தவித்து வரும் மேகதாது மற்றும் காவிரிப் பிரச்சனைகள் தான் மிக முக்கியமான அவசரத் தேவையாக உள்ளன. எதிர்க்கட்சியினரும் இது குறித்து சட்டப்பேரவையில் குரல் எழுப்பி அனைத்துப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தற்போதைய இத்தகைய முக்கியப் பிரச்சனைகளை மறைத்துவிட்டு, இன்னும் வராத மசோதாவை மையமாக வைத்து முதல்வர் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுவது வெறும் நாடகமே தவிர வேறில்லை. நாளை…

Read More

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு உரிய மற்றும் நியாயமான நிதிப் பகிர்வை வழங்கக் கோரும் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அவை கூடியதும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அமைச்சர் மரிய வில்சன் இந்தச் சிறப்புத் தீர்மானத்தைச் சபையில் முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி மற்றும் சிறந்த நிதி மேலாண்மை ஆகியவற்றில் தமிழ்நாடு தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருவதாகத் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு வசூலிக்கும் வரிகளுக்கு நமது மாநிலத்தின் பங்களிப்பு மிக அதிகமாக இருப்பதால், மாநிலங்கள் தங்கள் பொறுப்புகளைத் திறம்படச் செயல்படுத்த நியாயமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிதிப் பகிர்வுத் தீர்மானத்திற்கு ஆளுங்கட்சியான…

Read More

புகெட்டிலிருந்து(Phuket) டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் திடீரென ஏற்பட்ட கடுமையான வானிலை மாற்றத்தால் நடுவானில் சுமார் 300 அடி ஆழத்திற்கு திடீரென கீழே சரிந்தது. இந்தச் சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் எனப் பலர் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை இன்று புகெட்டிலிருந்து டெல்லிக்குப் பறந்த AI2379 என்ற ஏர் இந்தியா விமானம், வழக்கமான பயணத்தின்போது எதிர்பாராதவிதமாகச் கடுமையான காற்றுச் சுழலில் சிக்கியதாக விமான நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஃப்ளைட் ரடார் 24’ தரவுகளின்படி, விமானம் திடீரென ஏற்பட்ட கீழ்நோக்கிய காற்றழுத்தம் காரணமாக 300 அடி உயரம் வரை கீழே இறங்கியுள்ளது. புகெட்டிலிருந்து காலை 8:25 மணிக்குக் கிளம்பிய இந்த விமானம், திட்டமிட்டபடி காலை 11:50 மணிக்கு டெல்லியில் பத்திரமாகத் தரையிறங்கியது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர். https://x.com/ANI/status/2084556278526087431? விமானத்தில் பயணம் செய்த பலருக்குச் சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக ஏர்…

Read More

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததும் தேசிய அணிக்கு பயிற்சியாளராக திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ஸ்டோக்ஸ், தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதுடன், பயிற்சியாளர் சான்றிதழையும் பெற்றுள்ளார். நீண்ட கால நோக்கில் பயிற்சியாளர் பணியைத் தொடர விரும்புவதாகக் கூறியுள்ள அவர், ‘பார் தி லவ் ஆஃப் கிரிக்கெட்’ பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசுகையில், தான் விளையாடிக் கொண்டிருக்கும்போதே லெவல் 3 பயிற்சி வகுப்புகளை முடித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், விளையாட்டிலிருந்து விலகாமல் தொடர்ந்து தலைமைப் பொறுப்பில் இருக்க விரும்புவதாகவும், எதிர்காலத்தில் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக மாறுவதே தனது பெருவிருப்பம் என்றும் அவர் வெளிப்படையாகக் கூறினார். ஸ்டோக்கின் ஓய்வுக்குப் பிறகு, ஹாரி ப்ரூக் துணை கேப்டனாகப் பதவியில் இருந்தபோதிலும், அவருக்குப் பதிலாக ஜோ ரூட் இங்கிலாந்து டெஸ்ட்…

Read More

‘100 சதவீதம்’ தூய்மையானது அல்லது இயற்கையானது என்ற வாசகத்தைப் பயன்படுத்தி தேன், பசு நெய் மற்றும் சமையல் எண்ணெய்கள் போன்ற பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு டாபர் இந்தியா நிறுவனத்திற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தடை விதித்துள்ளது; இத்தகைய லேபிளிங் முறை சட்டத்திற்கு எதிரானது என்று அது கூறியுள்ளது. டாபர் நிறுவனத்தின் இணையதளத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் “100% இயற்கை”, “100% தூய்மையானது”, “100% தூய்மை உத்தரவாதம்”, “100% ஆர்கானிக்” மற்றும் “100% இளநீர்” போன்ற மக்களைத் திசைதிருப்பும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக FSSAI தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தத் தடையின் கீழ் தேன், ஆப்பிள் சீடர் வினிகர், எண்ணெய் (Virgin Coconut Oil), நல்லெண்ணெய், பசு நெய், தேங்காய் நீர், தேங்காய் பால் மற்றும் உள்ளிட்ட தயாரிப்புகள் அடங்கும். குறிப்பாக, ‘டாபர் ஹோம்மேட் தேங்காய் பால்’ (Dabur Hommade Coconut Milk) தயாரிப்பு “100%…

Read More

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, சட்டமன்ற கூட்டம் கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்திருப்பது கடும் ஜனநாயக விரோத செயலாகும். ‘ஜனநாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்தாரே தவிர, ஜனநாயகம் என்றால் என்னவென்று கூட முதலமைச்சர் விஜய்க்குத் தெரியவில்லை. அனைத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களையும் கைது செய்துவிட்டு, ஆளில்லா மைதானத்தில் தனியாகப் பந்தாட நினைக்கிறார் முதல்வர். சட்டமன்றத்தில் எதிர்கொள்ளப் பயந்துதான் இந்தத் தந்திரமான கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வராதது குறித்துப் பொதுக்கூட்டத்தில் பேசப்பட்டபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திரிஷா குறித்துக் கேள்வி எழுப்பினார். அதற்கு உதயநிதி பதிலளித்தாரே தவிர, திரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா? கூட்ட நெரிசலில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது இயல்புதான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி காலத்தில்கூட இதுபோன்ற பல விவகாரங்கள் பேசப்பட்டிருக்கின்றனவே தவிர,…

Read More

முதல்வர் விஜய் குறித்த உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்த பேச்சும், அரசின் கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தஞ்சாவூர் போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்ணியமற்றதாகும். இது கண்டிக்கத்தக்கது. துணை முதலமைச்சர் பொறுப்பு வகித்த, எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் கண்ணியமான முறையில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலின்…

Read More

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீர் நீர்வரத்து உயர்வு காரணமாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடகாவின் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டதே இந்த திடீர் உயர்வுக்குக் காரணமாகும். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதேபோல், ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் பாதுகாப்பு அபாயம் காரணமாகப் பரிசல்களை இயக்குவதற்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை இந்தத் தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையைத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

Read More

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பெருவயல் பகுதியில்  வெளுத்துவாங்கும் கனமழையால் பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ஷமீர் என்பவரது வீட்டின் அருகில் அமைக்கப்பட்டிருந்த ஆழமான கிணறு, நிலச்சரிவு மற்றும் தொடர் மழை காரணமாக திடீரென உள்வாங்கிப் பள்ளமானது. இதன் காரணமாக, கிணற்றோடு இணைக்கப்பட்டிருந்த குளியலறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலுமாகச் சரிந்து விழுந்தன. கிணறும் குளியலறையும் திடீரென இடிந்து விழுந்ததால், அந்த வீட்டின் அடித்தளம் பலமிழந்து எப்போது வேண்டுமானாலும் முழுமையாக இடிந்து விழும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தின் போது குளியலறை மற்றும் கிணற்றுப் பகுதி இடிந்து விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரவி, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More