Author: Editor web3

சென்னையில் பள்ளி திறப்பு விழாவின் போது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. பல்லவி புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்குச் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மாநகராட்சி சார்பில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியிலேயே குத்து விளக்கு ஏற்ற சொன்னோம். அப்போது அவர்கள் வெளியே சென்று விட்டனர். இதை அவ்வளவு பெரிய விஷயமாக ஏன் ஆக்க வேண்டும்.  இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு, மாநகராட்சி சார்பில் உரிய மரியாதை நிமித்தமாகவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்தபோதிலும், அவர் வரும் வரை காத்திருந்துதான் நிகழ்ச்சியையே தொடங்கினோம். நான் ரிப்பனை வெட்டும்போது, அவரும் மற்றொரு கத்திரிக்கோலால் ரிப்பனை வெட்டினார். அவர்களை யாரும் அவமதிக்கவோ, அவதூறாகப் பேசவோ இல்லை. அனைத்து இடங்களிலும் வழக்கமான புரோட்டோகால் (அரசு மரபு) படியே நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இரண்டாவது நிகழ்ச்சியில், மேடையில் இருந்த பகுதி செயலாளர் ஏன் மெழுகுவர்த்தியை வாங்குகிறார் என்று தெரியவில்லை. நாங்கள்…

Read More

தமிழக டாஸ்மாக் துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஜூன் 30 ஆம் தேதியுடன் பழைய டாஸ்மாக் பார்களின் டெண்டர் காலம் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து, உரிய நெறிமுறைகள் மற்றும் புதிய வரைமுறைகளைப் பின்பற்றி, தனியார் பார்களுக்கான புதிய டெண்டர்கள் ஒதுக்கப்பட உள்ளன. அதேபோல், டாஸ்மாக் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில், உயர் அதிகாரிகள் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை விரைவில் பெரிய அளவில் பணியிட மாற்றங்களைச் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். மேலும், டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக 4 முக்கியத் திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையிலும், டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்தும் இந்த திட்டங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, தொடர் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து ஒன்று சாலையோர பேக்கரிக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து, பல்லடம் அடுத்த காளிவேலம்பட்டி பிரிவு அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது, பள்ளி மாணவர்களுடன் வந்த தனியார் பள்ளி பேருந்து ஒன்று திடீரென விதிகளுக்கு மாறாக சாலையின் இடதுபுறம் திரும்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தவிர்க்க அரசு பேருந்து ஓட்டுநர் தெய்வம் என்பவர் சமயோசிதமாக வாகனத்தைத் திருப்பியுள்ளார். ஆனால், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த பேக்கரிக்குள் அதிவேகமாகப் புகுந்தது. பேருந்து வருவதைக் கண்டு பேக்கரியில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து சிதறி ஓடியதால் நல்வாய்ப்பாகப் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அரசு பேருந்து பேக்கரிக்குள் புகுந்த இந்த பதைபதைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. தகவலறிந்து…

Read More

தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை அகில இந்தியத் தொகுப்பிற்கு தாராளமாக விட்டுக் கொடுப்பதைத் தடுத்து, அவற்றை மாநில அரசு மருத்துவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் “உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு”களுக்கான 152 இடங்களை “அகில இந்திய தொகுப்பிற்கு” மாற்ற வேண்டும் என மாண்பமை உச்சநீதிமன்றம் 29.05.2026 அன்று உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்நிலையில், தமிழ்வாணி என்பவர் தொடர்ந்த வழக்கில் தங்கள் தலைமையிலான புதிய அரசின் சார்பில் முறையான வாதங்கள் எடுத்து வைக்கப்படாத காரணத்தால் இச்சூழல் உருவாகியுள்ளது என்பது தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கு ஆபத்தாக அமைந்திருக்கிறது. 2025-ஆம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 430 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களுக்கு நடைபெறும் கலந்தாய்வில் உள்ள 215 இடங்கள், பணியில் உள்ள அரசு…

Read More

அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான கல்வி என்பதுதான் தவெக அரசின் முக்கிய நோக்கம்; தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எச்சரித்துள்ளார். சென்னை அரும்பாக்கம் சிஎம்டிஏ குடியிருப்பு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையின் முப்பெரும் விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டார். அப்போது 2026-2027ஆம் கல்வியாண்டு தொடக்கத்தை முன்னிட்டு மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கியதோடு, 21 ஸ்மார்ட் போர்டுகளையும் (Smart Board) தொடங்கி வைத்தார். 10ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மற்றும் 1330 திருக்குறளை ஒப்பித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையையும் பரிசுகளையும் அவர் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்திரமோகன், இயக்குநர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “ஆங்கிலேயர்கள் தங்கள் மொழியை உலக மொழி என்பார்கள், வட இந்தியர்கள் தங்கள் மொழியைத் தேசிய மொழி என்பார்கள். ஆனால்…

Read More

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுகவில் உட்கட்சி ரீதியான களஆய்வுப் பணிகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் கள நிலவரங்கள் மற்றும் வாக்குப்பதிவு தரவுகள் குறித்து தொகுதி வாரியாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 10-ஆம் தேதிக்குள் அனைத்துப் பகுதிகளிலும் முழுமையான களஆய்வை முடித்து, அதற்கான விரிவான அறிக்கையை கட்சித் தலைமையிடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் கறாரான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. களஆய்வின் போது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கீழ்மட்ட மற்றும் நடுத்தர நிர்வாகிகள் தரப்பில், உள்ளூர் நிலவரங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு புகார்களும், அதிருப்திகளும் தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக,…

Read More

தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த தென்மேற்கு பருவமழை, வழக்கமான தேதியிலிருந்து 3 நாட்கள் தாமதமாக இன்று கேரளாவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் அடுத்த சில நாட்களில் பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் கடந்த மாதமே பருவமழைக்கான சாதகமான சூழல் தொடங்கியிருந்தது. இந்நிலையில், இன்று கேரளாவில் பருவமழை முறைப்படி கால்பதித்துள்ளதால், அதன் எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை முதலே பரவலாகச் சாரல் மழை பெய்து வருகிறது. இது பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் இந்த தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு 3 நாட்கள் தாமதமாகத் தொடங்கியுள்ளது. எனினும், வரும் ஜூலை முதல் வாரத்திற்குள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த பருவமழை பரவிவிடும் என்று வானிலை…

Read More

தேர்தலில் யாருக்கும் ஒரு பைசா கூட கொடுக்காமல் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது” என்று திருச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு மாநாட்டில் முதலமைச்சர் விஜய் பெருமிதத்தோடு பேசியிருந்த நிலையில், அதற்கு முற்றிலும் முரணாக அக்கட்சியின் வேட்பாளரே பேசியுள்ள வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி, கூட்டணிக்கட்சி ஆதரவுடன் ஆட்சியைமைத்துள்ளது. ஆட்சியமைக்க உரிமைக்கோரிய நாள் முதலே பல விமர்சனங்களை சந்தித்து வந்தது. அதாவது, குதிரை பேரம் நடத்தி ஆட்சியை பிடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், தற்போது ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்ததால் தான் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. வெற்றி பெற்றார் என்று தவெகவை சேர்ந்த ஓமலூர் தொகுதி வேட்பாளர் அதியமான் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அதாவது, சட்டமன்ற தேர்தலில் சேலம் மேற்குத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு லட்சுமணன் வெற்றி…

Read More

கோடை விடுமுறை நிறைவடைந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 1-ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய கல்வியாண்டை உற்சாகத்துடன் தொடங்கி உள்ளனர். கடந்த கல்வியாண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநிலம் முழுவதும் கடுமையான வெயில் நிலவியதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதி சில நாட்கள் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை அறிவித்தபடி இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதிய வகுப்புகள், புதிய ஆசிரியர்கள் மற்றும் புதிய நண்பர்களை சந்திக்க மாணவர்கள் ஆர்வத்துடன் சென்றனர், இந்தநிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது தொடர்பாக…

Read More

மேட்டூர் அணை திறப்பு மற்றும் ஊரக உள்ளாட்சித் துறையின் செயல்பாடுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று (ஜூன் 4) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உயர்நிலைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் என். ஆனந்த், தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, ஊரக உள்ளாட்சித் துறை சார்ந்த முக்கிய செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் போதிய அளவில் இல்லாததாலும், அணைக்கு வரும் நீரின் வரத்து குறைவாக உள்ளதாலும், திட்டமிட்டபடி ஜூன் 12-ஆம் தேதி அணை திறக்கப்படுவதில் காலதாமதம் ஏற்படலாம் என்று நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணை திறப்பு தள்ளிப்போகும் பட்சத்தில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமும், குறுவை…

Read More