Author: Editor web3
முன்னாள் முதலமைச்சரும், முத்தமிழறிஞருமான கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமத்துவப் பெரியர் முத்தமிழறிஞர் கலைஞர்அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எமது செம்மாந்தவீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். சமூகநீதி மண்ணாய்த் தமிழகத்தைச் சமைத்த மகத்தான கருத்தியல் பேராளுமை கலைஞர். பெரியாரின் கனவை நனவாக்கும் வகையில் சமத்துவபுரம் கண்ட சமூகப்புரட்சியாளர் கலைஞர். உயர்கல்வி மேம்பாடு, தகவல் தொழில் நுட்பம், எளியோருக்கான அதிகாரவலிமை போன்றவற்றை நிலைநாட்டி, புதியதொரு தமிழ்நாட்டைச் செதுக்கிய அவரது போற்றுதலுக்குரிய பங்களிப்பை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்வோம்! என்று பதிவிட்டுள்ளார்.
பிரிட்டனில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வரும் ‘குரூமிங் கேங்க்ஸ்’ (Grooming Gangs) எனப்படும் திட்டமிட்ட பாலியல் வன்கொடுமை கும்பல்களின் அட்டூழியங்கள் குறித்த சாட்சியங்கள், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன. பிரிட்டன் நாடாளுமன்ற சுயேச்சை எம்பியான ருபெர்ட் லோவ், இங்கிலாந்தின் 85-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட தனியார் புலனாய்வு விசாரணையின் மூலம் திரட்டப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்களின் நேரடி வாக்குமூலங்களை நாடாளுமன்றத்தில் வாசித்தார். பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களில் உள்ள சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், தனக்கு 13 வயது இருக்கும்போது இந்த சித்திரவதை தொடங்கியதாகக் கூறிய ஒரு பெண், “கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 600 முதல் 700 வெவ்வேறு ஆண்களால் நான் வன்கொடுமை செய்யப்பட்டேன்” என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். தங்களை நாய்களைப் போலக் கூண்டில் அடைத்து வைத்ததாகவும், சில பெண்களை விலங்குகளை விட்டும் வன்கொடுமை செய்ததாகவும், அதை அங்கிருந்த ஆண்கள்…
உலகெங்கும் நிலவும் பருவநிலை மாற்றங்களைக் கண்காணிக்கும் உலக வானிலை அமைப்பு (WMO), வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலில் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை உருவாவதற்கு 80% வாய்ப்புகள் உள்ளதாகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது வரும் நவம்பர் மாதம் வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் 90%-க்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர், அதன் வழக்கமான வெப்பநிலையை விட மிக அதிகமாக வெப்பமடைவதையே விஞ்ஞானிகள் ‘எல் நினோ’ என்று அழைக்கின்றனர். பொதுவாக 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும் இந்த நிகழ்வு, உலகளாவிய வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு சுழற்சியைப் தலைகீழாக மாற்றி, கடுமையான இயற்கைச் சீற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. இந்தியாவைப் பொறுத்தவரை, ‘எல் நினோ’வின் வருகையானது தென்மேற்குப் பருவமழையைப் பலவீனப்படுத்தி, கடுமையான கோடை வறட்சியை ஏற்படுத்தும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தெற்காசியப் பருவமழைக்காலத்தில், இந்தியாவின்…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, கலைஞருடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதோடு, தன் மீது விமர்சனம் வைத்த திண்டுக்கல் ஐ. லியோனிக்குத் தன் பாணியில் அதிரடியாகப் பதிலடி கொடுத்தார். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவருக்குப் பிரம்மாண்ட சிலை எழுப்பியவர் கலைஞர். தந்தை பெரியாரின் சமூகநீதிக் கனவுகளைத் தன் ஆட்சிக் காலத்தில் நினைவாக்கியவர் அவர். முப்பது ஆண்டுகாலம் அவரால் வளர்க்கப்பட்டவன் நான்; இன்றளவும் எனது நெஞ்சில் இருந்து கலைஞரின் நினைவுகளை யாராலும் அகற்ற முடியாது. அவரது புகழ் என்றும் வளரட்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்திற்கு மதிமுக ஆதரவளிக்கப் போகிறது என்று திண்டுக்கல் ஐ. லியோனி பேசியுள்ளார். தவெக-விற்கு ஆதரவளிப்பது தொடர்பாக…
டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள ஐந்து மாடி தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், தீயில் சிக்கிய 47 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாளவியா நகரின் ஹவுஸ் ராணி (Hauz Rani) பகுதியின் குறுகலான தெருவில் அமைந்துள்ள ‘மிகாசா இன்’ (Micasa Inn) என்ற ஐந்து மாடி ஹோட்டலின் அடித்தளத்தில் உள்ள உணவகத்தில் இன்று காலை சுமார் 8.50 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் ஹோட்டலில் இருந்த பெரும்பாலான விருந்தினர்கள் உறங்கிக் கொண்டிருந்ததால், புகை மூட்டம் மற்றும் தீயின் வீரியத்தை அவர்களால் உடனடியாக உணர முடியாமல் போயுள்ளது. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, சுமார் 25 அறைகளைக் கொண்ட இந்த ஹோட்டலில் 40-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் தங்கியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் என்று கூறப்படுகிறது. தீயின்…
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் மற்றும் எளிய போக்குவரத்து முறையை உலகளவில் ஊக்குவிக்கும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ஆம் தேதி ‘உலக சைக்கிள் தினம்’ (World Bicycle Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், மிதிவண்டி பயன்படுத்துவதால் மனித குலத்திற்கும், நாம் வாழும் பூமிக்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்த ஒரு சிறப்பு விழிப்புணர்வு தொகுப்பு இதுவாகும். இன்றைய நவீன இயந்திர வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு குறைந்துவிட்ட சூழலில், மிதிவண்டி ஓட்டுவது ஒரு சிறந்த மற்றும் எளிமையான உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. தினமும் சைக்கிள் ஓட்டுவது இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, தேவையற்ற கலோரிகளை எரிக்க உதவுகிறது. உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க இது ஒரு சிறந்த வழி. சைக்கிள் ஓட்டும்போது மூளையில் ‘எண்டோர்பின்’ போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரப்பதால், மன அழுத்தம், பதற்றம் நீங்கி மன…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் 103-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திலும், சேப்பாக்கம் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகிலும் அரசியல் முக்கியத்துவமிக்க பல்வேறு தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் திராவிட வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது தமிழக முதல்வர் சமீபத்தில் திருச்சியில் ஆற்றிய உரை அவரது அரசியல் இயலாமையையே காட்டுகிறது என்று கடுமையாக விமர்சித்தார். அதாவது, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கூர்மையான கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், தமிழக முதல்வர் விஜய் இறுக்கத்துடனேயே காணப்பட்டார். அங்கு பதில் சொல்ல முடியாத கோபத்தைத்தான் திருச்சியில் நடைபெற்ற பொதுமேடையில் அவர் கொட்டியுள்ளார். மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணம்…
பல ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகை தந்துள்ள நடிகர் ரஜினிகாந்தைக் காணக் காத்திருந்த ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுக்க முடியாததால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து, ரேடிசன் புளு ஹோட்டலுக்குச் சொந்தமான வாடகை கார் ஒன்றில் தனியாக உதகைக்கு வந்தார். அங்கு, பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்குச் சொந்தமான ‘தி மொனார்க்’ (The Monarch) நட்சத்திர விடுதியில் அவர் தங்கியிருந்தார். ரஜினிகாந்த் உதகையில் தங்கியிருக்கும் தகவல் காட்டுத்தீ போலப் பரவியதை அடுத்து, இன்று அதிகாலை முதலே ஏராளமான ரசிகர்கள் அந்த நட்சத்திர விடுதியின் முன்பு குவியத் தொடங்கினர். தங்கள் அன்புக்குரிய தலைவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துவிட வேண்டும் என அவர்கள் விடுதி மேலாளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் அங்கு சில மணி நேரம் சலசலப்பு நிலவியது. ரசிகர்களின் கூட்டம் அதிகரித்த சூழலில், ரஜினிகாந்த் கர்நாடக மாநிலப் பதிவெண்…
பொதுவாக, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நீண்ட காலமாகத் தங்களுக்கு நெருக்கமாக இருக்கும், தங்களின் உடல்நிலை, தனிப்பட்ட தேவைகள் மற்றும் அன்றாடப் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்த நபர்களைத் தங்களது தனிப்பட்ட பாதுகாவலராக தொடர்ந்து வைத்துக் கொள்வது வழக்கம். முதல்வர் விஜய் அவர்களுக்கும் அவரது நீண்டகாலப் பாதுகாவலரான ஆனந்த் போன்றோர் நிழலாகத் தொடர்வது இந்த அடிப்படையில்தான். இது மாநிலக் காவல் துறையின் மீது நம்பிக்கை இல்லாததால் அல்ல; மாறாக, லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அலைமோதும் கூட்டத்தைக் கையாள்வதில், தலைவரின் அசைவுகளையும் அவசரத் தேவைகளையும் சட்டென்று புரிந்துகொண்டு செயல்பட ஒரு தனிப்பட்ட ஒருங்கிணைப்பாளர் தேவைப்படுவதால் ஆகும். இந்தநிலையில், முதலமைச்சர் விஜய்யின் பாதுகாப்பு குறித்து அதிமுகவின் இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், Core Cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்?…
தமிழ்நாட்டுப் பெண்களின் அவசரப் பாதுகாப்புக்காகத் தமிழக வெற்றிக் கழக அரசால் பிரத்யேகமாகத் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ பிரிவைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கே பாலியல் ரீதியான தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில், சிங்கப்பெண் அதிரடிப்படையிலுள்ள பெண் காவலருக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் காக்கி சட்டை அணிந்த பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சி தான் தூய சக்தியா? என்று கேள்வி எழுப்பி இது என்ன ஒரு வெட்கக்கேடு என கடுமையாக விமர்சித்து உள்ளார். “நான் உங்கள் அண்ணன்” என மேடைக்கு மேடை முழங்கும் முதல்வர் விஜய் அவர்கள், முதலில்…