Author: Editor web3
ஐபிஎல் 2026 சீசனின் சாம்பியன் பட்டத்தை வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வரலாறு படைத்துள்ளது. 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் RCB வீரர்களும், ரசிகர்களும் கொண்டாட்டத்தில் மிதந்து வருகின்றனர். இந்நிலையில், மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு RCB வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினர். அங்கு அவர்களுக்கு மேள தாளங்கள் மற்றும் தாரை தப்பட்டைகளுடன் அதிரடியான முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹோட்டல் நுழைவாயிலில் மியூசிக் அதிர, RCB அணியின் ஆல்-ரவுண்டர் க்ருணால் பாண்டியா ஐபிஎல் கோப்பையைத் தன் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு செம மாஸாக குத்தாட்டம் போடத் தொடங்கினார். https://x.com/RCBTweets/status/2061225572387484028? இதனைப் பார்த்து உற்சாகமடைந்த ரன் மெஷின் விராட் கோலி, உடனே க்ருணால் பாண்டியாவோடு இணைந்து கொண்டார். இருவரும் சேர்ந்து கோப்பையுடன் போட்ட மரண மாஸ் குத்தாட்டம் அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது. க்ருணால் பாண்டியா கோப்பையை தலையில் வைத்து ஆட, விராட் கோலி அவருடன் இணைந்து…
ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி முடிவடைந்துள்ளது. நேற்றைய இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தில் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசனில் பல்வேறு சாதனைகள் தகர்க்கப்பட்டு புதிய மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ஒரேயொரு வீரர் மட்டுமே முதன்மை சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்து ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் தனித்துவமான சாதனையைப் படைத்தவராக சஞ்சு சாம்சன் உருவெடுத்துள்ளார். நடப்பு சீசனில் அதிக சதங்கள் (2 சதங்கள்) அடித்த வீரர்களின் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் CSK அணியின் சார்பாக படைக்கப்பட்ட மிக முக்கிய தனிநபர் சாதனையாக இது பார்க்கப்படுகிறது. IPL 2026 சீசனின் பிற முக்கிய சாதனைகள்: அதிக ரன்கள் (ஆரஞ்சு கேப்): வைபவ் சூர்யவன்ஷி (RR) – 776 ரன்கள்…
தூத்துக்குடி அருகே பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதைத் தட்டி கேட்டதற்காக, போதை கும்பல் ஒன்று பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய துணிகரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள கீழ அரசடி பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. நேற்று மாலை இங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களில் ஒருவர், அங்குள்ள கழிப்பறையைப் பயன்படுத்தாமல், வாகனங்கள் எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு அருகிலேயே சிறுநீர் கழித்துள்ளார். இதனைப் பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர், பொது இடத்தில் இதுபோன்று செய்ய வேண்டாம் என சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். பின்னர், சுமார் ஒரு மணி நேரம் கழித்து மது மற்றும் கஞ்சா போதையில் மேலும் 10 பேருடன் பயங்கர ஆயுதங்களுடன் அந்த பங்க்கிற்குள் நுழைந்துள்ளனர். கண் இமைக்கும் நேரத்திற்குள் அங்கிருந்த ஊழியர்களைக் கட்டை, கத்தி மற்றும்…
கோடை விடுமுறை முடிவடைந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து இருப்பிடங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கான விமான டிக்கெட் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்து பயணிகளுக்குப் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள சூழலில், பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு கிடைக்காதப் பொதுமக்கள் பலர் விமானப் பயணத்தை நாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் விமானக் கட்டணங்கள் வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென அதிகரித்துள்ளன. மதுரையில் இருந்து சென்னைக்கான விமான கட்டணம் ரூ.17,303 ஆகவும், திருச்சியில் இருந்து சென்னை வருவதற்கான கட்டணம் ரூ.14,404 ஆகவும் உயர்ந்துள்ளது. கோவையில் இருந்து சென்னை செல்ல ரூ.16,504 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லவும் கட்டணம் அதிகரித்துள்ளது. மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வருவதற்கு மட்டுமின்றி, சென்னையில் இருந்து பிற முக்கிய ஊர்களுக்குச் செல்வதற்கான விமானக் கட்டணங்களும்…
தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிர்வாகத் தூய்மையை மேம்படுத்தும் நோக்கில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனிவரும் நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் எந்த நேரத்திலும் எதிர்பாராத ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை எவ்விதப் பணிச்சுமையோ, தாமதமோ இன்றி நேர்மையான முறையில் பெற்றிட வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இது தொடர்பாகப் பேசிய அமைச்சர், “நிர்வாகச் சீர்திருத்தங்களை உறுதி செய்ய நானே நேரடியாகப் பல இடங்களுக்கு அடிக்கடி ஆய்வு செய்ய வருவேன்” என்று அதிகாரிகளிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். லஞ்ச ஊழலற்ற, முறைகேடுகளுக்கு இடமில்லாத ஒரு தூய்மையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதே தற்போதைய தமிழக அரசின் முதன்மைக் கொள்கை என்றும், அதற்குப் பாதகம் விளைவிப்பவர்கள் மீது லஞ்ச ஒழிப்புச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் இந்த…
மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் சிறுவன் உட்பட மூன்று பேரை வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அறுபத்துமூவர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், கவியரசன் (14) என்ற மகனும் உள்ளனர். இன்று காலை கற்பகம் வீட்டின் அருகே உள்ள பொதுக் குழாயில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்வீட்டில் வசிக்கும் திமுக பெண் கவுன்சிலர் ஜெயலட்சுமி முருகனின் மகன் அசோக் (25) என்பவருடன் பழைய பகை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அசோக் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கற்பகத்தை கொடூரமாக வெட்டியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது கணவர் செல்வம் மற்றும் மகன் கவியரசன் ஆகியோரையும் அசோக் சரமாரியாக வெட்டியுள்ளார்.…
இமாச்சலப் பிரதேசத்தில் உணவுப் பொருள் (குர்குரே) மூச்சுக்குழாயில் அடைத்துக் கொண்டதால் ஏற்பட்ட கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக, 28 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம், சோலன் மாவட்டத்தின் அர்கி பகுதிக்குட்பட்ட ‘தால்’ (Tal) கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த் சர்மா (28). இவர் வீட்டில் தின்பண்டம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அதன் சிறிய துண்டு அவரது மூச்சுக்குழாயில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூச்சு விட முடியாமல் துடிதுடித்துள்ளார். ஹேமந்த் சர்மாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சுல்தான்பூரில் உள்ள எம்எம்யு (MMU Sultanpur) மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக சண்டிகரில் உள்ள புகழ்பெற்ற பிஜிஐ (PGI Chandigarh) மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அவரைப் பரிந்துரைத்தனர். அங்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை…
இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 500 அடி ஆழப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர், இமாச்சலப் பிரதேசத்தின் அழகிய பனிமலைகளைக் கண்டு ரசிப்பதற்காகச் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள மலைப் பாதையில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், மலைப் பாதையோரம் இருந்த சுமார் 500 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகீழாக உருண்டு விழுந்தது. இந்தக் கோர விபத்தில் வாகனத்தில் பயணித்த 8 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு சிறு குழந்தைகளும் அடங்குவர். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், காவல்துறையினரும் மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பள்ளம் மிகவும் ஆழமாக இருந்ததால், நீண்ட…
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சண்டிதலா காவல் நிலையம் முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி தலையில் பலத்த காயமடைந்துள்ளார். https://x.com/ANI/status/2060977248484946043? திரணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சண்டிதலா காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளிக்க டிஎம்சி தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக அவர்கள் காவல் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த போது, அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் டிஎம்சிக்கு எதிராக “திருடன், திருடன்” என முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, திடீரென அது வன்முறையாக மாறியது. இந்த தள்ளுமுள்ளு மற்றும் மோதலின் போது, டிஎம்சி எம்பி கல்யாண் பானர்ஜியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி…
கன்னியாகுமரியில் தண்ணீர் நிரப்பிய பக்கெட்டில் தவறி விழுந்த ஒரு வயது ஆண் குழந்தை, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த சூழால் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். கூலித் தொழிலாளியான இவருக்கு ஆஷா என்ற மனைவியும், தர்வின் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று வழக்கம் போல சுனில் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், ஆஷா வீட்டில் சமையல் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இவர்களது குழந்தை தர்வின் வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்பகுதியில் துணி துவைப்பதற்காகப் பெரிய வாளி ஒன்றில் நிறையத் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தர்வின், எதிர்பாராத விதமாகத் தண்ணீர் வாளியின் உள்ளே தலைகீழாகத் தவறி விழுந்துள்ளான். சமையல் வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்த தாய் ஆஷா, தன் குழந்தை தண்ணீருக்குள் மூழ்கியிருப்பதை கண்டு உறைந்து போய் அலறியுள்ளார். சத்தம் கேட்டு…