Author: Editor web3
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் டிஃப்பனி டிரம்ப், தனது கணவர் மைக்கேல் ஃபூலோஸுடன் இந்தியாவுக்குத் தனிப்பட்ட முறையில் சுற்றுலா வந்துள்ளார். டெல்லியில் உள்ள அக்சர்தாம் கோயிலுக்குச் சென்றிருந்த அவர்கள், இன்று உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ராவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தாஜ்மஹாலுக்கு வருகை தந்து அதனை வியந்து ரசித்தனர். டிஃப்பனி டிரம்ப் தனது கணவருடன் தாஜ்மஹாலின் அழகைக் கண்டு ரசிக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அங்கு சுமார் ஒரு மணி நேரம் வரை செலவிட்ட தம்பதியினர், தாஜ்மஹாலின் வரலாறு மற்றும் கட்டிடக்கலை குறித்து வழிகாட்டியிடம் ஆர்வமாகக் கேட்டறிந்ததோடு, அதன் பின்னணியில் அழகிய புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். ஆக்ராவில் தங்கியிருக்கும் அவர்கள், அடுத்ததாக ராஜஸ்தான் மாநிலத்திற்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயர்மட்ட விஐபி வருகையை முன்னிட்டு விமான நிலையம் முதல் தாஜ்மகஹால் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு Corridor அமைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்…
சமீபத்தில் வெளியாகி இளைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மலையாளத் திரைப்படம் ‘பிரேமலு’. இத்திரைப்படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் (Premalu 2) உருவாக்கப்படும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில், ‘பிரேமலு 2’ திரைப்படம் கைவிடப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து படத்தின் நாயகன் நடிகர் நஸ்லென் கூறும்போது, “இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதும் போது சில சிக்கல்கள் மற்றும் சவால்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக ‘பிரேமலு 2’ தற்போதைக்கு கைவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக வெளியான ‘பிரேமலு’, வெறும் ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, உலகம் முழுவதும் சுமார் ரூ.136 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் உருவான இப்படத்தில் நஸ்லென், மமிதா பைஜு, ஷியாம் மோகன், சங்கீத் பிரதாப்…
ரயில் பயணிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் ஒரு சிறப்பான உள்கட்டமைப்பு மேம்பாட்டைச் செய்துள்ளது. கடந்த நிதியாண்டில், இக்கோட்டத்திற்கு உட்பட்ட 37 முக்கிய ரயில் நிலையங்களில் மொத்தம் 81 தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் (WVMs) பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போதைய கடும் கோடைகாலத்தில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தினமும் பயணிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கும், நீண்ட தூரப் பயணிகளுக்கும் இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மூர் மார்க்கெட் வளாகம், சென்னை சென்ட்ரல், தாம்பரம், காட்பாடி, அரக்கோணம், ஆவடி, திருவள்ளூர், பெரம்பூர், எழும்பூர் வழித்தடத்தில் உள்ள சென்னை கோட்டை, பார்க் மற்றும் கடற்கரை, திருமயிலை உள்ளிட்ட 37 முக்கிய நிலையங்களில் இந்த இயந்திரங்கள் பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பயணிகள் வெளியில் விற்கப்படும் விலையுயர்ந்த பாட்டில் தண்ணீரை நம்பியிருக்க வேண்டிய அவசியம் குறைந்துள்ளது. மேலும், பயணிகள் தங்கள் சொந்த பாட்டில்களைப்…
அடுத்த 4 – 5 நாள்களில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் சில பகுதிகளுக்கு நுழைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேகமாக முன்னேறி வருகிறது. இன்றைய நிலவரப்படி (மே 30), பருவமழையானது தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகள், லட்சத்தீவு, குமரிக்கடல் பகுதிகள், மற்றும் தென்மேற்கு, தென்கிழக்கு, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளுடன் வடகிழக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகளிலும் மேலும் பலத்த முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த 4 முதல் 5 நாட்களில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைந்து முன்னேறுவதற்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால் அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் மேலும் சில இடங்களுக்கும், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கும், அத்துடன் தென்மேற்கு, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு, வடகிழக்கு வங்காள விரிகுடாவின் எஞ்சிய பகுதிகளுக்கும்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்குத் தம்பதி இருவர் தங்களது ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, வாகனத்தின் உள்ளே இருந்து திடீரென நல்ல பாம்பு ஒன்று ‘உஸ் உஸ்’ என சீறியபடி வெளியே தலைகாட்டியுள்ளது. சத்தம் கேட்டு நிலைதடுமாறிய தம்பதியினர், உடனடியாக ஸ்கூட்டியைக் கீழே போட்டுவிட்டு தப்பியோடினர். இதனால் அங்கே பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கியது. மக்கள் கூட்டத்தைப் பார்த்து மிரண்ட அந்தப் பாம்பு, அருகில் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது சட்டென ஏறியது. இதைக் கண்டு பேருந்திற்குள் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அந்த 6 அடி நீள நல்ல பாம்பைப் லாவகமாகப் பிடித்துச் சென்றனர். இச்சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையப் பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தின் நீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டு யானையை, வனத்துறையினர் பத்திரமாக மீட்டு காட்டிற்குள் அனுப்பினர். அந்தியூர் வனச்சரகம் முத்தரசன்குட்டை மணிகாரத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரது விவசாய நிலத்தில் நீர் சேகரிப்பு தொட்டி ஒன்று உள்ளது. இதில் எதிர்பாராத விதமாகக் காட்டு யானை ஒன்று தவறி உள்ளே விழுந்து தவித்தது. இதுகுறித்து தகவலறிந்த அந்தியூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நீர்த் தொட்டியின் ஒரு பக்கச் சுவரை இடித்து, யானை மேலே ஏறி வருவதற்கு வசதியாகப் பாதை அமைக்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த யானை எவ்வித காயமும் இன்றி தொட்டியில் இருந்து பத்திரமாக வெளியேறி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இந்த இக்கட்டான சூழலில் விரைந்து செயல்பட்டு, யானையை மீட்ட அந்தியூர் வனச்சரக அலுவலர் எம். நந்தினி, வனவர்…
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அஜித்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட மாரம்பட்டி பகுதியில், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் ஒன்று, முறையான இணைப்புச் சாலை இல்லாததால் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கிக் கிடக்கிறது. கானம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் ஊத்தங்கரை நகருக்குச் செல்ல 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதற்குத் தீர்வாகப் பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, கடந்த 2022-23 நிதியாண்டில் தமிழக அரசு சார்பில் நபிராம்பட்டி – விளாநத்தம் சாலையில், பாம்பாற்றின் குறுக்கே சுமார் 9.39 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. பாலம் கட்டி முடிக்கப்பட்ட போதிலும், அதனை இணைக்கும் சுமார் 7 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை முற்றிலும் தார் பெயர்ந்து, மிக மோசமாகக் காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்கள்…
ஊழல் என்பதே இனி நடந்துவிடக்கூடாது என்பதில் தீவிர கண்காணிப்புடன் இருப்பதாகவும் அவ்வாறு எங்கேயும் ஊழல் நடந்தால் அதனை பொதுமக்கள் சுட்டிக்காட்டுமாறு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் நேர்மையான மற்றும் தூய்மையான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் முதன்மை நோக்கமாகும். அதற்கேற்பவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவதே அரசின் நோக்கம் என்று குறிப்பிட்டார். ஊழல் நடந்ததற்கான தகவல் உண்மையாக இருந்தால், அதில் தனது நேரடி கவனத்துடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், இந்தியாவில் ஒரு புதிய இயக்கம் தொடங்கப்பட்டு இரண்டே ஆண்டுகளில், பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். மக்கள் என்றென்றைக்கும் முதலமைச்சராக இருக்கப்போகும் விஜய் அவர்களுக்குத் தங்களின் வாக்குகளை அன்றே அளித்துவிட்டார்கள் என்று தெரிவித்தார். வருவாய்த்துறையின் வரவு-செலவு தொடர்பான புள்ளிவிவரங்களை முழுமையாகச் சமர்ப்பிக்கக் குறைந்தது…
கோவையில் டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் நேரில் பெற்றுக்கொண்டார். பின்னர் ஊழியர்கள் மத்தியில் பேசிய அவர், டாஸ்மாக் துறைக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை மாற்றி, அதனை ஒரு கண்ணியமான துறையாக மாற்ற அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், வரும் ஜூன் மாதத்திற்குள் காலி மதுபாட்டில்களை ஊழியர்களே நேரடியாகக் கையில் வாங்கும் நிலை முழுமையாகத் தவிர்க்கப்படும். இதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்துப் பேசப்பட்டு வருகிறது. பாட்டில்களில் ஊழியர்கள் தனியாக ஸ்டிக்கர் ஒட்டும் முறை ஒழிக்கப்பட்டு, மதுபானத் தயாரிப்பின் போதே ஸ்டிக்கர் ஒட்டி வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மதுபாட்டில்களுக்குக் கூடுதலாகப் பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதை ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பலர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். பாட்டிலுக்கான டெபாசிட் தொகை மட்டுமே வாங்கப்பட வேண்டும்; அதற்கு மேல் வசூலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.…