Author: Editor web3

கேரளாவில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள வி.டி. சதீசன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது. கேரள சட்டப்பேரவையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆற்றிய அரசின் கொள்கை விளக்க உரையில் இந்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அரசின் ‘மாதவிடாய் கண்ணியம்’ (Project Menstrual Dignity) திட்டத்தின் கீழ், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களை பெண்களுக்கு உகந்ததாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவிகளுக்கு மாதம் 3 நாட்கள் வரை மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில், விடுமுறையால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, வார இறுதி நாட்களில் ‘சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகப்பேறு நலச் சட்டத்தின்படி, 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அனைத்து பொது அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப  பூங்காக்கள்…

Read More

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்களை விளாசிய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 9 சதங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ஜோஸ் பட்லர் 7 சதங்களுடனும், கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தலா 6 சதங்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான குவாலிஃபையர்-2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி தனது 5-வது ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் சஞ்சு சாம்சனுடன் (5 சதங்கள்) இணைந்து சுப்மன் கில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக ஷேன் வாட்சன் (4), டேவிட் வார்னர் (4), சாய் சுதர்சன் (3), குவிண்டன் டி காக் (3) மற்றும் ஏபி டி…

Read More

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். டெல்லி ஐஐடி-யில் நடைபெற்ற ‘அமெரிக்கா – இந்தியா டிரஸ்ட் முன்முயற்சி’ (US-India Trust Initiative) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் இறுதி கட்டப் பணிகளை முடிப்பதற்காக, கடந்த வாரம் இந்தியக் குழுவினர் வாஷிங்டன் சென்றிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, மீதமுள்ள 1 சதவீதப் பேச்சுவார்த்தையை முழுமையாக முடித்து ஒப்பந்தத்தை இறுதி செய்ய, அடுத்த வாரம் அமெரிக்க உயர் மட்டக் குழு இந்தியா வரவுள்ளது. அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகும் என்று எதிர்பார்ப்பதாகத் தூதர் செர்ஜியோ கோர் குறிப்பிட்டுள்ளார். இந்த வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எனக் கூறிய அவர், குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு,…

Read More

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்.ஆர் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூர்யவன்ஷி மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சீசன் முழுவதும் ஆர்.ஆர் அணிக்காக சூர்யவன்ஷி தனது அசாத்திய திறமையையும், கடின உழைப்பையும் வெளிப்படுத்தி வந்துள்ளார். குஜராத் அணிக்கு எதிரான குவாலிபையர் 2 நேற்றைய முக்கியமான போட்டியிலும், சூர்யவன்ஷி தூணாக நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அபாரமாக விளையாடிய அவர் 96 ரன்கள் குவித்து சதத்தை நழுவவிட்டாலும், அணியின் வெற்றிக்கு கடைசி வரை வழிவகுத்தார். எனினும், மற்ற வீரர்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் ஆர்.ஆர் அணி இறுதியில் தோல்வியைத் தழுவியது. முழுத் திறமையையும் வெளிப்படுத்தியும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தில், போட்டியின் முடிவில் சூர்யவன்ஷி மனமுடைந்து அழுதார். சக வீரர்கள் அவரைத் தேற்ற முயன்ற போதிலும், அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.…

Read More

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ், ஏழை எளிய மக்களுக்கான வீட்டு வசதியை மேம்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக ரூ.10,021 கோடி நிதியை மத்திய அரசு அதிரடியாக விடுவித்துள்ளது. மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் 12 மாநிலங்கள் நேரடியாகப் பயன்பெறவுள்ளன. நாடு முழுவதும் உள்ள வீடற்ற மற்றும் தகுதியான கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வீடுகளைக் கட்டித் தரும் நோக்கில் PMAY-G திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக, வரும் 2029-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ‘அனைவருக்கும் வீடு’ என்ற இலக்கை முழுமையாக எட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த நிதி தற்போது மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விடுவித்துள்ள இந்த ரூ.10,021 கோடி நிதியானது தமிழ்நாடு,…

Read More

நடப்பு ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சாம்பியன் பட்டத்திற்காக மோதவுள்ளது குஜராத். முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியின் அதிரடி ஆட்டம் (96 ரன்கள்) மற்றும் இறுதி ஓவர்களில் டோனோவன் பெரைராவின் சிக்ஸர் மழையால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ரஷித் கான் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 27 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடினமான 215 ரன்கள் என்ற இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு, கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஜோடி கனவுத்தொடக்கத்தை தந்தது. ஜோப்ரா…

Read More

நடப்பு ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிரடி சதம் விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றிலேயே பல்வேறு புதிய மைல்கற்களை அவர் எட்டியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகளில் எந்தவொரு அணியின் கேப்டனும் சதம் அடித்ததில்லை. நேற்று நடைபெற்ற போட்டியில் பொறுப்புடன் ஆடிய ஷுப்மன் கில், இக்கட்டான சூழலில் சதம் அடித்து, “ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் சதம் அடித்த முதல் கேப்டன்” என்ற வரலாற்றுச் சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார். ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 215 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் அணிக்கு, ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கில், வெறும் 47 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். இது ஐபிஎல் பிளே ஆஃப்…

Read More

கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கிரிஷ் சோடங்கர்  அகில இந்திய காங்கிரஸ் தலைமையால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைவர் அமித் பட்கருக்குப் பதிலாக அவர் இந்த பொறுப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில பொறுப்பாளராக கிரிஷ் சோடங்கர் செயல்பட்டு வந்தார். தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற அரசியல் நகர்வுகளில், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதிலும், “ஆட்சியில் பங்கு” என்ற முழக்கத்தை முன்னெடுத்து தவெக பக்கமாக காங்கிரஸை நகர்த்துவதிலும் இவரே முக்கிய மூளையாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 தசாப்தங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் பங்குபெற இவரது சாணக்கியத்தனமான பேச்சுவார்த்தைகளே முக்கியக் காரணமாக அமைந்தன. இன்னும் ஓராண்டில் கோவா மாநிலத்தில் சட்டமன்றப் பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், கிரிஷ் சோடங்கரின் இந்த நியமனம் கோவா காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சுறுசுறுப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும்,…

Read More

கும்பகோணத்தில் சாலையின் குறுக்கே இடையூறாக பேனர் வைப்பதைத் தட்டி கேட்ட போக்குவரத்து ரோந்து காவலரைத் தாக்கி, அவரது கையை உடைத்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த இருவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சாவூர் – மயிலாடுதுறை சாலையை இணைக்கும் முக்கியப் பகுதியான கும்பகோணம் நால்ரோடு சந்திப்பில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கோவில் திருவிழாவிற்காகப் பேனர்கள் வைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்திற்கு முற்றிலும் இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையின் குறுக்கே இந்தப் பேனர்கள் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தேவேந்திரன், போக்குவரத்தைச் சரிசெய்யும் நோக்கில் சாலையின் குறுக்கே இருந்த பேனர்களை அகற்றுமாறு அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார். மேலும், பேனர்களை அகற்ற அவரே முயன்றதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தவெக வார்டு உறுப்பினர்களான அருண் மற்றும் காளி  ஆகிய இரு இளைஞர்களும் காவலர் தேவேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத்…

Read More

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட உதவி அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளுக்கான பொருளாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அமைச்சர் நிர்மல்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, மாநிலத்தில் விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.பெண் ஊழியர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகளை மகளிர் நீதிமன்றங்களில் விரைந்து முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை பெற்றுத் தர தேவையான அனைத்து சட்ட…

Read More