Author: Editor web3
குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலி!. உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்!. குவியும் பாராட்டு!
பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த இந்த காலகட்டத்திலும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மையின் இலக்கணமாகச் செயல்பட்டுள்ளார் கோவையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவர். குப்பையில் தவறுதலாக விழுந்த தங்கச் சங்கிலியை மீட்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்த அவரது மனிதநேயச் செயல் ஒட்டுமொத்த கோவை மாநகராட்சிக்கும் பெருமை சேர்த்துள்ளது. கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 69-ல் உள்ளது பாரதி பார்க் 4-வது வீதி. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், தங்கள் வீட்டில் இருந்த குப்பைகளை அகற்றித் தூய்மைப்படுத்தும் போது, எதிர்பாராத விதமாகத் தங்களின் 3 பவுன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியையும் குப்பையோடு குப்பையாக வீசியுள்ளனர். அப்பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சித் தூய்மைப் பணியாளர் சக்திவேல், தான் சேகரித்த குப்பைகளைக் கையாளும் போது அதற்குள் ஏதோ மின்னுவதைக் கண்டுள்ளார். உற்றுப் பார்த்தபோது அது 3 பவுன் தங்கச் சங்கிலி என்பது தெரியவந்தது. பேராசைப்படாமல், அந்த நகையைத் தன்வசப்படுத்திக்…
அதிமுக அணிகள் இணைந்துவிட்டதாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே, கட்சியில் அடுத்த பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சமாதானம் செய்யச் சென்ற அதிமுக மூத்த நிர்வாகிகள், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் சோகத்துடன் திரும்பியதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுகவில் தான் தொடரப்போவதில்லை என்பதில் சி.வி.சண்முகம் மிகத் திட்டவட்டமாக இருப்பதாகத் தெரிகிறது. தன்னைச் சந்திக்க வந்த சமரசக் குழுவினரிடம், “நான் எடுத்த முடிவிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை” என்று அவர் கூறிவிட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சி.வி.சண்முகத்திடம் ஒரு சமரசத் திட்டத்தை முன்வைத்துள்ளனர். அதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்குள் நாம் முறைப்படி இணைந்தாலும், கட்சிக்குள்ளேயே நாம் ஒரு தனி அணியாக செயல்படலாம் என்று கூறியுள்ளனர். ஆனால், இந்த உள்கட்சி ஃபார்முலாவிற்கு சி.வி.சண்முகம் சற்றும் உடன்படவில்லை எனத்…
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதிவேகமாக பரவி வரும் மாற்று வகை எபோலா வைரஸைக் கட்டுப்படுத்த, ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள் புதிய தடுப்பூசி ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். காங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) எனப்படும் புதிய மரபணு மாற்றமடைந்த எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி காங்கோவில் இதுவரை 204 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்று அண்டை நாடான தெற்கு சூடான் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது முற்றிலும் புதிய வகை உருமாறிய வைரஸ் என்பதால், இதற்கென பிரத்யேகமான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது முறையான மருத்துவ சிகிச்சைகளோ இதுவரை உலகளவில் இல்லாமல் இருந்தது. காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் எபோலா பாதிப்பு கட்டுப்பாடின்றி அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த மாத 17-ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவித்தது. மேலும்,…
ஆன்மீகப் பயணமாகத் திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநிலம் காளஹஸ்தியைச் சேர்ந்த இளம்பெண், அங்குள்ள கிழக்கு காவல் நிலைய காவலர்களான சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜ் ஆகியோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த காவல் துறைக்கே கறையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த மனுவை விரிவாக விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூலை மாதத்திற்குள் முழுமையாக முடித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது. தனக்கு நடந்த கொடூரத்திற்கு நீதி கோரி மனுதாக்கல் செய்துள்ள அந்த இளம்பெண், தனது மனுவில் ஒட்டுமொத்தப் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். தமிழகம் முழுவதும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும், எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பிற்கும் இடையே நிலவி வந்த உட்கட்சி மோதல் தற்போது சுமுக முடிவுக்கு வந்துள்ளது. இரு அணிகளும் இணைந்ததைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்தனர். ஆனால் சி.வி.சண்முகம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, கொறடா விவகாரம் தொடர்பாக இரு தரப்பும் சபாநாயகரிடம் அளித்திருந்த கடிதங்களை முறைப்படி திரும்பப் பெற்றுக்கொண்டதாக அறிவித்தார். அதாவது, நாங்கள் அனைவரும் பேரவைத் தலைவரை நேரில் சந்தித்தோம். முன்னதாக, எங்களுக்குள் ஏற்பட்ட சூழலால் ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தோம். அப்போது எங்கள் மீது நடவடிக்கை எடுத்து, 25 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி அவர்கள் சபாநாயகரிடம் மனு கொடுத்திருந்தார். அதேபோல் எங்கள் தரப்பிலும் மனு கொடுக்கப்பட்டது. தற்போது இரு தரப்பும் சுமுகமாகப் பேசியதை அடுத்து, அந்த இரண்டு தகுதிநீக்க மனுக்களையும் சபாநாயகரிடம் இருந்து…
பொள்ளாச்சி அருகே விவசாயத் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த கன்றுக்குட்டியைக் கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த துரை என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் ஆழியார் புளியங்கண்டி பகுதியில் உள்ளது. இந்தத் தோட்டத்தில் புளியங்கண்டியைச் சேர்ந்த மைக்கேல் (50) என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் விவசாயப் பணிகளுடன் சொந்தமாக ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகிறார். வழக்கம்போல் நேற்று மாலை கால்நடைகளைத் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து வைத்துவிட்டு மைக்கேல் வீட்டிற்குச் சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது, பட்டியில் மாடு மட்டுமே இருந்துள்ளது; கன்றுக்குட்டியைக் காணவில்லை. இதனால் தேடிப் பார்த்தபோது, பட்டியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கன்றுக்குட்டி பாதியளவு விலங்கால் உண்ணப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஆழியார் வனத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ…
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று முன்னாள் காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சூலூர் பகுதியில் சிறுமிக்கு நிகழ்ந்த இந்த கொடூரச் சம்பவத்தின் தீவிரத்தன்மையைக் காவல் துறை அதிகாரிகள் முழுமையாக உணர வேண்டும். சாதாரணப் பிரிவோடு நிறுத்திவிடாமல், இத்தகைய மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை ஐ.ஜி ஆகிய உயர்மட்ட அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.” குற்றங்களை நிரூபிப்பதற்கான மருத்துவப் பரிசோதனைகளை விரைவாகச் செய்து முடிப்பது இத்தகைய வழக்குகளில் மிக முக்கியமானது. எனவே, சென்னையில் இருப்பது போன்ற அதிநவீன மருத்துவப் பரிசோதனைக்கான டி.என்.ஏ ஆய்வகம் ஒன்றை மேற்கு மண்டல மக்களின் நலன் கருதி கோவையிலும் அமைப்பதற்குத்…
கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘மாசப்பாடி’ (Masapadi) என்று அழைக்கப்படும் சி.எம்.ஆர்.எல் (CMRL) நிதிப் பரிவர்த்தனை முறைகேடு புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பினராயி விஜயனின் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் இல்லங்கள் உட்பட மொத்தம் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், CMRL நிறுவன மேலாண் இயக்குநர் சசிதரன் கர்த்தா மற்றும் கேரள முன்னாள் அமைச்சர் முகமது ரியாஸ் ஆகியோரின் இடங்களிலும் இந்தச் சோதனை விரிவுபடுத்தப்பட்டது. பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்குச் சொந்தமான ‘எக்ஸாலாஜிக்’ நிறுவனம், எவ்வித சேவைகளும் வழங்காமல் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடமிருந்து ரூ.1.72 கோடி பெற்றதாக எழுந்த புகாரை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்குக் கேரள உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிய அடுத்த நாளே…
தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் இருப்பாரா அல்லது ஆளுநர் இருப்பாரா என்ற விவாதத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ள கருத்து புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனிடம், பல்கலைக்கழக வேந்தர் பதவி குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், “எங்களது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், கொள்கை ரீதியான முடிவுகளை முதலமைச்சரே எடுப்பார். கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நடைமுறைகளை நாங்களும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்கிற கட்டாயம் எங்களுக்குக் கிடையாது. முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் உயர்கல்வித் துறையின் வழிகாட்டுதல்களைப் பரிசீலித்து முறைப்படுத்துவார். முதலமைச்சரின் ஆலோசனையின்படி இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றார். அதாவது, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியின் முக்கிய குடியிருப்பு பகுதியான முத்துநகரில், பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீர் சாலைகளில் ஆறாக ஓடி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான துர்நாற்றம் மற்றும் நோய் பரவும் அச்சத்தில் தவித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் முத்துநகர் பகுதியில், கடந்த சில நாட்களாகப் பாதாள சாக்கடைக் குழாய்களில் கடுமையான அடைப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் முறையற்ற பராமரிப்பு காரணமாக, கழிவுநீர் வெளியேற வழியின்றி ஆங்காங்கே உள்ள மேன்ஹோல் வழியாகப் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது இந்தச் சாக்கடை நீர் முத்துநகரின் முக்கியச் சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் போல் தேங்கியுள்ளதால், ஒட்டுமொத்தப் பகுதியிலும் கடுமையான துர்நாற்றத்தில் வீசுகிறது. சாலையெங்கும் தேங்கிக் கிடக்கும் அசுத்த நீரால் அந்த வார்டு முழுவதும் கொசுத்தொல்லை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா மற்றும் மர்மக் காய்ச்சல் போன்ற ஆபத்தான தொற்றுநோய்கள் பரவும்…