Author: Editor web3
தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ திரைப்படங்கள் மைல்கல்லாக அமைந்திருந்தாலும், 1986-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு என்று தனித்துவமான இடம் உண்டு. உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி, தயாரித்து, நடித்த இத்திரைப்படம் வெளியாகி தற்போது 40 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. இவ்விழாவை முன்னிட்டு, கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் சிறப்புப் பகிர்வு ஒன்றைப் பகிர்ந்துள்ளது. விக்ரம் திரைப்படத்தின் 40-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் #40yearsofVikram மற்றும் #Vikram40 ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “தொலைநோக்கு பார்வையால் செதுக்கப்பட்ட ஒரு பாரம்பரியம், தலைமுறைகள் கடந்தும் நினைவுகூரப்படுகிறது” தமிழ் சினிமாவின் முதல் அதிநவீன ஸ்பை த்ரில்லர் படமாகக் கருதப்படும் ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மேலும், கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார். இந்த 40 ஆண்டுக்கால கொண்டாட்டப் பதிவில் உலகநாயகன் கமல்ஹாசன்,…
புதுச்சேரி காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீகயிலாசநாதர் சுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆற்றங்கரை ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா கடந்த 26-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் முதற்கால யாகசாலை பூஜைகளுடன் விமரிசையாகத் தொடங்கியது. இன்று அதிகாலை ஆறாம்கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, மகாபூர்ணாகுதியும் மகாதீபாராதனையும் காட்டப்பட்டன. தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் மங்கல வாத்தியங்கள் முழங்க மங்களகரமாக ஏந்தி வந்து, ஆலயப் பிரகாரத்தை வலம் வந்தனர். பின்னர், ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய ராஜகோபுரம், மூலவர் மற்றும் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் உள்ளிட்ட விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதிகளில் சிறப்பு மகாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது கும்பாபிஷேக புனிதநீர் குழாய்கள் மூலம் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…
தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி காமராஜை நேற்று இரவு திமுக ஆதரவாளர்கள் கொடூரமாகத் தாக்கி இருக்கின்றனர். இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில், தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் மீது நேற்று இரவு திமுக ஆதரவாளர்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது ஆட்டோ ரிக்ஷா சேதப்படுத்தப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அவரது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை குறித்து திமுக மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த அவதூறு கருத்துகளை கண்டித்து நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்டதற்கான அரசியல் பழிவாங்கலாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது. அமைதியான போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. கருத்து வேறுபாட்டுக்கு வன்முறையால் பதிலளிப்பது, மக்கள் தேர்தலில் நிராகரித்த பிறகு பொறுமையை இழந்து வரும் ஒரு கட்சியின் அகந்தையையும் சகிப்புத்தன்மையின்மையையும் வெளிப்படுத்துகிறது. அரசியல் ரீதியாக…
சொந்த கட்சி மீதே காங்கிரஸ் MP ஜோதிமணி ஊழல் புகாரை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X பதிவில் சட்டமன்றத் தேர்தலில் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. வேட்பாளர்களைத் தேர்வு செய்த பிறகு அதற்குத் தகுந்தது போல தொகுதிகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன. சர்வே என்ற பெயரில் மிகபெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. https://x.com/jothims/status/2060215449120612584 கட்சிக்கு நீண்டகாலம் பணியாற்றியவர்களை,வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, புதியவர்கள்,வெற்றி வாய்ப்பில்லாத பலருக்கு தொகுதிகள் கேட்டுப்பெறப்பட்டு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேரதலில் போட்டியிட வாய்ப்பு பெற்ற சிலர் தேர்தல் முடிந்து சில நாட்களுக்குள் கட்சியில் இருந்து விலகுகின்றனர் அல்லது ஒதுங்கிவிட்டனர். இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு வழங்கியது யார்? எதனடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது? தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர்…
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், மாற்றுப் பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 159 அரசு மதுபானக் கடைகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கடந்த மூன்று நாட்களாகப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மாநில வாணிபக் கழக அலுவலகம் முன்பாக அவர்கள் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர்களின் இந்தத் தொடர் கடையடைப்புப் போராட்டத்தால், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் அரசுக்குச் சுமார் 10 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வருவாய் இழப்பைத் தடுக்கும் நோக்கில், இன்று மாலை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மற்றும் இடைநிலை அதிகாரிகள் நேரடியாகக் களத்தில் இறங்கி, நாமக்கல் பகுதியில் உள்ள 5 கடைகளைத் திறந்து மது விற்பனையைத் தொடங்கினர். கடைகள் திறக்கப்பட்ட விபரம் தெரிந்ததும், மதுப்பிரியர்கள் சாலையில் நீண்ட வரிசையில் சாரை சாரையாகக் திரண்டனர். இரண்டு…
இந்தியாவில் இந்த ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட சற்று முன்கூட்டியே தொடங்கியுள்ளது. கடந்த மே 16-ம் தேதியே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகளில் நுழைந்த பருவமழை, தற்போது அடுத்தடுத்த பகுதிகளுக்கு விறுவிறுப்பாக பரவி வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து, பருவமழைக்கான சாதகமான சூழல் உருவாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்றைய நிலவரப்படி தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், லட்சத்தீவுப் பகுதி, தெற்கு மற்றும் கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் பருவமழை முழுமையாகப் பரவியுள்ளது. மேலும், அந்தமான் கடல் பகுதி மற்றும் ஒட்டுமொத்த அந்தமான் நிக்கோபார் தீவுகள் முழுவதையும் உள்ளடக்கி, பருவமழை தீவிரமாக நிலைபெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக, வரும் 2 முதல் 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறிச் செல்வதற்கு மிகச் சாதகமான சூழல் நிலவுகிறது. குறிப்பாக, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு…
கர்நாடக முதலமைச்சர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது போடப்பட்ட அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, கட்சித் தலைமை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சித்தராமையா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்படும் வரை அவர் இடைக்கால முதலமைச்சராகத் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சித்தராமையாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக துணை முதலமைச்சராக இருந்த டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்க உள்ளார். காங்கிரஸ் மேலிடத்தின் ஒப்புதலோடு அவர் புதிய முதலமைச்சராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது பதவியேற்பு விழா வரும் ஜூன் 1-ம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடைபெற விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புதிய முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்க உள்ள நிலையில், கர்நாடக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்ய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய அமைச்சர்களில் சிலரின்…
தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு, அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 90 சதவீத அதிமுக நிர்வாகிகள் தங்களின் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். இது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசிய அவர் உதயகுமார், அதிமுக தொண்டர்களைத் தங்கள் பக்கம் இழுக்கத் தொடர்ந்து முயற்சிப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் பலவீனத்தையே காட்டுகிறது” என்று விமர்சித்துள்ளார். மேலும், “நடிகர் விஜய்யின் மக்கள் செல்வாக்கு இப்போது சரிந்துவிட்டதா? அல்லது இருக்கும் செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் அதிமுகவினரைக் கூவி கூவி அழைக்கிறீர்களா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் வழியில் வந்த விசுவாசமிக்க தொண்டர்களை, பதவிகளைக் காட்டி விலை பேச முயல்வது அரசியல் நாகரிகம் கிடையாது என்று சாடிய அவர், அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் வரலாற்றில்…
அண்மைக்காலமாக உள்நாட்டுப் போட்டிகளில் அதிரடியாக விளையாடி கவனம் ஈர்த்து வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை, இப்போதே அவசரப்பட்டு இந்திய அணியில் சேர்க்க வேண்டாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார். திறமையான இளம் வீரர்களை மிக விரைவாக சர்வதேச அரங்கிற்குள் கொண்டு வருவது அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தேர்வுக்குழுவினர் இதில் நிதானம் காட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே இந்திய அணியில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடி வரும் வீரர்களின் இடத்தை பறிப்பது முறையல்ல என்றும் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பாகப் பேசிய அவர், தற்போது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து நிலையான இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில், இவர்களை நீக்கிவிட்டு சூர்யவன்ஷியை அணியில் சேர்ப்பது ஆரோக்கியமான முடிவாக இருக்காது…
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, நேற்று சற்று குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்களின் காரணமாக, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,600-க்கும், சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1,16,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலகளாவிய சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பதால், உள்ளூர் சந்தையிலும் வரும் நாட்களில் இதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது; அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.290-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ. 2,90,000க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் விலை உயர்வு நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.