Author: Editor web3

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், திமுக மத்திய மற்றும் வடக்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கழக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேரு, சமீபத்திய தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு விரிவான ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இந்த கூட்டத்தில், ஜூன் 3-ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழகங்களில் கட்சித் கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். மேலும், கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளைச் சமூக வலைதளங்களில் குறும்படங்களாக  பதிவிட்டு இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கே.என்.நேருவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், இவர்களை நியமித்த கழகத் தலைவருக்கு நன்றி தெரிவித்து…

Read More

ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் கட்டளைக்கிணங்க தனது ஒரே மகன் இஸ்மாயீலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபி அவர்களின் உன்னதமான இறைபக்தியையும், தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இறைநம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு, மனிதநேயம் ஆகிய உயரிய விழுமியங்களை மனிதகுலத்திற்கு உணர்த்தும் புனிதப் பெருநாளாக பக்ரீத் திகழ்கிறது. ஏழை, எளிய மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும், சமூகத்தில் அன்பும், சமத்துவமும் நிலைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் பக்ரீத் திருநாளில், சமுதாயத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அனைவருக்கும் எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை…

Read More

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பல மாநிலங்களில் தற்போது கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்துப் பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். https://x.com/narendramodi/status/2059507227510399462?t=Un8z2IShKQoAzP5J8MxJwA&s=08 அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வருகிறது; அதனுடன் தொடர்புடைய பல சவால்களையும் நாம் எதிர்கொண்டு வருகிறோம். இந்த சுட்டெரிக்கும் கோடை வெப்பம் நம் அனைவரையும் கடுமையாகப் பாதிக்கிறது. எனவே, பொதுமக்கள் முடிந்தவரை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து போதுமான அளவு தண்ணீர் குடித்து, உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மறக்காமல் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள்.…

Read More

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத ஒரு பொன்னான நாள் மே 27, 2018. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு, சென்னை அணி மீண்டும் ஐபிஎல் களத்திற்குள் நுழைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது. 2018-ம் ஆண்டு ஏலத்திற்குப் பிறகு, சென்னை அணியில் முதிய வீரர்களே அதிகம் இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் ‘டாடீஸ் ஆர்மி’ (Daddy’s Army) எனப் பலராலும் கேலி செய்யப்பட்டது. ஆனால், “அனுபவத்திற்கு நிகர் எதுவுமில்லை” என்பதை நிரூபிக்கும் வகையில், தோனியின் மஞ்சள் படை களமிறங்கியது. தொடக்க ஆட்டத்திலேயே தனது பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அதிரடியாகத் தொடரைத் தொடங்கியது. அந்த சீசன் முழுவதும் சிஎஸ்கே வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் விஸ்வரூபம் எடுத்தனர். ‘சின்னத் தலா’ சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடுவின் அதிரடி ஆட்டம், ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் மேஜிக், டூபிளெசிஸின் நிதானம் என…

Read More

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு இபிஎஸ் மற்றும் எஸ்பி.வேலுமணி தலைமையில் அதிமுக இரண்டாக பிரிந்தது. இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சிவி.சண்முகம் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் தரப்பினர் 25 எம்எல்ஏ-க்கள் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே இரு தரப்புக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. நான்கு எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவுக்குப் பிறகு, தற்போது அதிமுக ஒன்றிணைந்துள்ளது. நேற்று (மே 26) அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வீட்டில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் இரு பிரிவினரும் ஒன்றாக இணைவது தான் அதிமுகவிற்கு நல்லது என்பதை உணர்ந்து, தற்போது ஒன்றிணைந்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக ஐடி விங், அதிமுகவின் எஃகு கோட்டையை இனி யாராலும் பிரிக்க முடியாது என பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், எனக்கு பின்னாலும்…

Read More

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் 62-வது நினைவு தினம் இன்று (மே 27) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சாந்தி வனத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் நேருவின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்த  நாளில், ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேருவின் பங்களிப்பை நினைவுகூர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருஜிக்கு என் இதயப்பூர்வமான அஞ்சலிகள். நவீன இந்தியாவிற்கான அசைக்க முடியாத அடித்தளத்தை அமைத்த அவர், அனைவரையும் உள்ளடக்கிய, இணக்கமான மற்றும் முற்போக்கான தேசத்தை உருவாக்குவதற்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.…

Read More

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான இறுதிப் கட்டப் போட்டிகள் தற்பொழுது தொடங்கியுள்ள நிலையில், இன்றைய குவாலிஃபையர் 1 போட்டி குறித்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2026 தொடரின் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச் சுற்று இன்று தர்மசாலாவில் உள்ள ஹெச்பிசிஏ (HPCA) மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மெகா பலப்பரீட்சையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் மோதவிருக்கின்றன. இருப்பினும், தர்மசாலாவில் இன்று பலத்த மழை பெய்ய 80 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கைகள் தெரிவிப்பதால், இப்போட்டி தடையின்றி நடக்குமா என்ற பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து, ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாக ரத்து செய்யப்பட்டால், ஐபிஎல் விதிமுறைப்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். நடப்புத் தொடரின் லீக் சுற்றுகளின் முடிவில் ஆர்சிபி மற்றும்…

Read More

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 4-ஆம் தேதி புதன்கிழமை அன்று  திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, 2026-2027 கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பில், 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 4-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளி திறப்பு தேதியை மாற்றக் கோரி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வந்தன. வெவ்வேறு வகுப்புகளில் பிள்ளைகள் படிக்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்கவும், நிர்வாக வசதிக்காகவும் அனைத்து வகுப்புகளையும் ஒரே நாளில் திறக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், ஜூன் முதல் வாரத்தில் நிலவக்கூடிய பருவமழைக்கு முந்தைய வானிலை மாற்றங்கள், பரவலான மழைப்பொழிவு, ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் தாக்கம் குறித்தும் அரசு ஆலோசித்தது. இதனுடன், பள்ளிகள் திறக்கப்படுவதற்கு…

Read More

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உயிரிழந்த ஒருவரின் உடலை பிணவறையில் எலிகள் கடித்துக் குதறியதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரைச் சேர்ந்த 55 வயதான கோவிந்தராஜ் என்பவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையின் வழக்கமான நடைமுறைகளின்படி அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அங்கிருக்கும் பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இன்று காலை, முறைப்படியான அனைத்து ஆவணங்களையும் முடித்துவிட்டு கோவிந்தராஜின் உடலைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் பிணவறைக்குச் சென்றுள்ளனர். அங்கு அவரது உடலை வாங்கிப் பார்த்தபோது அவர்கள் முற்றிலும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பிணவறை ஊழியர்களின் அலட்சியப் போக்கு காரணமாக, அங்கு வைக்கப்பட்டிருந்த கோவிந்தராஜின் உடலை எலிகள் கூட்டம்…

Read More

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாவிட்டால் கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் ஸ்டாக் தீர்ந்துவிடும் நிலை ஏற்படும். அனைத்தையும் மத்திய அரசு பேலன்ஸ் செய்து வருகிறது” என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் விலை உயர்வு அனைத்து இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மத்திய அரசுக்குத் தெரியும். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த விலை உயர்வைத் தாங்கிக் கொண்டு, மக்கள் தங்களது செலவுகளை முடிந்தவரை கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். 150 ரூபாய் வரை விலை ஏறும் என்று மக்களைப் பயமுறுத்தாதீர்கள். அதைக் கட்டுப்படுத்தவே முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஒருவேளை இந்த விலை உயர்வை ஏற்றாமல் இருந்தால், அடுத்த ஒரே வாரத்தில் ஸ்டாக் இல்லாமல் போய், கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலை வந்துவிடும். இந்த அரசு…

Read More