Author: Editor web3
அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவும் நிலையில், எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வருகின்றனர். இதற்கு இபிஎஸ் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தவெக ஐடி விங்க் தனது எக்ஸ் பக்கத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தஙகளின் ராஜினாமா கடிதத்தை “தலைமைச் செயலகத்தில்” சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத ஒருவர், ஏற்கனவே பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில் சட்டமன்றச் செயலகத்திற்குத்தான் (Secretariat) வர வேண்டும். அதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளர வேண்டியது.. தொடர் தோல்விகளால் “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்யத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது! ஒரு பலவீனமான தலைமை, தன்…
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51-வது கூட்டம், டெல்லியில் இன்று (மே 26) பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெற உள்ளது. மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேகதாது அணை தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என 2025ம் ஆண்டு நவம்பரில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்குப் போதுமான முகாந்திரம் ஏதும் இல்லை எனக் கூறி தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை திட்ட விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மட்டுமே கர்நாடக அரசுக்கு ஒன்றிய நீர்வள ஆணையம் அனுமதித்துள்ளது என்று கூறி தமிழக அரசு தொடர்ந்த…
அரபிக்கடலில் நிலவும் காற்று சுழற்சியின் காரணமாக, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ஆம் தேதி தொடங்குவது வழக்கம். ஆனால், தற்போதைய வானிலை சூழலின்படி இம்முறை இரண்டு நாட்கள் தாமதமாக, ஜூன் 3-ஆம் தேதியை ஒட்டி பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். பருவமழை தாமதமாக தொடங்கினாலும் மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஜூன் 5-ஆம் தேதிக்கு மேல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நல்ல மழையைக் கொடுக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தனியார் வானிலை ஆய்வாளர் தாமதம் ஏற்படும் என கணித்திருந்தாலும், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என கணித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே மே 26-ஆம் தேதி வாக்கில் கேரளாவில் தொடங்கும் என…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் ஒரு மாணவன் இவ்வளவு கொடூரமான முறையில் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையையும், ஆழ்ந்த கவலையையும் அளிக்கிறது. இளைஞர்களின் எதிர்காலத்தையே முற்றிலுமாகச் சீரழிக்கும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனிவரும் காலங்களில் மீண்டும் நடைபெறாத வகையில், நம் சமூகத்தில் அமைதியும் மனிதநேயமும் வலுப்பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது தற்போதைய அவசியமாக உள்ளது. இக்கொடூர சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைக் காவல்துறை மிக விரைவாகக் கைது செய்ய வேண்டும். மேலும்,…
மேகதாது அணை விவகாரத்தில் தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுத்திட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாகக் கர்நாடக அரசு பூமிபூஜை நடத்தத் திட்டமிட்டுள்ள சூழலில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகளின் நலனைக் காக்கவும் தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணையானது உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது என்பதால், இத்திட்டத்தை எதிர்த்து 30.11.2018 மற்றும் 07.06.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 13.11.2025 அன்று இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியையும் அளிக்கவில்லை என்றும், இத்திட்டம் தொடக்க நிலையில் தான் உள்ளது என்றும் தெரிவித்தது. மேலும், இத்திட்டம் உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்பிற்கு உட்பட்டதா இல்லையா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக் குழுமம்தான் தீர்மானிக்க முடியும்…
சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மாவட்ட மருந்து கிடங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மருந்துகளின் தரம், இருப்பு மற்றும் காலாவதி தேதிகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தாரேஸ் அகமது மற்றும் உயர் அதிகாரிகள் இந்த ஆய்வில் உடனிருந்தனர். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் எவ்வளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்பதை ஆன்லைன் மூலமாகவே துல்லியமாகத் தெரிந்து கொள்ளும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. மேற்காசியப் போர்ச் சூழலால் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால், அதனைச் சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். திருச்சி செவிலியர் மாணவி மரணம்…
தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, பணவீக்க நாயகன் (Inflation Man) மோடி மீண்டும் தனது வேலையைக் காட்டிவிட்டார். மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து சத்தமில்லாமல் பணத்தைப் பறிப்பதற்காகவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தவணை முறையில் உயர்த்தி வருகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் ஒரு கடுமையான பொருளாதாரப் புயல் வீசப்போகிறது என்று நான் பல மாதங்களாகவே எச்சரித்து வருகிறேன். ஆனால் பிரதமர் மோடியோ, எப்போதுமே செய்வது போல அப்போதும் தேர்தல் பிரச்சாரங்களில் மட்டுமே பிஸியாக இருந்தார். தற்போது தேர்தல் முடிவடைந்த அடுத்த கணமே, பெட்ரோல் மற்றும் டீசல் விலை 8 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இத்துடன் நின்றுவிடப் போவதில்லை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கப் போகிறது.…
மயிலாடுதுறை அருகே உள்ள கடலங்குடி கிராமத்தில், 100 வயதைத் தொட்ட அம்பிகை என்ற பாட்டி, தனது எள்ளுப் பேத்தி உள்ளிட்ட 44 வாரிசுகள் சூழ கேக் வெட்டிப் பிறந்தநாளைக் கொண்டாடிய நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது மாரிமுத்து என்பவரின் மனைவியான அம்பிகை பாட்டிக்கு இன்றுடன் 100 வயது நிறைவடைகிறது. இதைக் குடும்பத்தினர் ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாடத் திட்டமிட்டனர். இதற்காகப் பாட்டியின் 3 மகன்கள், 3 மகள்கள், 17 பேரன்-பேத்திகள், 20 கொள்ளுப் பேரன்-பேத்திகள் மற்றும் ஒரு எள்ளுப் பேத்தி என ஒட்டுமொத்தமாக 44 சொந்தங்களும் ஒரே இடத்தில் திரண்டனர். பாட்டியின் நீண்ட ஆயுளுக்காகக் குடும்பத்தினர் முறைப்படி ‘ஆயுள் விருத்தி ஹோமம்’ நடத்திச் சிறப்பு வழிபாடுகளைச் செய்தனர். அதனைத் தொடர்ந்து, 100-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் பாட்டி அம்பிகை கேக் வெட்டினார். சூழ்ந்திருந்த வாரிசுகள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு பாட்டிக்குக் கேக் ஊட்டி, அவரிடம் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அப்போது…
திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களின் தரம் மற்றும் அதன் விபரங்கள் குறித்து அவர் எழுப்பிய அதிரடி கேள்வி அங்கிருந்த ஊழியர்களை நிலைகுலையச் செய்துள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள பிரசாத விற்பனை நிலையத்திற்குச் சென்ற அமைச்சர், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிரசாதங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வு செய்தார். அப்போது, சில பிரசாத பாக்கெட்டுகளில் அது தயாரிக்கப்பட்ட தேதியோ அல்லது காலாவதியாகும் தேதியோ குறிப்பிடப்படாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி அதிகாரிகளைக் கடிந்துகொண்டார். தொடர்ந்து அங்கிருந்த முறுக்கு பாக்கெட் ஒன்றை எடுத்துப் பார்த்தபோது, அதில் தயாரிப்பு தேதி அச்சிடப்பட்டிருந்தது. உடனே அந்த ஊழியர்களைப் பார்த்த அமைச்சர், “இந்தத் தேதியில்தான் இந்த முறுக்கு தயாரிக்கப்பட்டது என்பதை யார் உறுதிப்படுத்தியது? இதற்கான சான்று எங்கே?” என்று யாரும் எதிர்பாராத ஒரு நறுக் கேள்வியைக் கேட்டார். அமைச்சரின் இந்தத் திடீர்…
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (மே 25) தலைமைச் செயலகத்தில் உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை, சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோருடன் முதல்வர் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், கடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாகப் வழக்குப்பதிவு செய்து, அதனை விரைவாக விசாரணை நடத்தி, நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். வழக்குகளை முறையாக நடத்தி, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தருவதுதான், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், அவர்களைத் தடுக்கும் விதமாகவும் அமையும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு, சமூகத்தில் இதுகுறித்த விழிப்புணர்வை போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும். இக்கூட்டத்தில்…